அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -5)

சுகபோகங்களில் திளைக்கவில்லை

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?
 
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். நூல் : புகாரி 5386, 5415
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். 
நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

குழந்தை பாக்கியம் அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ {100}فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ {101}
37:100. என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
37:101. அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்.
இப்ராஹீம்(அலை) அவர்கள் நீண்ட காலம் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் முதிர்ந்த வயது வரை அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது அதுவரை அவர்கள் குழந்தை இல்லாததுப் பற்றி எவ்வித வருத்தமும் பட வில்லை அல்லாஹ் நாடியப் பிரகாரம் நாடியவருக்கு குழந்தைகளை கொடுப்பான் நம்முடைய விஷயத்தில் அல்லாஹ்வுடைய நாட்டம் எப்படி இருக்கிறதோ அவ்வாறே நடக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்
42:49. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
42:50. அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திருமணமும் செய்திருந்தார்கள் ஆனால் இளமைப் பருவத்தில் தூக்கி கொஞ்சுவதற்கு குழந்தை இல்லை இவ்வளவுக்கும் குழந்தை பாக்கியத்தை கை வசத்தில் வைத்துள்ள அல்லாஹ்வின் உற்ற தோழராகவும் இருந்தார்கள், இறந்தோர் எவ்வாறு உயிர்ப்பிக்கப் படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக அல்லாஹ்விடம் கூறி அல்லாஹ்வும் அவர்களுக்கு அதை செய்து காட்டி அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு விருப்பமான நேசராகத் திகழ்ந்தார்கள்.

வெள்ளி, 30 நவம்பர், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -4)

உடுத்தி மகிழவில்லை

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன. 
மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார். நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.நூல் : புகாரி 1277, 2093, 5810

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
(அல்குர்ஆன் 2:208)

பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏதோ ஒப்பு சப்புக்காக இஸ்லாமிய கடமைகளில் ஒன்றிரண்டைப் பின்பற்றி விட்டு மற்றவற்றில் தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று தான் வரதட்சணை! இந்த வரதட்சணை மற்றும் அதனால் ஏற்படும் சமூகக் கொடுமைகளை எதிர்த்து, தவ்ஹீது ஜமாஅத் போரிடுவது போன்று வேறெந்த ஜமாஅத்தும் போரிடவில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

எத்தனையோ இளைஞர்கள் இந்தப் பிரச்சாரத்தால் கவரப்பட்டு, மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன் வந்தது, இன்னும் முடித்துக் கொண்டிருப்பது, ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள் தாங்கள் பெண் வீட்டில் வாங்கிய பொருட்களைத் திருப்பிக் கொடுப்பது போன்ற காரியங்களெல்லாம் நடப்பது ஒரு சரித்திர மாற்றமாகும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மறுமை பயம் தான்! அந்த மறுமை பயத்தைப் பிரச்சாரத்தின் போது ஊட்டியதால் தான் இந்த மாற்றமும் மறுமலர்ச்சியும்!

இதனுடைய முன்னேற்றம் தான் வரதட்சணை திருமணத்தை மக்கள் புறக்கணிக்க முன்வந்த காரியம்! எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சொந்த சகோதரர்களின் திருமணத்தைக் கூட புறக்கணித்து விட்டு, சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் இந்தப் போரட்ட உணர்வு, புரட்சித் தீ தொடர்ந்து பற்றி எரியுமானால் இன்ஷா அல்லாஹ் பெருமளவில் இந்த வரதட்சணை எனும் கொடுமையை சுட்டுப் பொசுக்கலாம். ஆனால் இதை ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களே சரியாகப் பேணுவது கிடையாது.இந்த வரதட்சணை ஏற்படுத்திய மோசமான விளைவுகளைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்குத் தீமை என்று வெளிப்படையாகத் தெரியும் விஷயம் தான் வரதட்சணை!

திங்கள், 26 நவம்பர், 2012

தெருமுனைப் பிரச்சாரம்

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆயங்குடி கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் கடந்த வெள்ளியன்று (23.11.12) மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.முஸ்லிம்களும், சில பிறமதத்தவர்களும் ஒன்றாக வசிக்கும் இந்த பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது இதுவே முதல் முறை அல்ஹம்துலில்லாஹ்.மின்சாரம்  இல்லாத அந்த நேரத்திலும், ஆயங்குடி தவ்ஹீத் பள்ளியின் இமாம்,  முஹம்மத் அவர்கள் தெளிவான முறையில், ஆனித்தரமாக தங்கள் உரையை நிகழ்த்தினார்கள்.எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..!

சத்தியத்தின் முகம்

“தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?” “உண்மை இல்லை” – காலித் இப்னுவலீத் (ரலி) பதில் பகர்ந்தார்கள்.

“அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?”

-மேற்கண்டகேள்விகளைக் கேட்டது கிறிஸ்தவப் படையைச் சேர்ந்த ஜூர்ஜா என்பவர்.

இடம்: யர்முக் யுத்தம்.

அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா, முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று கோரினார். ஜூர்ஜாவை காலித் அவர்கள் சந்தித்தார். ஜூர்ஜா பேச ஆரம்பித்தார்.

“காலித்! தாங்கள் உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். காரணம், தாங்கள் சுதந்திர மனிதர். சுதந்திர மனிதர்கள் பொய் சொல்வதில்லை. தாங்கள் ஏமாற்றவும் கூடாது. காரணம் கண்ணியமிக்கவர்கள் ஏமாற்றமாட்டார்கள்.”

தாங்கள் என்ன வேண்டுமானலும் கேட்கலாம் என்றபொருளில் காலித் (ரலி) ஜூர்ஜாவைப் பார்த்தார். காலித் (ரலி) அவர்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம் என்பதுதான் ஜூர்ஜாவின் முதல் கேள்வியாக இருந்தது.

வியாழன், 1 நவம்பர், 2012

குர்ஆனின் சிறப்புகள்!


காலமாற்றங்கள் அல்குர்ஆனை காணடிக்க முடியவில்லை. எல்லா காலங்களையும் வென்றதாக எக்காலத்துக்கும் உகந்ததாக திருமறைக்குர்ஆன் ஜீவனோடு பிரகாசிக்கின்றது. விஞ்ஞானயுகம், கம்ப்யூட்டர்யுகம் என்றெல்லாம் ஏதேதோ யுகங்கள் மாறிமாறி வந்தாலும் அந்த யுகங்களால் குர்ஆனை பொய்ப்பிக்க முடிவதில்லை. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கியருளப்பட்ட மகத்தான நுண்ணறிவாளனாகிய அல்லாஹ்வின் வாக்காகிய இந்தக் குர்ஆனை மெய்ப்படுத்தும் சேவையைத்தான் செய்துவருகின்றன.

உலகில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் திருமறைக் குர்ஆனுக்கு எந்த பாதிப்பையும் இதுநாள்வரை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு கொள்கையைக் கொண்டவர் அரசுக்கட்டிலில் ஏறினால் தனக்கு வேண்டாத, எதிரான கொள்கையையும் அது சம்பந்தமானவைகளையும் அழித்து விடுவதோடு அவற்றை பின்பற்றும் மக்களையும்; கேவலப்படுத்தி விடுவர். ஆனால் அப்படிப்பட்ட அவர்களால் திருக்குர்ஆனை ஒன்றும் செய்யமுடியவில்லை. 

இன்றைக்கு உலகிலிருக்கும் வல்லரசுகள் இஸ்லாத்தையும், அதைப் பின்பற்றும் மக்களையும் தீவிரவாதிகளாக, தீண்டத்தகாதவர்களாக சித்தரித்த போதும் திருமறைக் குர்ஆனை அவர்களால் காயப்படுத்த முடியவில்லை. மாறாக கலங்கியிருக்கும்; தன் சமுதாய மக்களை இன்றும் அது காத்து நிற்கும் அரணாக இருப்பதுடன், களங்கம் சுமத்தும் வல்லரசுகளுக்கு கண்ணியமிக்க பதிலடி கொடுத்து கதிகலங்கச் செய்கிறது. தானும் தன்னை உண்மையாகப் பின்பற்றும் மக்களும் அறவழியில் நிலைத்திருப்பவர்கள் என்று உலக அரசாங்கங்களுக்கு ஓங்கி உரத்துச் சொல்கிறது இந்த திருமறைக் குர்ஆன். இதற்காக அதற்கு எந்தவொரு அரசாங்கத்தின் துணையோ, படைபலமோ ஆதரவாக இல்லை. இதிலிருந்தே குர்ஆன் வல்லமையும், புகழுக்குமுரிய அல்லாஹ்வின் வாக்கு என்பதற்கு வலுவான அத்தாட்சியல்லவா?! 

வல்ல ரஹ்மான் இறக்கியருளிய அல்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன்படி செயல்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ வெறும் பெயர் தாங்கிகளாகவே இருந்து வருகின்றார்கள். அப்படி இருப்பவர்கள் அந்தத் தன்மையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்! 

புதன், 31 அக்டோபர், 2012

ஹஜ்ஜுப் பெருநாள்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் பேரருளால் 27.10.2012 அன்று 
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயங்குடி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.ஆண்கள் பள்ளிவாசல் சாலையிலும் பெண்கள் பள்ளியின் வெளி வராந்தாவிலும் தங்கள் தொழுகையை நிறைவேற்றினர்.

14 மாடுகள் அறுக்கப்பட்டு, இறைச்சி பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது, சுமார் ஏழை 100 மக்களுக்கும் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.....!
வெள்ளி, 5 அக்டோபர், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -3)


சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்ததுஅவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள்ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம். 
ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரணமாகவே மக்கள் கட்டுப்படுவார்கள்முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள்மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள்ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும்அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும்நாட்டையே ஆளும்தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.யாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால்ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.
இதனால்நபிகள் நாயகத்தின் நடைஉடைபாவணையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பெற்றிருந்தார்கள்.கேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும்அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அபாயம்...!செயற்கை முடிச்சாயம்....!!


ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
டை எனும் சொல் இறப்பு எனும் சொல்லையும் குறிக்க பயன்படுகிறது, எனவேதான் கலரிங் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். தலைமுடியை கருப்பாக்கவும், கலரிங் செய்யவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விற்பனை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப விளம்பரங்களும் ஊடகங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. டை அடிக்காவிட்டால் அங்கிள் என்று கூப்பிடுவதும், டை அடித்து முடியை கருப்பாக வைத்திருந்தால் ரொமான்ஸ் லுக் விடுவதுமாய் விளம்பரம் செய்யப்படுகிறது.
கருப்பு முடிக்கு ஆசைப்பட்டு உபயோகிப்படும் டை நம் உயிருக்கே உலை வைக்கின்றது என்ற உண்மை அதனை உபயோகிக்கும் பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு அலர்ஜியில் தொடங்கியில் புற்றுநோயில் முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

புதன், 19 செப்டம்பர், 2012

குடும்பக்கட்டுப்பாடு

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது.இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறதுமுஸ்லிமல்லாதவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வரும் போது முஸ்லிம்கள் மட்டும் மக்கள்தொகையைப் பெருக்கி பெரும்பான்மையாகி வருகின்றனர்நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றனர்.


இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் குற்றச்சாட்டைப் பல வழிகளில் அலசிப்பார்க்க வேண்டும்.மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு மற்றும் இடப் பற்றாக்குறையும் வறுமையும் ஏற்படும் என்ற வாதம் சரியானதா என்பதை முதலில் பார்ப்போம்.
வறுமையும் உணவுப் பற்றாக்குறையும் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த கால கட்டங்களிலும் உலகெங்கும் இருந்துள்ளனஇன்று உலகில் வாழும் மக்கள் தொகையை 500 கோடியிலிருந்து வெறும் ஐந்து கோடியாகக் குறைத்தாலும் வயிற்றுக்கு உணவு கிடைக்காதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்இதுதான் எதார்த்த நிலையாகும்.
மக்கள் தொகை குறைவாகவே இருந்த காலத்திலும் மக்கள் தொகை மிகுதியாக உள்ள காலத்திலும் மக்கள் அனைவரின் தேவைகளுக்கும் அதிகமாகவே உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனஇன்று 500 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் 1000கோடி மக்களுக்குப் போதுமான உணவுகள் உலகில் உள்ளனஉணவுப் பொருள்கள் சிலருக்குக் கிடைக்காமல் போவதற்குக் காரணம் விநியோக முறையில் ஏற்படும் தவறுகளும்பலருக்குப் போதுமான உணவுகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பதும் தான்ஏழை நாடுகள் உணவுக்காக அலை மோதும் போது பணக்கார நாடுகள் உணவுப் பொருள்களைக் கடலில் கொட்டுவதை நாம் பார்க்கிறோம்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

MSG....?(அஜினோமோட்டோ)எச்சரிக்கை....!


நீங்கள் வாய்க்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்காக குட்கா, அபின் போன்ற போதைப்பொருளை, உணவில் சேர்த்து சாப்பிட விரும்புவீர்களா? பாக்கெட் உணவுகளை அதிகம் ருசிப்பவரா? தாகம் எடுக்கிறது என்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவை உடைத்து "மொடக்"குபவரா?
வேண்டாமே, இந்த விபரீதம், நாம் அமெரிக்காவை போல உயரலாம், அதற்காக, அவர்கள் "கேடுகெட்ட" உணவுப் பழக்கத்தை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமா? மிளகிலும், சுக்கிலும், திப்பிலியிலும் அரிய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று அவர்கள் பின்பற்றத் துவங்கிவிட்டனர். ஆனால், அவர்கள் விட்டொழித்த "டப்பா" உணவுகளை நாம் ஏதோ ஆசைக்கு வாங்கி சாப்பிடலாம். அதற்காக வாழ்க்கையே டப்பா உணவாகி விடலாமா? நாம் சமையல் அறைகள் என்ன ரசாயன தொழிற்கூடமா? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எல்லாம் நமக்கு அவசியம் தானா?நாம் இதையெல்லாம் யோசிக்க மறுக்கிறோம்?
* நாம் சமையலில் பயன்படுத்தும் பல பாக்கெட் சமாச்சாரங்களிலும்  "ப்ளேவர்" கூட்டும் ரசாயனங்கள் இல்லாமல் இல்லை.
* நம்மில் சிலர் பயன்படுத்தும் "டேஸ்ட்" தருவதற்கான அஜினோமோட்டோவில் கூட முழுக்க ரசாயனம் தான். அதை பயன்படுத்தி வந்த சீனர்களும், அமெரிக்கர்களும் அதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆம், நாம் எப்போது உலகமயமாக்கலில் மூழ்கி விட்டோமோ, அப்போதே நம் வாழ்க்கையில் சர்வதேசத்தனம் ஊடுருவத் துவங்கிவிட்டது.பாக்கெட் உணவுகளால் ஆபத்தில்லை. ஆனால், நாம் அதிக அளவில் அதை பின்பற்றக்கூடாது.பலரும் அதிலேயே மூழ்கி விட்டது தான் ஆபத்து தருவதாகும்.
அஜினோமோட்டோ, இதன் உண்மையான பெயர் எம்.எஸ்.ஜி., என்பது தான். மோனோ சோடியம் க்ளூட்டாமேட் (MSG -Mono Sodium Glutamate) என்பது தான் இதன் முழு ரசாயனப்பெயர். கெச்சப்பாகட்டும்(ketchup), மஷ்ரூம் அயிட்டங்களாகட்டும், சிக்கன் சமாச்சாரங்களாகட்டும் எதிலும், இந்த எம்.எஸ்.ஜி., இருக்கும். நம்மூர் சோடா உப்பு போல் தான். இந்த எம்.எஸ்.ஜி., நம்மில் அஜினோமோட்டோ என்று பிராண்ட் பெயரில் அழைக்கப்படுகிறது.

திங்கள், 17 செப்டம்பர், 2012

சென்னை ஸ்தம்பித்தது , அமெரிக்க தூதரகம் அதிர்ந்தது!


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் 15.09.2012 அன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும்,  திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube ஐ யும் கண்டித்து கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.
பெண்கள் துடப்பகட்டை, செருப்பு, சானி கரைசல் உடன் வந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
பல்லாயிரக்கணக்கானோர் கொந்தளிப்பில் குழுமி இருந்தாலும் எந்தவித சிறிய அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுக் கோப்பை வெளிப்படுத்தி காவல்துறையினரை ஆச்சிரியத்தில் ஆழ்தியது.
சென்னை நகரமே முற்றுகையினால் பல மணி நேரம் ஸ்தம்பித்து போனது.  போராட்டம் முடிந்த பிறகும் கூட கோபத்தை அடக்க முடியாத முஸ்லிம்கள் கலைந்து செல்லாமல் போராட்ட கலத்திலேயே பல மணி நேரம் தொடர்ந்து இருந்தனர்.
ஒபாமா, ஹிலாரி , பாதிரியார் ஆகியோரின் உருவப்படங்களை முஸ்லிம்கள்  கிழித்து எரிந்தனர்.  மேலும் செருப்பால் அடித்து சானியை தெளித்து ,காரி உமிழ்நதனர்.
கைது செய்ய வேண்டிய காவல்துறை வழக்கம் போல் எங்களால் இந்த கூட்டத்தை கைது செய்ய இயலாது அந்த அளவிற்கு சென்னையில் எங்கும் வசதி இல்லை எனக் கூறி கலைந்து செல்லுமாறு தெரிவித்தது.
ANI,  CNN IBN உள்ளிட்ட international media க்கள் போராட்ட கலத்திற்கு காலையிலயே வந்து என்ன நடக்க போகின்றது என காத்திருந்தது குறிப்பிடதக்கது.

புதன், 12 செப்டம்பர், 2012

கண்களை கவனியுங்கள்....!

நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ(A) மற்றும் வைட்டமின் சி(C)யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள 
மேகுலா (macula)-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -2)


வரலாற்றுச் சுருக்கம்

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பிறந்தார்கள்.குலப் பெருமையையும்சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்என்னும் குலத்தில் பிறந்தார்கள்.தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும்தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறி கொடுத்து அனாதையாக நின்றார்கள்.பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பிலும்அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான கூலிக்காக ஆடு மேய்த்தார்கள்ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன்சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள்இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லைஎழுதவோ,படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது.தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள்மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும்பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார்நபிகள் நாயகத்தின் ஒழுக்கம்பண்பாடுநேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார்.நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும்விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மணந்து கொண்டார்கள்.இதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்.