அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 20 பிப்ரவரி, 2012

TVS கார்கோ நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

தற்போது சவுதி அரேபியாவில் வளர்ந்து வரும் கார்கோ நிறுவனங்களில் TVS கார்கோ நிறுவனமும் ஒன்று. இது குவைத், கத்தாரில் கடந்தப் பத்து ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.இன்னும் சவுதி அரேபியாவில் பல பகுதிகளிலும்; ஏராளமான கிளைகள் திறக்கப்பட இருப்பதால் இதற்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுகின்றனர்.தகுதிக்கேற்ப சம்பளம், தங்குமிட வசதி, இக்காமா புதுப்பிக்கும் செலவுகள், விடுமுறையில் தாயகம் சென்று திரும்புவதற்கான பயண டிக்கெட் இன்னும்  சவுதி அரேபியாவின் லேபர்  லா பிரகாரம் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
                                                
நிபந்தனைகள்:
பட்டதாரிகள், 12th,  10th ,  பாஸ் செய்தவர்களும் அப்ளை செய்யலாம். பட்டதாரி அல்லாத ஓரளவு கணினியை இயக்கத் தெரிந்தவர்களும், ஓரளவு ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்தவர்களும் கூட அப்ளை செய்யலாம். ட்ரைவர்கள் லேபர்களும் அப்ளை செய்யலாம்.   

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

S.BARAKKATH ALI
TVS CARGO- BURAIDA-KSA
06  32 46741
(+966)055 44 46741
barakkatha@yahoo.com

நன்றி : அதிரைஃபாரூக்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

பொறுமையால் சுவர்க்கம் நுழைந்த உம்மு சுபைர் (ரலி) அவர்கள்.

தனது வாழ்வில் ஏற்படும் கஷடங்கள், துன்பங்கள் துயரங்களை தாங்கிக் கொள்ள முடியாத பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அவை உடனடியாக நீங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். அதற்காக எவ்வளவு விலை கொடுக்கவும் முன்வருவார்கள்.

இதனால் தான் பல முஸ்லீம்கள் தங்கள் பிரச்சினைக்காக தர்காக்கள்,  ஜின் வைத்தியர்கள், போலி மதவாதிகள், மந்திரவாதிகள், மாயாஜால வித்தைக் காரர்களிடமெல்லாம் போய் தங்கள் செல்வத்தை இழப்பதுடன் அறிவையும் அடகு வைக்கிறார்கள்.

போலிகளின் பொய்யான பித்தலாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்கள் நோய்க்கும் இவர்களிடம் மருத்துவம் உண்டென்று நம்பிவிடுகிறார்கள்.

பொறுமையாக இருந்து நோய்க்கு இஸ்லாம் அனுமதித்த முறையில் மருத்துவம் பார்த்து இறைவனிடம் கையேந்த வேண்டியவர்கள் பொறுமையிழந்து அல்லாஹ்வுக்கு இணை வைத்து முஷ்ரிக்கான காரியங்கள் செய்து மருத்துவத்தை தேட முனைவதை நாம் காண்கிறோம்.

இப்படிப்பட்டவர்களுக்கு படிப்பினையாக இஸ்லாமிய வரலாற்றில் மிக அழகான ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளது. பொறுமையிழந்து இறைவனை

பி‌எஸ்‌என்‌எல் (BSNL) வழங்கும் வேலைவாய்ப்பு பயிற்சி!

இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களை செல்போன் சர்வீஸ் இன்ஜினியரிங்ளாக மாற்றி அவர்களுக்கு வேலைவாய்ப்பும் தொழில் வாய்ப்பும் அளித்து வரும் ஐ‌எல்‌எஸ் பயிற்சி மையம் தற்போது நாட்டின் மிகப் பெரிய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி‌எஸ்‌என்‌எல் உடன் கூட்டிணைந்து செல்போன் இன்ஜினியரிங் பயிற்சியை வழங்குகிறது.


ஜி‌எஸ்‌எம் மொபைல் ஆர் எஃப் இன்ஜினியரிங் என்ற பி‌எஸ்‌என்‌எல் சான்றளிக்கப்படும் இந்தப் பயிற்சி சென்னை இல் இயங்கும் பி‌எஸ்‌என்‌எல் டெலிகாம் பயிற்சி மையத்தில் அளிக்கப் படுகிறது.

ஐந்து வாரங்கள் நடக்கும் இந்த பயிற்சியில் முதல் நான்கு வாரங்கள் புத்தக வடிவ பயிற்சி மற்றும் சென்னை பி‌எஸ்‌என்‌எல் பயிற்சி மையத்தில் நேரடி செயல்முறை பயிற்சி ஆகியவை நடத்தப்படும்.

கடைசி வாரம் தமிழ்நாடு தொலைத்தொடர்பு மண்டலத்தின் மாவட்ட தலைமையகத்தில் செயல்முறை பயிற்சி அளிக்கப் படும்.இந்த ஜி‌எஸ்‌எம்

புதன், 15 பிப்ரவரி, 2012

கடலூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : tntj.net

திங்கள், 13 பிப்ரவரி, 2012

விமானபடைக்கு ஆட்கள் தேர்வு

இந்திய விமான படையின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். இதற்கான தேர்வு முகாம் தஞ்சாவூரில் 12 ஆம் தேதி முதல் 14- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விமானப்படையின் தொழில்நுட்ப பிரிவுகளுக்கும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளுக்கும் ஆட்களை தேர்வு செய்வதற்கான முகாம் தஞ்சாவூர் அன்னை சத்யா ஸ்டேடியத்தில் 12- ஆம் தேதி தொடங்கி 14- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில், தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம். 1.1.1991 முதல் 31.3.1995-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். திருமணம் ஆகியிருக்கக் கூடாது.

தொழில்நுட்ப பணிகளைப் பொறுத்தமட்டில், பிளஸ்-2 முதல் குரூப் (கணிதம், அறிவியல் பாடங்கள்) அல்லது டிப்ளமோ பொறியியல் (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், அய்.டி.) முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் அவசியம்.

தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளுக்கு பிளஸ்-2 கலை அறிவியல் அல்லது வணிகவியல் அல்லது அறிவியல் எது வேண்டுமானாலும் படித்திருக்கலாம். அல்லது பாலிடெக்னிக்கில் ஏதாவது ஒரு பொறியியல் படிப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுகாம் நடக்கும் நாட்களில் காலை 6 முதல் 10 மணிக்குள் வந்துவிட வேண்டும். அசல் கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவுள்ள 8 புகைப்படங்கள், எழுதுபொருள்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 044-22390561 என்ற தொலைபேசி எண்ணிலோ, 94452-99128 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இந்திய விமானப்படையின் இணையதளத்திலும்  விவரங்களை அறியலாம்.

நன்றி : sangaionline

புதன், 8 பிப்ரவரி, 2012

இஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கம்!

ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.


அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள் : (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் "முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்"
(அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)
இஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாகும். ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.

இஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மருத்துவ படிப்பிற்கான AIPMT தேர்வுகள்

அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் முயற்சியை மத்திய அரசு இந்த ஆண்டு நிறுத்தி வைத்து உள்ளது. இதையடுத்து ஆந்திராகாஷ்மீர் தவிர்த்து உள்ள மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களை நிரப்புவதற்காக அனைத்திந்திய மருத்துவ / பல்மருத்துவ நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.)  நடைபெறும் தேதி  தற்போது  அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2012) முதல் நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கு, இனி பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு 
அமுல்படுத்தப்பட்டால் கிரமாமப்புறமாணவர்கள் பாதிக்கபடுவார்கள் என தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து 2012நடத்துவதாக இருந்த பொது மருத்துவ நுழைவுத் தேர்வை 2013 கல்வி ஆண்டிலிருந்து நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.