அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 31 ஜனவரி, 2013

அண்டார்டிகா-ஐஸ் கட்டிக்குள் மறைந்து கிடந்த ஏரி கண்டுபிடிப்பு

அண்டார்டிகா பனி பிரதேசத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் முகாம் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது படர்ந்து கிடக்கும் ஐஸ் கட்டியின் அடியில் மறைந்து கிடக்கும் ஏரிகளை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ரோஸ் கடல் பகுதியில் ஐஸ் கட்டிகளின் மீது துளை போடும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அப்போது 1 கி.மீட்டர் ஆழத்தில் ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வில்லர்னஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது துளை போடும் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் தெரிய வந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவினர் ஐஸ் கட்டிக்குள் மறைந்து கிடந்த எல்ஸ்வொர்த் என்ற ஏரியை கண்டுபிடித்தனர். வோஸ்டாக் என்ற இடத்தில் ரஷியா ஏரியை கண்டுபிடித்தது. ஆனால் அதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நன்றி: மாலைமலர்

புதன், 30 ஜனவரி, 2013

வாழைத்தண்டு

ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான
உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் வாகனம் ஓட்டிச் செல்வது, கடின உடல் உழைப்பு, வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. 

சிறுநீரக கற்கள் உடலில் தோன்றும் போது வாந்தி, காய்ச்சல், பசியின்மை, இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி, சிறுநீரில் ஒரு வித துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, சிறுநீரக கற்கள் சிறுநீர்ப்பையில் உராயும் பொழுது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை உருவாகும். சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். 

புதன், 23 ஜனவரி, 2013

சென்னை மெட்ரோ ரெயில் பணியில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு

மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது.
 chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013.
இது குறித்து முழு விபரம் அறிய Click Here to download Advt PDF

நன்றி : tntj.net

வெள்ளி, 18 ஜனவரி, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -8)

ஏன் இந்த எளிய வாழ்க்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு' என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. 'நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா?' என்று பேரனிடம் கேட்டார்கள். நூல் : புகாரி 1485, 1491, 3072

'
தமது பேரனின் வாயிலிருந்து பேரீச்சம் பழத்தை வெளியேற்றி விட்டு 'முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தைச் சாப்பிடக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?' எனக் கூறினார்கள் என்று கூறப்படுகிறது நூல் : புகாரி
1485

'
பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது' என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
 
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

வியாழன், 17 ஜனவரி, 2013

சென்னை புத்தகக் கண்காட்சியில் களை கட்டும் அழைப்புப்பணி!

வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் சென்னையில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளாக வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த புத்தகக் கண்காட்சியில் சென்ற ஆண்டு 8 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், அதுவும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மக்கள் கூடும் இடங்களில் தூய இஸ்லாத்தை எடுத்து வைத்தால் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கம் செவ்வனே சென்றடைய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மூன் பப்ளிகேஷன் என்ற பெயரில் புக் ஸ்டால்கள் பதிவு செய்யப்பட்டன.
ஜனவரி 11 முதல் 23 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் மூன்பப்ளிகேஷனின் புக் ஸ்டால் எண் 270, 271

இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துச் சொல்லக்கூடிய புத்தகங்கள், இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தும் நூல்கள், ஆகிய அனைத்து ஏகத்துவ நூல்களும் 10% கழிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.கண்காட்சியில் நமது ஸ்டாலுக்கு

தெருமுனைப் பிரச்சாரம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆயங்குடி கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் நேற்று (16.01.13) மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.ஆயங்குடி தவ்ஹீத் பள்ளியின் இமாம்,  முஹம்மத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..!வெள்ளி, 11 ஜனவரி, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -7)

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ?இவ்வாறு யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.

'
முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். 
 நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திருந்து வாரி வழங்கிய மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

சுரங்க ரயில் பாதைக்கு 150 வயது


உலகில் முதன் முதலாக அமைக்கப்பட்ட சுரங்க பாதைக்கு, இன்று வயது 150 ஆகிறது.
உலகிலேயே முதன்முறையாக லண்டனில் தான் சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டது.
கடந்த 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட ரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது.
ஆரம்பத்தில் மிக குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை, இன்று 402 கிலோமீற்றர் நீளத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
லண்டன் டியூப்(London Tube) என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர்.
இந்த பாதையின் 150வது ஆண்டை நினைவூட்டும் விதமாக, தொடக்க காலத்தில் இயக்கப்பட்ட நீராவி என்ஜினுடன் கூடிய ரயில்களை வருகிற 13ஆம் தேதி இயக்க லண்டன் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 நன்றி: newsonews

விரைவில் அமெரிக்காவை சீனா முந்திவிடும்: நிபுணர்கள் தகவல்

உலக அளவில் பொருளாதார வலிமையில் சீனா, அமெரிக்காவை முந்திவிடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் மிக வேகமாக சீனா வளர்ந்து வருகிறது. இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி நிபுணர்கள் கணிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில், சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும், பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.

குறிப்பாக 2019ஆம் ஆண்டில் பொருளாதார வலிமையில் சீனா அமெரிக்காவை முந்திவிடும். இந்த வளர்ச்சி 30 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.
எனவே அடுத்த 30 ஆண்டுகளுக்கு சீனா முதன்மை நாடாக திகழும் என கூறியுள்ளனர், மேலும் நாட்டின் சுகாதார வளர்ச்சியிலும் சீனா முதன்மை நாடாக திகழும் என தெரிவித்துள்ளனர்.

தற்போது சுகாதார வளர்ச்சியில் சீனா 11-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: newsonews

வியாழன், 10 ஜனவரி, 2013

அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

கேள்வி : ...உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15 என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறை வசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும். -ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டிணம்


பதில் : திருக்குர்ஆன் வசனம் 16:15-க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழாக்கம் தவறானதாகும். 'உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக' என்று பொருள் கொள்ள முடியாது. 'உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க' என்பது தான் அதன் சரியான அர்த்தமாகும்.

நாம் வாழ்கின்ற இப்பூமி பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு அடுக்கும் ஒரே அளவுடையதாகவோ, ஒரே கனம் உடையதாகவோ இல்லை. மேலடுக்கு மென்மையாகவும் கீழடுக்கு கடினமாகவும் உள்ளன.இவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு உருண்டையை பூமி சுற்றும் வேகத்திற்கு சுற்றினால் மென்மையான பகுதி வேகமாகவும், கடினமான பகுதி குறைந்த வேகத்திலும் சுற்றும். இதனால் மேல் பகுதி மையப் பகுதியுடன் உள்ள ஈர்ப்பு சக்தியை இழந்து விடும். மேலே உள்ள பொருட்கள் பறக்க ஆரம்பித்து விடும்.
 
ஒரு பலகையின் மீது ஒரு அட்டையை வைத்து அப்பலகையை வேகமாகத் தள்ளினால் பலகைக்கு எதிர் திசையில் அட்டை பறந்து வந்து விழுவதை நீங்கள் காணலாம். இரண்டும் சமமான கனமுடையதாக இல்லாததும் இரண்டுக்கும் இடையே இணைப்பு இல்லாததுமே இதற்குக் காரணம்.பலகைக்கு மேல் வைக்கப்பட்ட அட்டையையும், பலகையையும் இணைக்கும் வகையில் நான்கு ஆணிகளை அறைந்து இணைத்து விட்டு பலகையை எவ்வளவு வேகமாகத் தள்ளிவிட்டாலும் பலகையின் வேகத்திலும், திசையிலும் அட்டையும் சேர்ந்து செல்லும்.அது போல் தான் பூமியின் மென்மையாக பகுதியையும், கடினமான பகுதியையும் இணைக்கும் வகையில் ஆணிகளைப் போல் மலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதனால் தான் அனைத்து அடுக்குகளும் ஒரே சீராகச் சுழல முடிகிறது.


மலைகள் இல்லாவிட்டால் பூமியின் மேற்பகுதி, பூமியின் கீழ்ப்பகுதிக்கு எதிர்த் திசையிலும், மையப் பகுதியின் பிடிப்பை விட்டு விலகியும் தாறுமாறாகச் சுற்றும். நாமெல்லாம் பந்தாடப்படுவோம். இந்த மாபெரும் அறிவியலைத் தான் அவ்வசனம் கூறுகிறது.

P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலிலிருந்து......


செவ்வாய், 8 ஜனவரி, 2013

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்? என்று எனது நண்பர் ஒருவர் கேட்கிறார். 
                                                              - எம். அஹ்மது, சென்னை-1.

பதில்: மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன.வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதகங்கள் உள்ளன.
 
நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள்! மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது.நமக்கு இறைவன் வறுமை மற்றும்

ஹைஹீல்ஸ் செருப்பு அணிவதால் ஏற்படும் பாதிப்புகள்

பெண்களுக்கு அழகான தோற்றத்தை தருவதாக நம்பப்படுவதால் ஹைஹீல்ஸ் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் 50 சதவீத ஹைஹீல்ஸ் பெண்களுக்கு பாதவலி, சுளுக்கு, மனஇறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீண்ட காலத்துக்கு ஹைகீல்ஸ்அணிவதால் சுளுக்கு, கால் ஆணிகள், கொப்புளங்கள் தவிர குதிகாலின் பின் பகுதி பெரிதாகி துருத்திக் கொண்டு சிவப்பாகவோ அல்லது வீங்கியோ இருக்கலாம்.

எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து,விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்ச வலி ஏற்படலாம். காலை உயர்த்திய நிலையில் வைத்திருப்பது குறுகிய கால தசை நார் வலியை உருவாக்கலாம். இதனால் தட்டையாக காலணிகளை அணிய முடியாமல் போகலாம்.முதுகெலும்பு நகர்வு, அதன் மீது அதிகபட்ச அழுத்தம் அல்லது முட்டியைப்பு இடம் நகர்வு போன்ற உடல் தோற்ற பிரச்சனைகளுக்கு ஹைஹீல்ஸ் காரணமாக அமையலாம். தொடர்ந்து ஹைஹீல்ஸ் அணிவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஹைஹீல்சுகுள் காலைத் திணிப்பதால் ஒரு நாளில் பாதம் சுமார் 455 கிலோ சக்தியை உள்வாங்குகிறது.

பாதத்திலிருந்த அதிகப்படி ரத்தம் வெளியேறி, வீக்கம் உருவாகிறது. இந்த வீக்கத்தை குறைக்க ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீரையும், சுடுதண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றவும். கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி காய வைத்து மாய்ஸ்சுரைஸ் செய்யவும். சில  பயிற்சிகளையும் செய்தால் கால்வலியில் இருந்து மீளலாம். காலில் வலி, வீக்கம், அதிகமானால் , காலணிகளை கழற்றிவிட்டு அமருங்கள். சிறிய பந்தின் மீது காலை வைத்து உருட்ட வேண்டும். அடுத்த காலுக்கு மாற்றி அதையே செய்யவும்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -6)

நபிகள் நாயகத்தின் அரண்மனை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர். 

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள். நூல் : புகாரி 3906


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப் பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.

பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.உலகிலேயே ஒரு மன்னர் தமது சொந்தப் பணத்தில் கட்டிய அரசாங்கத் தலைமையகம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

தமது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட நிலத்தில் தமக்காக அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கியிருப்பார்கள்? இடங்களுக்கு பெரிய மதிப்பு இல்லாத அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய இடத்தைத் தமக்காக வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய சொத்தாகக் கருதப்பட மாட்டாது. அத்தகைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்!நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில்

வியாழன், 3 ஜனவரி, 2013

பெண்களுக்கெதிரான குற்றங்கள்! இஸ்லாம் கூறும் தீர்வு!

மகத்தான படைப்பாளனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

(முஹம்மதே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24:30,31)


இன்றைய நவநாகரீக உலகில், பெண்கள் கற்பழிக்கப்படுவதும், அவர்கள் மீது பாலியல்ரீதியாக தொந்தரவுகள் கொடுக்கப்படுவதும் என்றுமில்லாமல் அதிகரித்துள்ளது. அதுவும் பெண்களை போற்றும் இந்திய திருநாட்டில் இத்தகைய குற்றங்கள் பல்கிப் பெருகிவிட்டதைக் கண்டு நேர்மையாளர்கள் பலரும் மனவேதனை அடைந்து வருகின்றனர். 
ஆணும் பெண்ணும் கலந்து வாழும் சமூக அமைப்பில் எப்படிப்பட்ட வரம்புகளுக்குட்பட்டு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கறையற்றவர்களாக மனித சமுதாயம் இருந்து வருவதால்தான் கேடுகெட்ட ஒழுக்கச்சிதைவுகள் ஏற்பட்டு, மிருகத்தைவிட கேவலமாக நடந்துக் கொள்கின்றனர். 
ஒரு பெண்,தான் ஒரு பட்டதாரியாக வேண்டும்,நல்ல கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்விச்சாலையைத் தேடிச் செல்லும் போது, கல்விச்சாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாலியல் வன்முறைக்கு இலக்காகிறாள். தன்னுடன் பயிலும் சக மாணவர்களின் ஈவு இரக்கமற்ற ஈவ்டீசிங் என்கிற பாலியல் சேட்டைகளை தாங்கிக் கொள்ள இயலாமல் தற்கொலையும் செய்துக் கொள்கிறாள்.இது ஏதோ ஒன்றோ இரண்டோ அல்ல.ஏராளமான சம்பவங்களை ஆதாரங்களாக காட்ட  முடியும். 
அதேபோல் குரு என்கிற உன்னத ஸ்தானத்தில் இருந்து, மாணவ,மாணவிகளை நல்ல எதிர்கால சந்ததிகளாக மாற்றி, வளமான தலைமுறைகளை உருவாக்கும் பணியில் இருக்கும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வதும், கற்பழிப்பதும் தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகி விட்டது. 
அதுமட்டுமின்றி, பாலகர்களாக இருக்கும் 3வயது, 4 வயது மழலைகள் கூட ஆசிரியர்களால் வன்புணர்ச்சி செய்யப்படுவதும் மனிதநாகரிகம் மேம்பட்டதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டில் நம் கண்முன் நடக்கும் வேதனைகளாகும். இத்தகைய மனிதமிருகங்களுக்கு என்ன தண்டனைகள் வழங்கப்பட்டன, சட்டம் அவர்களை என்ன செய்தது என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் கண் துடைப்பு நாடகங்கள் அரங்கேறுவதையே  நாம் காண முடியும்.மேலும் தன்னுடைய குடும்பசூழ்நிலையை கருதி, தகப்பன், சகோதரன், கணவன் இவர்களின் கஷ்டங்களுக்கு  தோள் கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அங்கு பணியாற்றும் வக்கிரபுத்தி படைத்த மேலாளர் மற்றும் சக பணியாளர்களின்; பாலியல் தொந்தரவுகளுக்கும்  காமப் பசிக்கும் நிர்பந்தமாக இரையாவதும், அதனை வெளியில் சொல்ல முடியாமல் மனம்புழுங்கி தங்களுக்குள் குமைந்து வாழ்வதும்;  எழுத்தில் வடிக்க இயலாத வேதனைகளாகும். 
அதேபோல் பேருந்துகளிலும், இரயில்களிலும், கடைத் தெருக்களிலும் பெண்கள்  பாலியல் வக்கிரத்துக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகி தினம் தினம் செத்து மடிகின்றனர்.
புதுடில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பேருந்தில் மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாசப்படுத்தப்பட்ட அதிர்வலைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாணவிகள் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம், சென்னையில் 15 வயது மாணவி கடத்தப்பட்டு, கட்டாய தாலி கட்டப்பட்டு, பலாத்காரப்படுத்தப்பட்டது, திரிபுரா மாநிலத்தில் பிஷால்கர் எனுமிடத்தில் வீட்டில் இருந்த பெண்ணை ஒரு கும்பல் கற்பழித்து, மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்த கொடுமை, மும்பையில் தன் கணவனை தேடி வந்த நேபாள

புதன், 2 ஜனவரி, 2013

நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?

கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்' என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்!
                                             -ஜுலைஹா புதல்வி, தருமாபுரம், காரைக்கால்


பதில் : மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டு பிடித்து விடும். ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு.பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அறிவின் கண்டு பிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும் இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையா? எனக் கேட்டால் அதில் உள்ள கேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார். அவரது அறிவு புகை பிடிப்பதைத் தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்? தவறு எனக் கண்டு பிடித்தவுடன் அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லை? எனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரிய ஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம்.திருடுபவன், மது அருந்துபவன், கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில் மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன. உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் எடுத்துக் கொள்கிறான்.


சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும், ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம் மனிதனின் அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது.பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார். அந்த வழியில் மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லை. ஒரு சர்வாதிகாரி ஒரு உத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான்.

குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை :  குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
துணை கலெக்டர் பணியிடம் – எட்டு, டி.எஸ்.பி., – நான்கு,
 வணிக வரித்துறையில், உதவிக் கமிஷனர் – ஏழு,
 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் – ஐந்து,
மாவட்ட பதிவாளர் – ஒருவர் என,
25 பணியிடங்களை நிரப்ப, கடந்த, 30ம் தேதி, முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என, தேர்வாணையம் அறிவித்திருந்தது. பின், இம்மாதம், 27ம் தேதிக்கு, தேர்வை ஒத்தி வைத்தது.இந்நிலையில், தேர்வுக்கு, இம்மாதம், 7ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நன்றி: தாளம்நியூஸ்