அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 30 ஏப்ரல், 2011

அத்தாட்சிகளை மறுக்கலாமா?

கேள்வி:மரம் ருகூவு செய்வது மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை நம்பலாமா?

பதில்: இறைவன் தனது அத்தாட்சிகளைக் காட்டுவான் என்பதிலோ, அவற்றை நம்ப வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது.மாயையையும், மாயத் தோற்றங்களையும் அத்தாட்சிகள் என்று கூறுவோர் தான் இவை அத்தாட்சி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இதுபோன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன. சிலுவை, மேரி வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. எல்லா மதத்தினரும் தற்செயலாக அமைந்து விட்ட இது போன்ற காட்சிகளைக் காட்டுகின்றனர். உங்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் தாமா?

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-4

ஏகஇறைவனின் திருப்பெயரால்.....

ذَلِكُمُ اللّهُ رَبُّكُمْ لا إِلَـهَ إِلاَّ هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ 6:102

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ்.அவனைத் தவிர
வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு
பொருளையும் படைத்தவன்.எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்.(6:102)


இதற்கு முந்தைய தலைப்பில் ஒட்டகப் பாலில் மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டுப் பிடித்துக் கூறியதையும் அதையே 1400 வருடங்களுக்கு முன் மொத்த மனித சமுதாய மேம்பாட்டிற்காக இறக்கி அருளப்பட்ட உலகப் பொதுமறை திருக்குர்ஆனில் ஏகஇறைவன்

கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள்.( திருக்குர்ஆன் 23:21.)

என்றுக் கூறியதையும், தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஏகஇறைவனின் கூற்றுக்கொப்ப நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக ஒட்டகப்பாலை தொடர்ந்து அருந்தி வருமாறு உத்தரவிட்டு நோயாளிகள் நோய் குணமடைந்ததையும் எழுதி இருந்தோம்.

புதன், 27 ஏப்ரல், 2011

பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்ததா?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே, கடந்த ஏப்ரல் 11ம் தேதி

பிரான்சில் கொண்டுவரப்பட்ட ஹிஜாப் தடைச் சட்டத்திற்குப் பிறகு

பிரான்சின் நிலைமைகளை தடை உள்ள வேளையில் என்ற பதிவில்

எழுதியிருந்தோம்.(படிக்காதவர்கள் இதை கிளிக் செய்யவும்

மூலம் அந்த தடைச் சட்டத்தை இஸ்லாமிய பார்வையில்

அலசியிருக்கிறோம்.இதைப் படிக்கும் சகோதர,சகோதரிகள் முகத்தை

மூடக்கூடாது என நாம் கூறுவதாக நினைத்துவிட வேண்டாம்.

நமதூரிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும்,தமிழகத்தின் பெரும்பாலான

பகுதிகளிலும் அதிகமான பெண்கள், பெண்மைக்கே உரிய நாணத்தின்

காரணமாக முகத்தை மூடியவர்களாகத்தான் வெளியிடங்களுக்குச்

செல்கின்றனர்.இஸ்லாத்தில் முகத்தை மூடுவதற்க்கும் தடை இல்லை,

அதே வேளையில் மறைப்பதும் கட்டாயம் இல்லை.நகரங்களில் சிலர்

தாங்கள் யாரென்று அறியப்படக்கூடாது என்பதற்க்காக முகத்தை

மறைக்கும் விதமான ஹிஜாபை அணிகின்றனர்.இதை உங்களுக்கு

தெரிவிக்கும் வண்ணமும், நாம் விளங்கிக்கொண்டது போல் பிரான்சின்

தடை ஹிஜாபுக்கு அல்ல முகத்திரை அணிவதற்க்குத்தான் என்று

விளங்கிக்கொள்ளவும், ஒருவேளை பிரான்சோ அல்லது இஸ்லாமிய

எதிர்ப்பளர்களோ தாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை

ஏற்ப்படுத்திவிட்டோம் என்று தம்பட்டம் அடித்தால்,உள்ளூர மகிழ்ந்தால்,

குளிர்காய்ந்தால், அவர்களின் கையாலேயே அவர்களின் கண்ணைக்

குத்திக்கொண்டது போல இந்தச் சட்டம் தெளிவான,அனுமதிக்கப்பட்ட

இஸ்லாமிய நிலைப்பாடுதான் என்று தெரிவிக்கும் வண்ணமும் தான்

இந்தக் கட்டூரை.

மஸ்வூது.
 

மிஸ்டுகால் (Missed Call)

பாதையில் ஊரும் பாம்பை பிடித்து தனது பைக்குள் போட்டுக் கொண்டது போல் தான் மொபைல் போன்களை நாம் எமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைகின்றோம்.

ஒரு சிறிய மிஸ்டுகால் என்றால் உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதை பார்த்துவிட்டுத் தான் அல்லது விடையளித்துவிட்டுத்தான் அடுத்த விசயத்திற்கு நம்மை திசைதிருப்புகின்றோம்.

நமது கையிலிருக்கும் அந்த மொபையில் எந்தளவு நமக்கு பயனளிக்கின்றது என்று நாம் உறுதிப்படுத்துகின்றோமா என்றால், இல்லை.
சிலருக்கு எந்த வருமானமும் இருக்காது, ஆனால் பல கால்கள் வந்துகொண்டே இருக்கும்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சுண்டைக்காய்

காய்களும் கனிகளும் இறைவனின் அருட்கொடைகள்.  மனிதனின் அன்றாட தேவையில் இதன் பயன்பாடு மிக அதிகம்.  மனித உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் காய்களில் நிறைந்துள்ளன.  காய்களும் கனிகளும் மனித உடலுக்கு எளிதில் சேரக்கூடியவை.  நம் முன்னோர்கள் காய்கனிகளுக்கு முதலிடம் கொடுத்தனர்.

நாம் பலவகையான காய்களை அன்றாடம் உணவில் சேர்க்கிறோம்.  இக்காய்கள் சுவைக்கும் பசிக்கும் மட்டும்தான் என பலர் நினைக்கின்றனர்.  பசியைப் போக்குவதுடன் சுவையுடன் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுப்பது இவைதான் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த கட்டூரையில் நாம் அறிந்துகொள்ள இருப்பது சுண்டைக்காய்.

சுண்டைக்காய் அனைவரும் அறிந்திருக்கும் காய்தான்.  பலர் வீட்டுத் தோட்டங்களில் இந்த சுண்டைச்செடி இடம்பெற்றிருக்கும். 

திங்கள், 25 ஏப்ரல், 2011

நபி(ஸல்) அவர்களின் அழகிய அறிவுரைகள்

அரசு சட்டக் கல்லூரிகளில் மே 18ம் தேதி முதல் பி.எல்.பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்

அரசு சட்டக் கல்லூரிகளில் பி.எல்., பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள், அடுத்த மாதம் 18ம் தேதி முதல் வழங்கப்படும் என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறினார்.


இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறியது:

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட அரசு சட்டக் கல்லூரிகளில், 2011-12ம் கல்வியாண்டிற்கான பி.எல்., பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையிலும் பெறலாம். விண்ணப்பிக்க, ஜூன் 10ம் தேதி கடைசி நாள். ஐந்தாண்டு பி.எல்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்போர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மூன்றாண்டு பி.எல்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான வயது வரம்பு, குறைந்தபட்ச மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜூன் இறுதி வாரத்தில், "கவுன்சிலிங்' மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, ஜூலை முதல் வாரத்தில் வகுப்புகளை துவங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Thanks : Abu Thafeem, Kollumeduxpress

தவிர்ந்துகொள்ளுங்கள்-அசுத்தம் (பகுதி-2)

இவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கும் இந்ந நோய் கிருமிகள் பல் வேறு அறிவியல் ஆய்வுகள் நடத்தித்தான் இந்த காலத்தில் சொல்ல முடிகிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த அறிவியல் வளர்ச்சியும் அடையாத காலகட்டத்தில் கண்ணுக்கு தெரியாத பொருட்களை பன் மடங்கு பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய நுண்ணோக்கிகள் இல்லாத காலத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக இருப்பதால் மட்டுமே கூறியிருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் தூங்கி எழுந்ததிலிருந்தே தூய்மையாகவும் நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இன்னொரு கட்டளையையும் இஸ்லாம் இடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் அவருடைய மூக்கில் மூன்று முறை தண்ணீரை செலுத்தி அதை சிந்தட்டும். ஏனென்றால் ஷைத் தான் அவருடைய மூக்குத் துவாரத்தில் இருக்கிறான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 403

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சொல்லும் பழச்சாறு வியாபாரி

சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆர்வமுடன் களமிறங்கியுள்ள சாகுல் ஹமீது
 
சென்னை சாலைகளில், 13 ஆண்டுகளாக பழச்சாறு வியாபாரம் செய்கிறேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், இங்குள்ள அனைத்து சாலைகளும் எனக்கு அத்துப்படி. ஒவ்வொரு சிக்னல்களிலும், மணிக்கணக்கில் ஆய்வு செய்திருக்கிறேன். 

சென்னை போக்குவரத்தை சீராக்க, ஆயிரக்கணக்கான வரைபடங்கள் தயாரித்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஜெராக்சிற்கே செலவு செய்துள்ளேன். சொந்தப் பணத்தில், பாங்காங், மலேசியா, சிங்கப்பூர் சென்று, அங்குள்ள போக்குவரத்து விதிகளை ஆய்வு செய்துட்டு வந்தேன். நான் ஒரே ஆளாக இத்தனை வருடம் செய்த விஷயங்களைப் பற்றி, விசாரிக்கக் கூட இங்கு ஆள் இல்லை. நான் டிராக்பிக் போலீசாரை குறை சொல்லவில்லை. அவர்களை நெறிப்படுத்திக்க, அவர்களிடம் எந்த ஐடியாவும் இல்லை. என்னிடம் நிறைய ஐடியாக்கள் உள்ளன; ஆனால், கேட்கத் தான் ஆள் இல்லை. தேவையற்ற சிக்னல்கள், 35 சதவீத சாலைகளை, ஒரு வழிப்பாதையாக மாற்றியது, மாநகர பஸ் ஓட்டுனர்களின் ஒழுங்கீனம் ஆகியவை தான், சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணங்கள். நான் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, என் யோசனைகளைக் கேட்க போலீஸ் மறுக்கிறது.

பப்பாளி

ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடித்தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் பப்பாளிப் பழத்தையே எடுத்துக் கொள்வோம்.
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்துக்கள் உள்ளன.

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு,
2. பட்டய படிப்பு (டிப்ளோமா),
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

சனி, 23 ஏப்ரல், 2011

இரத்த பந்தம்

அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், ""நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
   
    அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
  

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-3

சென்ற வாரங்களில் பரிணாமக்கோட்பாட்டைப் பற்றி அறிந்தோம்.இனி வரும் வாரங்களில் இறைவனின் படைப்புகளைப் பற்றியும்,அவைகள் அவன் கூறுவதற்க்கேற்ப்ப எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.அல்லாஹ்வைத் தவிர மற்ற யாவையும் அவனால் படைக்கப் பட்டதுதான்.ஒரு பொருள் எவ்வாறு இயங்குகிறது என்பதை அதை உருவாக்கியவரைத் தவிர வேறு யாராலும் துல்லியமாக கூரமுடியாது.இறைவன் தன் படைப்புகளைப் பற்றி திருக் குர் ஆனிலும் தன் தூதர் நபி(ஸல்) மூலமும் கூறுகிறான்.சிலவற்றைப் பற்றி கூறி நம்மிடம் அவைகளை ஆராயுமாறும் கூறுகிறான்.

பாலைவனக்கப்பல்


                                أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.

உலகில் தோற்றுவிக்கப்பட்ட உயிரினங்களில் இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்காக அதில் அதிசயிக்கத்தக்கப்பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுவான்.ஏகஇறைவன் தனது படைப்பினங்கள் பலவற்றில் (ஒன்றிலிருந்து மற்றொன்று பார்ப்பதற்கு ஒன்றுப் போலவே இருந்தாலும்) அதனுடைய உடலுக்குள் உள்ள உறுப்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுவான்.
ஒட்டகத்தின் இறைச்சியும், அதனுடைய பாலும் உலகிலேயே கால்நடைகள் தரும் பாலில் அதிகசத்து நிறைந்துக் காணப்படுவது ஒட்டகப் பாலில் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.இத்தனை அபரிமிதமான  சத்தை வழங்கக்கூடிய  ஒட்டகத்தின் பிரதான உணவு என்ன தெரியுமா ? முட்செடிகளும், காய்ந்த சருகுகளுமாகும் !முட்செடிகளையும் காய்ந்த சருகுகளையும் மேயந்து விட்டு இத்தனை அபரிமிதமான சத்துள்ள பாலை ஒட்டகம் தருகிறது என்றால் இறைவன் தனது ஆற்றலை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் இதன் மூலமாகவும் வெளிப்படுத்துவதை கவனிக்க வேண்டும்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி:இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என உச்சநீதிமன்றதின் மூத்த தலைமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

அறிவுப்பூர்வமான-வளர்ச்சி மற்றும் எதிர்கால அமைதிக்கான வழித்தடம் அமைத்தல் என்ற தலைப்பில் நிகழ்ந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்று இணையதளத்தில் வெளியீடு!

பத்தாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள், இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

வரும் ஜூன் மாதம் துவங்கும் கல்வி ஆண்டில், இதர வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து, பத்தாம் வகுப்பின் அனைத்து பாடங்களுக்கும், சமச்சீர் கல்வியின் அடிப்படையில், தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப் புத்தகங்கள், இணைய தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. அதன்படி, பத்தாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் www.pallikalvi.in   இன்று வெளியிடப்படுகிறது.
 
Thanks : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) - பரங்கிப்பேட்டை

அல்ஹம்துலில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வோம்.

உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் தனக்கு ஏதாவது சந்தோஷமான நிகழ்வுகளோ அல்லது பேரை,புகழைப் பெற்றுத் தரக்கூடிய நிகழ்வுகளோ ஏற்படும் போது அது தன்னுடைய ஆற்றலாலும் அறிவாழும்தான் கிடைத்தது என நினைத்துவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான முஸ்லிமாக ஒருவர் இருந்தால் அவருக்கு இப்படிப் பட்ட நிகழ்வுகள் ஏற்பற்டால் அல்லாஹ் தான் இதை எனக்குத் தந்தான் எனது கையில் எதுவும் கிடையாது என்று நினைத்து அல்லாஹ்வைப் புகழ்வான் அப்படிப் புகழ்ந்தால்தான் அவன் உண்மை முஸ்லிமாக இருப்பான்.

ஏனெனில் பெருமையையும்,கர்வத்தையும்,அகங்காரத்தையும் தடுப்பதே அல்லாஹ்வைப் புகழ்வதுதான்.ஒருவன் தனக்கு விருப்பமான ஒரு காரியம் நடக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்தான் என்றால் அவனிடத்தில் பெருமையோ,அல்லது அகங்காரமோ இல்லை என்பதை நாம் தெளிவாக அறிய முடியும்.இதைத்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அறுவுறித்தியுள்ளார்கள்.அந்த அடிப்படையில் அல்லாஹ்வைப் புகழுவதுடைய தெளிவான நிலைப்பாட்டை நாம் அறிந்து கொள்வோம்.இறைவனைப் புகழ்வது பெருமையைத் தடுக்கும்.
மக்காவை நபி(ஸல்)அவர்கள் வெற்றி பெற்ற போது இறைவன் நபிகளாருக்கு அல்லாஹ்வைப் புகழும் படி கட்டளை இடுகிறான்.

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹ் செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் ''தவ்பாவை"" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (110:1,2,3)

இலட்சியப் பாதை.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்என்னை மன்னித்து விடு 
 )நூல்கள்: புகாரீ 794, முஸ்லிம் 746 )
  
ஒருவர் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பயணத்திற்கு தேவையான வாகனத்தையும், பொருட்களையும் சேகரித்துக் கொள்வதைப்போல் பயணத்திற்கான வழித்தடத்தை அறிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.

வழி தெரியாமல் பயணித்தால்  சென்றடைய வேண்டிய ஊர் வந்து சேராது. சென்றடைய வேண்டிய ஊர் வராவிட்டால் பயணத்திற்கான நோக்கம் மாறிவிடும்.

உலகிலிருந்து மறுமைக்குத் தொடங்குகின்ற மனிதனின் நீண்ட தூரப் பயணத்திற்கிடையில் சிறிது ஓய்வெடுப்பது கப்ருஸ்தானில் மட்டுமே.

அவ்வாறு ஓய்வெடுக்கும் கப்ருஸ்தானில் சுவனத்தின் சுகந்த காற்றா ? நரகத்தின் வெப்பக் காற்றா ? முற்றுப் பெறும் மறுமை பயணத்தில் சொர்க்கமா ? நரகமா ? என்பதற்கு உலகிலிருந்து தொடரும் மனிதனின் பயணத்தில் சிறந்த வழிகாட்டியாக அமைவது தொழுகை தான்.

புதன், 20 ஏப்ரல், 2011

ஹஜ்:தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விண்ணப்பித்தவர்கள் இந்த ஆண்டு குலுக்கல் இன்றி தேர்வு!

ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது...

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள்
சென்னை-34,
புதிய எண்.13 (பழைய எண்.7),
மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில்,
ரோஸி டவர்,
மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம்

"என்ஜினீயரிங் படிப்பில் சேர, மே 16 முதல் விண்ணப்பம் வினியோகம்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தகவல்"

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்ப்பதற்காக, ஆண்டு தோறும் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், கவுன்சிலிங் மூலம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கவுன்சிலிங் குறித்து, சென்னை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 486 உள்ளன. இந்த கல்லூரிகளில் இப்போதைக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்களில் என்ஜினீயரிங் (பி.இ.) படிப்புக்கு மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் புதிதாக பல கல்லூரிகள் விண்ணப்பித்து இருப்பதால் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

அத்திப்பழம்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

தடை உள்ள வேளையில்.....

(முஸ்லிம் பெண்கள் தங்களது தலையை மறைக்கும் புர்கா அணிவதை தடைச்செய்து பிரான்சு அரசு நிறைவேற்றிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சில் உருவான சூழ்நிலைகளை குறித்து ஆராய்கிறார் பி.பி.சியின் ஐரோப்பிய எடிட்டர் கெவின் ஹெவிட்.)

“பாரீஸிலிருந்து நான் இதனை எழுதும் வேளையில் நகரத்தில் தடையை மீறி புர்கா அணிந்த பெண்கள் வெளியேவரும் காட்சிகளை தொலைக்காட்சி  சேனல்கள் ஒளிபரப்பின. ஒரு சேனலில் புர்கா அணிந்து கொண்டு கென்ஸா த்ரிதர் என்ற வீட்டுக்கார அம்மா சாலையில் இறங்கிய காட்சி ஒளிபரப்பானது. அவர் கூறுகிறார்: ’12 வருடங்களாக நான் இந்த புர்காவை அணிந்து கொண்டுதான் எனது எல்லாவித வர்த்தகங்களையும் நடத்திவருகிறேன். மேலும் பொதுமக்களிடையே செல்லும்போதும் இந்த புர்காவை அணிந்துதான் செல்கிறேன்.எவராலும் என்னை இந்த இஸ்லாமிய ஆடையை அணிவதிலிருந்து தடுக்க இயலாது. பிறர் இந்த ஆடையை அணிவதை நான் நிர்பந்திப்பதில்லை. எனது மகள்களைக் கூட நான் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிந்துக் கொள்ளட்டும். ஆனால் நான் புர்காவை அணியத்தான் செய்வேன்’ எனக்கூறுகிறார் கென்ஸா.

மிளகு (pepper)

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.

திங்கள், 18 ஏப்ரல், 2011

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் - ஓர் ஆய்வு

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச் சுருங்குகிறது என்பதை கற்றுத்தருகிறான்.இவ்வாறு கூறுவதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

விண்வெளி பயணத்தில் எற்படும் உடல் குறைபாடுகள்
விண்வெளியை நோக்கி பயணம் செய்யும் போது அங்கு புவி ஈர்ப்பு சக்தி இருக்காது மேலும் இந்த புவி ஈர்ப்பு விசையானது பூஜ்ஜியமாக (0) ஆக காணப்படுகிறது.விண்வெளிப் பயணத்தின் போது புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக காணப்படுவதால் அதில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துக் கொள்ளுங்கள்!
  • இரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஒரே சீராக இருக்காது!
  • இரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்படுவதால் மன உளைச்சல் ஏற்படுகிறது
  • மன உளைச்சல் அதிகரிப்பதால் ஒரு விதமான பயம் உள்ளத்தை வாட்டுகிறது
  • இந்த பயத்தின் காரணமாக குழப்பமான சூழல் ஏற்பட்டு மன இறுக்கம், எரிச்சல் ஆகியன ஏற்பட்டுவிடுகிறது
  • ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தலைப்பகுதியை நோக்கி தள்ளப்படுகிறது இதனால் இடைவிடாது தலைவலி ஏற்படுகிறது
  • இரத்த ஓட்ட தொய்வின் காரணமாக உடலில் உள்ள எலும்புகளும் தசைகளும் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு முடங்கிவிடுகின்றன இதற்காக இந்த விண்வெளி வீரர்கள் தினமும் 2 மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். இவர்கள் இந்த உடற்பயிற்சியை தவிர்த்துவிட்டால் பூமியில் தரையிரங்கியவுடன் இவர்களுடைய எலும்புகள் ஒரேடியாக முடங்கி உடல் முழுவதும் எந்த அசைவும் இல்லாத ஒருவகை ஊணம் எற்படும் அபாயம் உள்ளது!
  • விண்வெளியில் பயணிக்கும் போது அங்கு ஈர்ப்பு சக்தியின்மையால் கடுமையான மலச்சிக்கலும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலும் ஏற்படுகிறது.

தவிர்ந்துகொள்ளுங்கள்-அசுத்தம் (பகுதி-1)

இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்க்கு பஞ்சமில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்களுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலிமாகிக் கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது. அதிலும் குறிப்பாக உலக அளவில் தூய்மையில் முதலிடத்தை பிடிக்கும் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் இந்நோயின் பிறப்பிடமாக உள்ளன. அந்நாடுகளிலிருந்துதான் பிற நாடுகளுக்கு அந்நோய்களும் விமானங்கள் கப்பல்கள் வழியாக இறக்குமதியும் செய்யப்படுகின்றன. இந்நேரத்தில் நம்முடைய மனதில் ஒரு நியாயமான கேள்வி எழலாம். அந்நாடுகள் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடுகளாகவும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம்  பெற்றவையாகவும் உள்ளனவே! இதை வைத்து கொண்டு மிகத் தூய்மையாகவும், நோய் தடுப்பு முறைகளை மேற்கொண்டிருக்கலாமே?
இது ஏறக்குறைய உண்மையான கருத்துதான். ஆனால் நோய் வந்த பின் அதற்கான மருத்துவமும் மருந்தும் எடுத்து கொள்கிறார்களே தவிர அதற்கான நோய் தடுப்பு முறைகளையும் சரியான தூய்மையையும் அறியாதவர்களாகத்தான் இன்றைய அறிவியல் முன்னேற்றமடைந்தவர்களை காண முடிகிறது.

ஆனால் 1400 வருடங்களுக்கு முன் எந்த நவீன வளர்ச்சியுமடையாத இருண்ட காலத்தில், இஸ்லாம் நவீனவாதிகளுக்கு தூய்மையையும் நோய் தடுப்பு முறைகளையும் பாடமாக கற்றுத் தருகிறது. அதிலும் இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கமாக இருப்பதால் தூய்மையை கண்மூடித்தனமாக போதிக்காமல் இன்றைய விஞ்ஞானி உயர் தொழில்நுட்ப அறிவியல் சாதனங்களை வைத்து கொண்டு பல வருடங் களாக ஆய்வு செய்து ஒரு நோய்க்கான காரணிகளையும் அதன் தடுப்பு முறையான தூய்மையின் அவசியத்தை எவ்வாறு கூறுவானோ அதை போன்று கூறுகிறது.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

சூராவளி

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)
  
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
சூராவளி என்பது என்ன?
சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வளைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

ஜம்ஜம்-அதிசய நீரூற்று

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன.அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.யாரேனும்(ஏக இறைவனை)மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்(3:97)

மக்காவில் உள்ள ஜம் ஜம் நீரூற்று அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சியாகும்.இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள்.
                                                                           

                                                                                                                   (பழைய படம்)

சனி, 16 ஏப்ரல், 2011

தொப்பி-ஒர் விளக்கம்


 

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சுயமரியாதையும் யாசகமும்...!

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர் தனது சுய கவுரவத்தை இழந்து விடக்கூடாது.

ஆனால் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்யும் சிலர் அவர்களுடைய மானம் மரியாதைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அடுத்தவர்களிடம் கையேந்துகிறார்கள்.இஸ்லாம் இவர்களுடைய இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது.

இதே நேரம் அடுத்தவர்களுக்கு தர்மம் செய்பவர்களை தாராளமாக வழங்கும்படியும் சொல்கிறது.

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில் 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள்
நூல் புகாரி 1433.

நீ தர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக் கொள்ளாதே அவ்வாறு செய்தால் இறைவனின் கொடை உனக்கு வழங்கப் படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும் என்ற நபியவர்களின் வார்த்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் விஷயத்தில் நாம் கஞ்சத்தனம் படக்கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

பூண்டு

உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும்.இரத்த அழுத்தம் வராமல் காக்கும். இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.
நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.

மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். தாய்ப்பால் சுரக்கும்.மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
ஆனால் பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது.
அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.
பூண்டு, வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர்.
இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன.

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-2

அஸ்ஸலாமு அலைக்கும், 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்
ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுடைய "The God Delusion" புத்தகத்தை பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். மிக பரபரப்பாய் விற்பனையான புத்தகம் அது. அதில், தன் புத்தகத்தின் முக்கிய புள்ளிகள் என்று சிலவற்றை 157-158 பக்கங்களில் குறிப்பிடுகிறார் அவர். அதில் என்னை ஆச்சர்யமூட்டியது பின்வரும் தகவல். 
"We should not give up the hope of a better explanation arising in physics, something as powerful as Darwinism is for biology"

அதாவது, அவர் என்ன சொல்லவருகிறாரென்றால், உயிரினங்கள் பூமியில் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்குவதற்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு இருக்கிறது (???), அதுபோல இந்த உலகம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியான விளக்கத்தை கண்டுபிடிப்பதில் நாம் சோர்ந்துவிடக்கூடாது என்பது.

வியாழன், 14 ஏப்ரல், 2011

சிறுதுளிக்கு பெருவெள்ளம்...!

சிறிய காரியங்கள் என்று நாம் கருதும் பல செயல்களை நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்ற மிகப் பெரிய பரிசை அள்ளித் தரும் காரியமாகக் காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் மக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை அகற்றுவதாகும்.

ஒரு மனிதர் வழியில் இருந்த முள் மரத்தைக் கடந்து சென்றார். அப்போது, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது முஸ்லிம்களுக்குத் தொல்லை தரக் கூடாது என்பதற்காக இதை அவர்களை விட்டும் அகற்றுவேன்'' என்று கூறி (அதை நிறைவேற்றி)னார். இதனால் அவர் சுவர்க்கத்தில் நுழைக்கப்பட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4744)

மக்களுக்குத் தொல்லை தரும் விதமாக இருந்த முள் மரத்தை வெட்டியெடுத்து, மக்களுக்கு நல்ல பாதையை அமைத்துக் கொடுத்ததன் காரணமாக ஒருவர் சுவர்க்கம் செல்ல முடிந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தக்காளி

தக்காளியில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.
தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது

இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.

புதன், 13 ஏப்ரல், 2011

ஸஜ்தாவின் சிறப்புகள்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று
கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின்இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள்.தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின் பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான்.சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர் மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர்.அப்போது இறைவன் அவர்களை நோக்கி 'நானே உங்களுடைய இறைவன்' என்பான்! அதற்கு அவர்கள் 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம், எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்' என்பார்கள்.பின்னர் அல்லாஹ் அவர்களிடம் வந்து 'நானே உங்களுடைய இறைவன்' என்பான்.அதற்கு அவர்கள் 'நீயே எங்களின் இறைவன்' என்பார்கள்.

உலக, மற்றும் மறுமைக்கான இரண்டு நன்மைகள்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
 29(45)

29:45. (முஹம்மதே!) வேதத்திரிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.உலக, மற்றும் மறுமைக்கான இரண்டு நன்மைகள்

உலக, மற்றும் மறுமைக்கான இரண்டு நன்மைகள் அதிகம் அடங்கி இருப்பது இஸ்லாம் கூறும் நற்செயல்களில் தொழுகை என்ற நற்செயலிலாகும்.

உலகில் வாழும் பொழுது, உள்ளத்தில் அமைதியும் உடலில் ஆரோக்கியமும் ஏற்படுகிறது. மறுமையில் இறைவனை சந்திக்கும் பொழுது எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத இன்ப சுவனபதி பரிசாக கிடைக்கிறது.

உள்ளத்தில் அமைதி.

அல்லாஹ்வை நினைவு கூறுகின்றவர்களுடைய உள்ளம் அமைதிப் பெறுகின்றது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

(13:28). நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

பள்ளியில் சென்று தொழுதுவிட்டு வெளியில் வருகின்றவர்களுடைய முகம் பிரகாசத்தால் மின்னிக் கொண்டிருப்பதை அனுபவ ரீதியாகப் பார்த்திருக்கின்றோம்.

அதற்கு காரணம் இறைவனை தொழுத சந்தோஷத்தில் உள்ளம் அமைதிப் பெறுவதால் அகத்தின் அழகு முகத்தில் (மின்னுவது) தெரிகிறது.

சினிமா, ட்ராமா அல்லது இன்னப்பிற மோசமான காட்சிகளைக் கண்டு விட்டு வெளியில் வருகின்றவர்களுடைய முகத்தைப் பார்த்தால் இருள் கவ்விக் கொண்டிருப்பதைக் காணலாம்.

 அதற்கு காரணம் பொய்யான, மோசமான, வன்முறையைத் தூண்டக்கூடிய காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற வரையில் ஒருவித ஆவலால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு உடல் தற்காலிக உற்சாகமடைகிறது, அது நிருத்தப்பட்டதும் நரம்பு மண்டலம் சோர்வடைந்தாலும் நீண்ட நேரத்திற்கு பொய்யான, நடைமுறைக்கு சாத்தியமற்ற, காட்சிகளைக் கண்டதால் உள்ளம் அமைதி இழந்து ஆர்ப்பரித்துக் கொண்டே இருப்பதால் அது முகத்தில் பிரதிபிலிக்கும் பொழுது முகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

பெட்ரோல்(எரிபொருள்) தயாரித்துகொடுக்கும் பாக்டீரியா

எரிபொருள் ஒருபுறம் தீர்ந்து வருகிறது. மறுபுறம் மாசு பெருகி வருகிறது. எரிபொருளின் தேவையையும் பூர்த்திசெய்து, மாசையும் கட்டுப்படுத்துகிறது ஒரு பாக்டீரியா. அதிசயமாக இருக்கிறதா!
காற்றில் கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரிப்பதால் மாசு பெருகி உள்ளது. இந்த கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி பெட்ரோலாக வெளியிடுகிறது இந்த பாக்டீரியா. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா(Murraya koenigii).
இது ருட்டேசி(Ruataceae) என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள்(Amino Acids) உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

கமிஷன்களும், காம்ப்ளிமென்டுகளும்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா ? என்று பாரும்! என்று கூறிவிட்டு மக்களை அழைத்து அவரது செயலைக் கண்டித்து உரை நிகழ்த்தி அல்லாஹ்விடம் கைகளை உயர்த்தி ஒப்படைத்தார்கள்.... அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார்.
நூல்: புகாரி 6636.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இன்று அன்பளிப்புகள் என்ற பெயரில் தான் கைக்கூலிகள், ரகசியமாகவும், பராகசியமாகவும் வழங்கப்பட்டு ஏராளமான விஷயங்கள் கை மாறப்படுகின்றன.
அரசு அதிகாரிகளாக பணியாற்றுபவர்களிலிருந்து, தொழில் நிறுவனங்கள் தொடங்கி, சாதாரண ப்ளாட்பாரக் கடைகள் வரை பணியாற்றுபவர்களிடம் இந்த நிலை காணப்படுகிறது.
இவ்வாறு பெறப்படுவதை இஸ்லாம் கண்டிக்கிறது ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதை, ஒருவர் மற்றவரால் ஏமாற்றப்படுவதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்க வில்லை.
அரசு கருவூலத்திற்கு வருவது குறைவின்றி வரவேண்டும், முதலாளி மார்களுடைய லாபம் கஜானாவிற்கு குறைவின்றி வரவேண்டும், தொழிலாளிகளுடைய ஊதியம் வியர்வை காயும் முன் பேசப்பட்டதில் குறைவின்றி கிடைக்க வேண்டும். என்பதில் பாரபட்சம் பார்க்காது இஸ்லாம்.
அரசு அதிகாரிகள் பெறும் கையூட்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது செய்தித் தாள்களில் வருவதைப் பார்க்கின்றோம்.
பெரும் தொழில் நிறுவனங்கள் தொடங்கி ப்ளாட்பார கடைகள் வரை தொழிலாளிகளே நிறுவனங்களை நடத்துபவர்களாகவும், பெரும்பாலும் முதலாளிகள் பேங்க் பேலன்ஸை பார்ப்பவர்களாகவும், கல்லாக் கட்டுபவர்களாகவுமே இருப்பார்கள்.
விற்பனைப் பொருள்களை தொழிற்சாலைகளில், அல்லது வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் (Purchashing manager) களுக்கு தொழிற்சாலை அதிபர்கள் கமிஷன் கொடுப்பார்கள், அல்லது விலை உயர்ந்த அன்பளிப்புகளைக் கொடுத்து மடக்கி விடுவார்கள். அதனால் தொழிற்சாலையிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் போதே கூடுதல் விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை மறைமுகமாக ஏற்பட்டு விடுகிறது. 
 

வானின் வர்ணம்

மேகமில்லாத வானம் பகல் நேரத்தில் நீலநிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்று என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? வளி மூலக்கூறுகள் ஏனைய நிறங்களை விட நீல நிறத்தை அதிகம் அதிகம் சிதறலடையச் செய்வதே இதற்குக் காரணம்.  அப்போது சூரிய அஸ்தமனத்தின் போது மட்டும் சூரியனும் வானமும் இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களில் தோன்றுவது ஏன்? அதிகமான மக்கள் ஏன் விஞ்ஞானம் படித்தவர்கள் கூட இதன் காரணத்தை பிழையாகவும் அரைகுறையாகவுமே விளங்கியுள்ளனர். இந்த விஷயத்தை இயன்றவரை அறவே குறையற்றதாக பாமரர்களும் விளங்கும் வண்ணம் நாம் விளக்குகிறோம். 

வெள்ளொளியானது(light) 7 நிறங்களின் கலவை என்பதற்கு வானவில்லின் சாட்சியொன்றே போதும்.  இதை முதன்முதலில் நிரூபித்த ஐசாக் நியூட்டன் எனும் விஞ்ஞானியோ சாட்சிக் கூண்டில் நிற்க வைத்தது அரியத்தையாகும்.அரியம் என்பது கண்ணாடியினாலான முப்பரிமான முக்கோணம்(prism).அரியத்தினுடு வெள்ளை நிற ஒளியை அனுப்பும் போது 7 நிறங்களும் பிரிந்து வெளிப்படும். விஞ்ஞான மொழியில் இது நிறமாலை( spectrum ) எனப்படும். ஒவ்வொரு நிறமும் தனக்கே உரித்தான அலைநீளங்களைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

சிவப்பு நிறமானது பெரிய அலைநீளத்தைக் கொண்டது.  இதன் அலைநீளம் 720 நனோ மீற்றர் (nm) ஆகும். ஒரு நனோ மீற்றர் என்பது ஒரு மீட்டர் நீளத்தின் 100 கோடியில் ஒரு மடங்கு. அலை நீளம் குறைந்தது ஊதா நிறமாகும், இது 380 nm  அலைநீளம் உடையது.   இதற்கு இடைப்பட்ட நிலையில் உள்ள நிறங்களின் அலைநீளத்துக்கு அமைய ஏறுவரிசை வருமாறு, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு.