அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 30 ஜூன், 2011

வாக்குறுதி மீறுதல்!

இன்று வாக்குறுதி மீறுதல் என்பது தாய், தகப்பன், கணவன், மனைவி என்ற உறவு முறைகளிலும் தொழிலாளி, முதலாளி, ஏழை, பணக்காரன், நண்பன் என்ற அனைத்து மட்டங்களிலும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.அதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.இதனால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்.
 
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளியைக் காப்பாற்ற மருத்துவர் வரவில்லையென்றால் நோயாளியின் உயிர் போகிறது. நேரம் தவறி பேருந்து நிலையத்திற்கோ இரயில்வே ஸ்டேஷனுக்கோ நாம் சென்றோம் என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் போகிறது. இதனால் நம்மை நம்பி, காத்துக் கொண்டிருப்பவர்களின் நேரமும் காலமும் பொருளும் பணமும் விரையமாகிறது. இதனால் நம்மீதுள்ள நம்பிக்கை பிறரிடத்தில் குறைந்துவிடுகிறது. இந்த வாக்குறுதி மீறுவதால் நம்முடைய வாழ்வில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீதைப் பேசக்கூடிய நம்மவர்கள் வாக்கு மீறுவதை அல்வா சாப்பிடுவதைப் போல நினைக்கிறார்கள். ஆலோசனைக் குழு இத்தனை மணிக்கு நடக்கும் என அறிவித்துவிட்டு அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு நேரத்தில் வருவார்கள், ஒரு காரியத்திற்கு வாக்களித்து விட்டு, இதோ செய்து முடித்து தருகிறேன் என்பார்கள். ஆனால் ஒருக்காலும் அந்த வேலையை முடித்துத் தந்தபாடிருக்காது.இவ்வாறு வாக்குறுதி கொடுத்து மாறு செய்பவர்களுக்கு நபியவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறார்கள்.

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்.அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (33)
 

நவீன வசதிகளுடன் அதிவேக பாஸ்போர்ட் மையங்கள்!

தஞ்சை மற்றும் திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விரைவு பாஸ்போர்ட் அலுவலகங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. இவை பொதுமக்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க வகை செய்யும்.
பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்கும் வகையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.
இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள மாவட்டங்களுக்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்தத் தடையும் இல்லை.

இந்தச் சேவை மையங்கள் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறை, விசாரணை அறை, குழந்தைகள் பராமரிப்பு பிரிவு மற்றும் கூடுதலான கவுன்டர்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஜெராக்சும் இங்கேயே எடுத்துக் கொள்ளலாம். இதற்காக தனிக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

ஆன்லைன் மூலம் செயல்படும் இந்த மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கும், ஆன்லைனில் காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் பணிக்காக 8 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இந்தச் சேவை மையத்துடன் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களும் பிரத்யேக மென்பொருள் மூலம் இணைக்கப்படும்.விண்ணப்பங்கள் குறித்த காவல்துறையினரின் விசாரணை அறிக்கை ஆன்லைன் மூலம் சேவை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதனால் விண்ணப்பதாரர்களுக்கு தற்போது உள்ளதை விட, 10 நாட்கள் முன்கூட்டியே பாஸ்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.அதேசமயம் காவல்துறையினரின் விசாரணை அறிக்கை தேவைப்படாத நபர்களுக்கு 2 நாளிலேயே பாஸ்போர்ட் கிடைக்கும் வகையில் சேவை வேகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : manarkenitimes

புதன், 29 ஜூன், 2011

இத்தா

சில முஸ்­லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் வெள்ளைநிற ஆடையை அணிவிக்கின்றனர். நற்காரியங்களில் அவர்கள் வருவது அபசகுணம் என்று கூறி ஒதுக்கி வைக்கின்றனர். இது குற்றமாகும். இத்தா பற்றிய சரியான விளக்கம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே அது பற்றிய விபரங்களை காண்போம்.

கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். மேலும் திருமண ஆசையைத் தூண்டக்கூடிய அலங்காரங்களை செய்யக்கூடாது. இந்த கால கட்டமே இத்தா எனப்படும்.
கணவனை இழந்த பெண் நான்கு மாதங்களும் பத்து நாட்கள் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், அவர்கள் மறுமணம் செய்யக்கூடாது.

பொது மருந்துகளால் முதியவர்களுக்கு உயிரிழப்பு அபாயம்-ஆய்வுத் தகவல்

ஆயிரக்கணக்கான முதியவர்கள் தங்களுக்கு பழக்கமான பொது மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.

அலர்ஜி, வலி நிவாரணி மற்றும் ரத்த ஓட்டத்தை இழக்கச் செய்தல் போன்றவற்றிற்கு மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதில் பொதுவான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மாத்திரைகளால் மூளைப்பகுதியில் நினைவு இழப்பு நிலையும், சில நேரங்களில் மரணத்தையும் முதியவர்களுக்கு ஏற்படுத்துகிறது என ஆய்வாளர்கள் கூறினர்.

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 80 மருந்துகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது அந்த மருந்துகளால் முதியவர்களுக்கு மூளைப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருப்பது தெரியவந்தது. மேலும் நியூரோட்ரான்ஸ் மீற்றரை தடுப்பதாகவும் உள்ளது. இந்த நியூரோட்ரான்ஸ் மீற்றர் அசிட்டைல்கோலன் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் அமெரிக்க முதியோர் சொசைட்டி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களிடம் பிரிட்டன் பகுதியில் வசிப்பவர்களிடம் நடத்தப்பட்டது. மொத்தம் 13 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நன்றி : newsonews

செவ்வாய், 21 ஜூன், 2011

சிறுநீர், மலம் கழிப்பதின் ஒழுங்குகள்.

மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை. மற்றொருவர் கோள் சொல்லி­த்திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி­) , நூல் : புகாரி (218)

கிப்லாவை முன்னோக்கி உட்காருதல் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். '' உங்களில் ஒருவர் மலம், சிறுநீர் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கக் கூடாது . தமது முதுகுப் புறத்தால் பின்னோக்கவும் கூடாது, .

அறிவிப்பவர் : அபு அய்யூப் (ரலி­) , நூல் : புகாரி (144)

கழிப்பறையாகவோ அல்லது சுற்றிலும் மறைப்புள்ள இடமாகவோ இருந்தால் கிப்லாவை முன்னோக்கி உட்காருவதில் தவறில்லை

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி­) அறிவிக்கிறார்கள். நீர் (மலம் கழிக்கும் போது) உமது தேவைக்காக உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தயோ முன்னோக்கி விடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒரு நாள் எங்கள் வீட்டுக் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்.

நூல் : புகாரி (145)

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலைமாதம் 8-ம் தேதி துவங்குகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு இம்மாதம் 30 தேதியும், தொழில் பிரிவினருக்கு ஜூலை மாதம் 1-ம் தேதிமுதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு தேதி 7-ம் தேதியும் நடைபெறுகிறது.

பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து 35நாட்கள் வரை நடைபெற உள்ளது. மேலும் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேண்டம் எண்களை வழங்கி பள்ளி உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: இதுவரையில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 509 விண்ணப்பங்கள் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் வந்துள்ளன.மொத்த காலியிடங்கள் ஒருலட்சத்து 25 ஆயிரமாக உள்ளது என தெரிவித்தார்.

நன்றி : தாளம்நியூஸ்

திங்கள், 20 ஜூன், 2011

அல்லாஹ் என்றால் யாருங்க? (பகுதி - 2)

அல்லாஹ் ஒருவன், அவனுக்கு இணை துணை கிடையாது!

இஸ்லாம் போதிக்கும் கடவுள் கொள்கை உலகில் உள்ள மற்ற மதங்களின் இறைக் கொள்கைகளை விட சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம் இஸ்லாம் ஓரிரைக் கொள்கையை போதிக்கிறது மற்ற மதங்கள் அனைத்தும் பல கடவுள் கொள்கையை போதிக்கிறது!
ஒரு இறைவன் என்ற ஓரிரைக் கொள்கைதான் உண்மை என்பதற்கு கீழ்கண்ட காரணங்கள் தெளிவாக விளக்கும்

நீதி செலுத்த ஒரு இறைவன்தான் இருக்க வேண்டும்!

ஒருவனுக்கு அநீதி இழைக்கப்படும் போது அநீதி இழைக்கப் பட்டவனுக்கு உரிய நீதியை முறையாக செலுத்த வேண்டும் உதாரணமாக மூன்று கடவுள்கள் இருந்தால்

படைக்கும் கடவுள்இந்த மனிதனை நான் படைத்தேன் இவன் பாவியாகிவிட்டான் இவன் என்னை வழிபட்டான் எனவே படைத்த நானே இவனை மன்னிக்கிறேன் என்று கூறும்
கண்காணிக்கும் கடவுள்இந்த பாவியை நான் கண்காணித்து வந்தேன் என் கண்ணால் கண்ட நான் இவனை எவ்வாறு மன்னிக்க இயலும் என்று கூறும்
அழிக்கும் கடவுள்படைக்கும் கடவுள் மனிதனை படைத்துவிட்டது, கண்காணிக்கும் கடவுள் பாவியை கண்காணித்துவிட்டது எனவே அழிக்கும் கடவுளாகிய நான்தான் இவனை தண்டிப்பதா? மன்னிப்பதா என்று தீர்மானிக்கும் உரிமை படைத்தவன் என்று கூறும்

உருளைகிழங்கு

புனைப்பெயர்

ஸ்பட், மர்பி, பூமி ஆப்பிள்

பணி

பல நாடுகளில் நிரந்தர உணவு, மற்ற காய்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சூப், சாலட், கூட்டு, குருமா குழம்பாக பரிணமிக்கும். வறுத்து, அவித்து, பொரித்து சமையல் செய்ய ஒத்துழைக்கும்.

உபரி பணி

பசை, ஆல்கஹால், டெக்ட்ஸ்ரோஸ், குளுக் கோஸ் தயாரிக்க பயன்படுதல்.

வெள்ளி, 17 ஜூன், 2011

பரிணாமக் கோட்பாடு (Evolution Theory) - 9

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......


وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِّن مَّاءٍ  ۖ فَمِنْهُم مَّن يَمْشِي عَلَىٰ بَطْنِهِ وَمِنْهُم مَّن
يَمْشِي عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَىٰ أَرْبَعٍ ۚ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரால் படைத்தான்.அவற்றில் வயிற்றால் நடப்பவை உள்ளன.இரு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன.நான்கு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன.தான் நாடியதை அல்லாஹ் படைப்பான்.அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.(அல்-குர்ஆன் 24:45)

பாம்பென்றால் படையும் நடுங்கும்என்பார்கள். அவ்வளவு பயம்! உண்மையில் தரையில் உடலை வளைத்து வளைத்து ஊர்ந்து செல்லும்போது பாம்பின் தோற்றம் மிகவும் அழகானது. இது வழுவழுப்பான நீண்ட உடற் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது.

உலகில் 3100 வகைப் பாம்புகள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஏனையவற்றிலிருந்து பண்புகளிலும் வாழுமிடங்களிலும் நிறங்களிலும் மாறுபட்டவை. பாம்புகளில் மிகவும் கொடியனவாக நல்ல பாம்பு, கருநாகம், கண்ணாடி விரியன், கட்டுவிரியன் மற்றும் அனகொண்டா (Anaconda) போன்றன கருதப்படுகின்றன.

பெற்றோர்களே..!குழந்தைகளின் உடல்நலனை கவனியுங்கள்..!

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் உலகில் பெரும்பாலனவர்கள் அவதிப்படுவதாக மருத்துவ சான்றுகள் கூறுகின்றன. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி, மருத்துவ பராமரிப்பின்மை ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்நிலையில் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஹார்ட் ஸ்ட்ரோக்கால் அதிகம் தாக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் டயடிக் அசோசியேஷனும் உடல் பருமன் குறித்து ஆய்வு செய்யும் மென்ட் தனியார் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து பால் சாசெர் தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்புக்கு பெற்றோர்தான் முழு முதற்காரணம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

மெகா சீரியல் பிரியர்க்ளே..!உஷார்....!-அதிகம் டி.வி. பார்த்தால் விரைவில் மரணம்!?

"இடியட் பாக்ஸ்' என்று அழைக்கப்படும் தொலைக்காட்சியை அதிகம்

பார்த்தால் இளம் வயதில் மரணம் ஏற்படும் என்று ஆய்வுகள்

தெரிவிக்கின்றன.அதிக நேரம் டிவி பார்ப்பதினால் சர்க்கரை நோய், இதய

அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்படும் என்று

அமெரிக்காவிலுள்ள "ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்' என்ற

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில்

தெரிவித்துள்ளது.

ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் டிவி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் தெரிவித்தனர்.

புதன், 15 ஜூன், 2011

ஆப்பிள்

ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.

கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.

பைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது. வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
நன்றி : indusladies

செவ்வாய், 14 ஜூன், 2011

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

உலகில் வாழ்கின்ற காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவியாக வாழ்வது மனிதனின் பண்பாக இருக்கிறது.அந்தப் பண்புஅனைவரிடத்திலும் அனைத்து சந்தர்பங்களிலும் ஏற்படுவதில்லை.சிலர் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக அநியாயம் செய்து விடுகிறார்கள்.அப்படி அநியாயம் செய்வோரில் பெரும்பாலானோர் அநியாயத்தின் விபரீதத்தை புரிந்து கொள்வதில்லை.அதன் விபரீதம் நமக்குத் தெரிந்தால் அடுத்த மனிதனுக்கு அநியாயம் செய்வதை நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.

நபி(ஸல்)அவர்கள் ஒரு முறை முஆத்(ரலி)அவர்களை யமனுக்கு ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பி வைத்தார்கள்.அப்போது முஆத்(ரலி)அவர்களிடம் பாதிக்கப் பட்டவனின் துஆவுக்கு அஞ்சிக்கொள் அவனுடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் கிடையாது என்று கூறினார்கள்.(புகாரி : 1401)

அதாவது ஒரு மனிதன் இன்னொருவனுக்கு ஏதாவது அநியாயம் செய்து விட்டால் அந்த அநியாயத்திற்கு சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அவர்கள் மன்னித்தால் அல்லாஹ்வும் மன்னித்து விடுவான்.

பாதிக்கப்பட்டவன் மன்னிக்காவிடில் அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான் என்பது இஸ்லாமிய அடிப்படை.பாதிக்கப்பட்டவன் காபிராக இருந்தாலும் சரியே!

பாதிக்கப்பட்டவன் எப்படி அல்லாஹ்விடம் கேட்கிறானோ அப்படியே அல்லாஹ்வும் அதனை ஏற்றுக் கொள்வான்.

பனிக்கட்டிகளிலிருந்து தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முயற்ச்சி

ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகளை கப்பல் மூலம் கட்டி இழுத்து தேவையான இடங்களுக்குக் கொண்டு சென்று தண்ணீர் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் ஜார்ஜஸ் மோகின்(86). இவர் கடந்த 30 ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தைப் போக்குவதற்கு ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள மலை போன்ற பனிக்கட்டிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார். கடந்த 1977ல் சவுதி அரேபியாவின் அப்போதைய இளவரசர் அல் பைசலுடன் இணைந்து "ஐஸ்பெர்க் டிரான்ஸ்போர்ட் இன்டர்நேஷனல்" என்ற அமைப்பைத் துவக்கினார். அதன் பின் பனிக்கட்டிகளை இழுத்து வருவது குறித்த ஆய்வில் தீவிரமாக இறங்கினார்.எனினும் அக்கால கட்டத்தில், தொழில்நுட்பம் அவ்வளவாக முன்னேறாததால் அவரது குறிக்கோள் நிறைவேறுவதில் பல தடங்கல்கள் எழுந்தன. தற்போது பிரான்சை சேர்ந்த "டசால்ட் சிஸ்டம்ஸ்" என்ற நிறுவனம் ஜார்ஜசின் குறிக்கோளை முப்பரிமாணப் படங்கள் மூலம் நிறைவேற்றித் தந்துள்ளது. இதில் பனிக்கட்டியின் பயணத்தின் போது ஏற்படக் கூடிய இயற்கைச் சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் ஆராயப்பட்டுள்ளன.

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்க்கான கவுன்சிலிங் வரும் 30ம் தேதி தொடங்குகிறது

சென்னை : பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம், மே மாதம் 16ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி  வரை வினியோகம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கவும் ஜூன் 3ம் தேதி  தான் கடைசி நாள். 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. அதில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

வரும் 21ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து, 30ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது. முதல் நாளில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் சிறப்பு பிரிவை (கோட்டா) சேர்ந்தவர்களுக்கு கவுன்சலிங் நடக்கும். ஜூலை 1ம் தேதி பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்குகிறது. முதல் ஏழு நாட்கள் பொது பிரிவினருக்கான கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி : தலைப்பு

திங்கள், 13 ஜூன், 2011

அல்லாஹ் என்றால் யாருங்க? (பகுதி - 1)

அல்லான்னா யாருங்க! (சகோ. ஜெகதீஸ்வரன்)

பதில்

بسم الله الرحمن الرحيم

(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்

  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
  • சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமி உட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும், இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
  • பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம், மழைக்காலம், வெயில்காலம் ஆகியன ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
  • நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?

ஞாயிறு, 12 ஜூன், 2011

தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல்

தூத்துக்குடி: தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து 13ம் தேதி, நாளை தொடங்குகிறது.

இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற 9 அடுக்கு கொண்ட பிரமாண்ட சொகுசு கப்பல் முதல் பயணத்துக்கு தயாராக உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும், பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்தியா- இலங்கை அரசுகள் புரிந்துணர்வு ஓப்பந்தம் செய்துள்ளன.

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 13ம் தேதி, நாளை தொடங்குகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனைமத்தில் வைத்து அன்று மாலை 3 மணிக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன் கொடியசைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் கப்பல் அமைச்சக அதிகாரிகள், துறைமுக பொறுப்பு கழக ஊழியர்கள், முக்கிய விருந்தினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி துறைமுக சபைத் தலைவர் சுப்பையா மற்றும் துறைமுக சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள செய்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிக்கு ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற சொகுசு கப்பல் பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. மும்பையை சேர்ந்த பிளமிங்கோ டூயூட்டி பெய்டு ஷாப் என்ற நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஏஜென்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் பயணிகள் ஏற்றும் மற்றும் இறக்கும் பணிகளை செய்ய உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து 152 கடல் மைல் தொலைவில் உள்ள கொழும்வுக்கு இந்த கப்பல் 12 மணியிலிருந்து 14 மணி நேரத்திற்குள் சென்று சேரும். தூத்துக்குடியில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு கொழும்புவை சென்றடையும். கொழும்புவிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேரும்.

நன்றி : thatstamil

செல்ஃபோன்களால் அதிகரிக்கும் விமான விபத்துகள்

விமானத்தில் பயணிக்கும் போது கைத்தொலைபேசிகளை பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கைத்தொலைபேசிகளில் உள்ள மைக்ரே அலைகள் விமானத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பழுதடைய செய்வதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில் 75 விமான விபத்துக்கள் கைத்தொலைபேசிகளால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது யாரேனும் கைத்தொலைபேசியில் பேசினால் விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐபேடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைத்தொலைபேசிகள் போன்று சில உயர் ரக போன்கள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியன. இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான ஓட்டிகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் ‌தாக்கும்.

இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனவே விமானப்பயணிகள் தங்களது கைத்தொலைபேசிகளை முதலில் ஓப் செய்து கொள்ள வேண்டும் என விமானஓட்டிகள் அறிவுறுத்த வேண்டும்.

நன்றி : newsonews

சனி, 11 ஜூன், 2011

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரம்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. 

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சிட்னி நகரின் பரபரப்பு மிக்க சாலைகளில் மிகப்பெரிய அளவிலான விளம்பரப்பலகைகளை நிறுவியுள்ளது இந்த அமைப்பு. கடந்த மே 26 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விளம்பரங்கள் இன்னும் நான்கு வார காலத்திற்கு அந்த பகுதிகளில் நீடிக்கும். 

இது குறித்த செய்தி ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க நாளிதழான "சிட்னி மார்னிங் ஹெரால்ட்"டில் வெளிவந்தவுடன் கூடவே பரபரப்பும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த விளம்பர பலகைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் இந்த பத்திரிகை "கிருத்துவ நம்பிக்கையின் அடிப்படையிலேயே கை வைப்பதாக உள்ளன இந்த விளம்பரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. 

அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பர பலகையில்? 

அவரைச் செடியில் இ.கோலி!?

லண்டன்: ஜெர்மனியை பீதிக்குள்ளாக்கிய ஈ-கோலி பாக்டீரியா மீண்டும் அவரை செடிகள், பயிறு வகைகளில் பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனியி்ல் ‌வெள்ளரிக்காய்களில் ஈ-கோலி எனும் விஷ பாக்டீரியா 20 பேர்களை பலி வாங்கியது. மேலும் இந்த விஷ பாக்டீரியா ‌ஐரோப்பா முழுவதையும் பீதிக்குள்ளாக்கியது. தற்போது அவரைச் செடியில் ஈ- கோலி பாக்டீரியா தொற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‌ஜெர்மனியில் அவரை செடிகள் தீவிர ஆய்வுக்குட்படுத்தப்பட்டு்ள்ளன. இது குறித்து ஜெர்மனியின் ‌தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ரெயின்ஹார்ட் பர்ஜெர் கூறுகையில் வடக்கு ஜெர்மனியில் உள்ள சக்ஸோனி என்ற இடத்தின் பண்ணையில் பயிரிடப்பட்டிருந்த அவரை செடிகளில் ஈ-கோலி விஷ பாக்டீரிய தொற்றியுள்ளதாக தெரிவித்தார்.

ஜெர்மன் விவசாயப்பணிகளை கலங்கடித்துள்ள இந்த ஈ-கோலி பாக்டீரியாவினால் , காய்கனிகளை நுகரும் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி‌ வெளியிட்டு்ள்ளது. இதனால் நாட்டில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்களுக்கு பயன்படும் அவரைக்காய்கள், பீன்ஸ்கள், மொச்சை பயிறுகள் அனுப்பி வைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளரிக்காயில் பரவிய இந்த விஷ பாக்டீரியாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்‌ளதாக கூறப்படுகிறது.

நன்றி :தாளம்நியூஸ்

சூரியனிலிருந்து வரும் மிகப் பெரிய தீ பிழம்பு

சூரியனின் மேற்பரப்பில் இருந்து கக்கப்பட்ட பாரிய தீப்பிழம்பொன்று மணிக்கு 31லட்சம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. திங்கள்கிழமை முதல் இந்த தீப்பிழம்பு பூமியை நோக்கி வர ஆரம்பித்துள்ளது.பயங்கர சத்தத்துடன் இது பூமியை நோக்கி வந்துகொண்டுள்ள போதிலும் யாரும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பேராசிரியர் பிரயன் கொக்ஸ் தெரிவித்துள்ளார்.

சூரியன் என்பது பூமியின் அளவைப் போன்ற ஒரு மில்லியன் மடங்கு பெரிய ஒரு பாரிய அணு உலையைப் போன்றது. அங்கும் இங்குள்ளதைப் போன்ற மோசமான காலநிலை ஏற்படுவதுண்டு.கடந்த திங்கள்கிழமை சூரியனின் காலநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதனால் சூரியனிலிருந்து பாரிய தீ சுவாலை வெளிப்பட்டுள்ளது.இதனை சூரியக் கிளர்ச்சி என்றும் வர்ணிக்கலாம். மிகவும் சூடேறிய பில்லியன் கணக்கான எடை கொண்ட துணிக்கைகள் ஒன்று சேர்ந்து பாரிய சுவாலையாக வெளியேறியுள்ளன.

இருந்தாலும் இந்த தீ சுவாலையின் வெளிப்பாடு நேரடியாக பூமியை நோக்கியதாக அமையவில்லை. அதனால் இதன் தாக்கமும் அவ்வளவாக பூமியில் உணரப்படவில்லை.பூமியின் தூர வடமுனைப் பகுதியில் வானத்தில் ஒளி விளக்குகள் நடனமாடுவதுபோல் இதை ஓரளவு காணலாம்.

அண்மைய வரலாற்றில் சூரியனிலிருந்து மிகப் பெரிய தீ பிழம்பு வெளிப்பட்டது 1859 செப்டம்பர் 1ல். இதை கெரிங்டன் பிழம்பு என்று குறிப்பிடுகின்றனர்.ஆங்கில வானியல் நிபுணர் சர் ரிச்சர்ட் கெரிங்டன் இதைக் கண்டறிந்ததால் இந்தப் பெயரில் இது அழைக்கப்படுகின்றது.
இதனோடு ஒப்பிடுகையில் தற்போது வெளிப்பட்டுள்ள பிழம்பு மிகவும் சிறியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கெரிங்டன் பிழம்பு போன்ற ஒன்று 500 வருடங்களுக்கு ஒரு தடவைதான் இடம்பெறும் சாத்தியம் உள்ளதாம்.

நன்றி : newsonews

வெள்ளி, 10 ஜூன், 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory) - 8

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். 

ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்தனர்.இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. 

பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது பதிவிற்கு அவசியமென்று கருதுகின்றேன். 

ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நரம்பணுக்கள் (Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.   
ஒரு இயந்திரத்தில் உள்ள ஒயர்களை (wire) போல நரம்பணுக்களும் மின் சைகைகளை (Electrical signal) சுமந்து செல்கின்றன. (இதனை செய்வது நரம்பணுக்களில் உள்ள AXON என்ற கேபிள் போன்ற பகுதி)

எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.

வியாழன், 9 ஜூன், 2011

டென்மார்க்கில் கோழி இறைச்சியிலும் இ.கோலி

மரக்கறி வகைகளில் மோசமான இ.கோலி பக்டீரியா பரவியுள்ளதால் ஏற்பட்ட பாதிப்பு அடங்கும் முன்னர் டென்மார்க்கில் கோழி இறைச்சியிலும் இந்த வகை பக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரிய அதிர்வுகள் இன்னும் ஏற்படவில்லை என்றாலும் இத்தகவல் குறித்த எச்சரிக்கை வேண்டும் என்று டியுரி ஆய்வகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கோழிகளிலும் கோழி இறைச்சிகளிலும் சுமார் 200 வகையான பரிசோதனைகளை செய்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் கோழி இறைச்சிகளிலேயே பக்டீரியா தாக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது.இப்போது தான் டெனிஸ் இறைச்சியில் இ.கோலி பக்டீரியா இருப்பதாக பரிசோதனையாளர்கள் கூறுகிறார்கள்.

27 பேருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்ட பின்னரே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : newsonews

ஆஸ்திரேலிய ஆழ் கடலில் எரிமலை

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிர் பொருட்கள் கூடிய எரிமலை ஒன்று ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஆஸ்திரேலிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் .
கிரேட் ஆஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு பகுதி என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது கடலுகடியிலிருந்து 200 மீட்டர் மேலெழும்பி உள்ளது எனபது குறுப்பிடத்தக்கது. இது தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும் ஆனால் இதில் உயிர் பொருட்கள் நிறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர் .

சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடிங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும் , இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது என்றும் , இப்பகுதியில் எரிமலைகள் நிரந்து இருபினும் இந்த எரிமலை எந்த வித மனித தொந்தரவுகளும் இல்லாமல் இருபதே இதன் தனி சிறப்பு , இதனாலேயே இதன் உயிர்த்தன்மை பாதுகாக்கப் படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மீண்டும் பயணம் செய்து அங்கு உயிர் வாழும் உயிரிகள், தாவரங்கள் மற்றும் உயிர் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து மேலும் பல ஆராய்சிகள் மேற்கொண்டு இப்பகுதியின் உயிர்பரவல் எத்தகையது என்பதை கண்டறிவோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நன்றி : thalaippu

புதன், 8 ஜூன், 2011

2030ல் கடும் உணவுப்பஞ்சத்தை உலகம் சந்திக்கும் : சர்வதேச நிறுவனம் எச்சரிக்கை

லண்டன் :  வரும் 2030ம் ஆண்டுக்குள், உலகளவில், முக்கிய உணவுப் பொருட்களின் விலை, இரு மடங்காக உயரும் அபாயம் இருப்பதால், உலக நாடுகளின் தலைவர்கள், விவசாய உற்பத்தியைப் பெருக்க விரைந்து செயல்பட வேண்டும்' என, சர்வதேச நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

சர்வதேச நிறுவனமான, "ஆக்ஸ்பாம்,' வறுமை மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடி வருகிறது. இந்நிறுவனம், சமீபத்தில், "வளரும் வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்னும் 20 ஆண்டுகளுக்குள், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, 120 சதவீதம் முதல் 130 சதவீதம் வரை அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தால், விளைச்சலில் ஏற்படும் மாற்றங்களே, இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கும். இன்றைய நிலையில், உலகளவில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள், தாங்கள் அன்றாடம் பெறும் கூலியில், 80 சதவீதத்தை, உணவுக்காகவே செலவிட வேண்டியுள்ளது.

உற்பத்தி குறைந்து கொண்டே வருவதால், 2050ல், உணவுப் பற்றாக்குறை, 70 சதவீதமாக அதிகரிக்கும். 1990ல் இருந்தே, உணவு உற்பத்தி பாதியாகக் குறைந்து விட்டது. பத்தாண்டுகளுக்கு ஒரு சதவீதமாக, அது குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொருவருக்கும் குறைவில்லாத அளவு உணவு அளிக்கக் கூடிய ஆற்றல் இருந்தும் கூட இன்றைய நிலையில், ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் அவதிப்படும் அவலம் நிலவுகிறது.

கிழக்கு ஆப்ரிக்காவில் மட்டும், 80 லட்சம் மக்கள், உணவுப் பற்றாக்குறையால் அல்லல்படுகின்றனர்.உணவுப் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளால், மிக மோசமான ஒரு காலகட்டம் உருவாகும். அதை நாம் தவிர்க்க வேண்டும் என்றால், பருவ நிலைகளில் பெரும் மாற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் உலக நாடுகளின் தலைவர்கள் விரைவான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும். இவ்வாறு "ஆக்ஸ்பாம்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தாளம்நியூஸ்

செவ்வாய், 7 ஜூன், 2011

அதிசய பேனா

இவ்வுலகில் நாளுக்கு நாள்

தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு

தான் இருக்கின்றன. அதற்கு இந்த

பேனா ஒரு உதாரணம்.இதன் பெயர்

கலர் பிக்கர். இதனை வடிவமைத்தவர்

கொரியாவைச் சேர்ந்த ஜின்சன் பார்க்.

இந்த பேனாவின் சிறப்பம்சம் கலர்

சென்சார் தான். அதை இயக்கும்

பட்டன், தேர்ந்தெடுத்த கலரை

காட்டும் பகுதி, பேனா முனை,

ஆர்.ஜி.பி மையை சேமிக்கும் இடம்,

ஆர்.ஜி.பி சென்சார் என வியக்கத்தக்க

தொழில்நுட்ப பகுதிகள் உள்ளன.


 

திங்கள், 6 ஜூன், 2011

வெள்ளரிக்காய்க்கு ஐக்கிய அரபு நாடுகள் தடை

ஐரோப்பா நாடுகளில் இருந்து வெள்ளரிக்காய் இறக்குமதி செய்வதற்கு ஐக்கிய அரபு நாடுகள் தடைவிதித்துள்ளது.

ஸ்பெயினிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இ-கொயில் வெள்ளரிக்காயை உட்கொண்டதனால் அந்நாட்டில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமார் 1,150 பேர் இ-கொயில் நோயினால் பாதிப்படைந்துள்ளதாக ஜெர்மன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஸ்பெயின், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளரிக்காயில் இ.கோலி வகை பாக்க்டீரியா இருப்பதால், மேற்கண்ட நாடுகளிலிருந்து வெள்ளரிக்காயை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு நாடுகள் தடை விதித்துள்ளன.

வளைகுடா நாடுகளின் சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் இத்தடையை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றால், அங்கு காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என வளைகுடா நாடுகளின் அயலுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நன்றி : tamilwebdunia

நபிகளாரின் நற்குணங்கள் பகுதி - 2

நல்ல வார்த்தைகள்

அடுத்தவரைக் கண்டிக்கும் போதோ அல்லது சாதாரணமாகப் பேசும் போதோ அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசும் வழக்கமுள்ள தலைவர்கள் ஏராளம். பல கட்சிகளில் அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவர்களை மாநிலப் பேச்சாளர்களாகவும் நியமித்துள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பேச்சில் கண்ணியமும் மரியாதையும் நிறைந்திருக்கும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்கடம் பேசினார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள், நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் என்று கூறுவார்கள் என்று சொன்னார்கள்.அறிவிப்பவர்; மஸ்ரூக்,
நூல்: புகாரி (6035)
 

புற்றுநோய் பரவுவதை தடுக்கும் பீட்ரூட்

புற்றுநோய் பரவுவதை தடுக்கும், மலச்சிக்கலைப் போக்கும், பித்தத்தைக் குறைக்கும்.அரிப்பு, எரிச்சலைத் தவிர்க்கும், கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஞாயிறு, 5 ஜூன், 2011

நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை: நெல்லை மாவட்ட காற்றாலைகளில மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் மின்வெட்டு குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலகிலேயே காற்றாலை அமைப்பதற்கு சிறந்த இடமாக கலிபோர்னியாவுக்கு அடுத்த நெல்லை, குமரி எல்லை பகுதியில் உள்ள முப்பந்தலைதான் சொல்வார்கள். தற்போது உலகளவில் காற்றாலை மூலம் மின்உற்பத்தியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் காற்றாலை மூலம் மின் உற்பத்தியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதில் 216 இடங்களில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ஆயிரத்து 242 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம் எனவும், தமிழ்நாட்டில் 41 இடங்கள் காற்றாலை அமைக்க சாதகமான இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தற்போது 17 இடங்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சனி, 4 ஜூன், 2011

யா முஹம்மது என்று அழைக்கலாமா?

தமிழகத்தின் அனைத்து மதரஸாக்கள் மற்றும் ஆ­லிம்களின் ஃபத்வாக்கள்...?

நாம் நம்முடைய உயிரினும் மேலாக மதித்துப் போற்றும் பெருமானார் (ஸல்) அவர்களை யா முஹம்மது என்று பெயர் சொல்லி­ அழைக்கலாமா என்பதில் சர்ச்சை இருந்து வருவதை நாம் அறிகிறோம். இந்த சர்ச்சை தொடர்பாக சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் (1997ல்) இர்ஃபானுல்ஹக் என்ற நுல் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞரும், புரசைவாக்கம் பெரிய பள்ளிவாச­ல் இமாம் நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் அந்த நூலின் ஆசிரியர். தமிழகத்தின் முக்கியமான அனைத்து மதரஸாக்களிலும் அந்த நூலிற்கு வழங்கப்பட்டுள்ளது. மதரஸாக்களின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அந்த நூலைப் புகழ்ந்து எழுதிய மதிப்புரைகளும் அது தொடர்பான ஃபத்வாக்களும் அந்த நூ­லில் இடம் பெற்றுள்ளன. அந்த நூலில் மேற்கண்ட சர்ச்சை தொடர்பாக எழுதப்பட்ட கருத்துகளை ஒரு வரி பிசகாமல் அப்படியே தருகின்றோம்.

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?

சிலர் தரீக்கா என்ற பெயரால் அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்கின்றர். குறிப்பாக ரஸுலுல்லாஹீ (ஸல்) அவர்களுடைய திருநாமத்தை மரியாதையின்றி முஹம்மத் முஹம்மத் என்று செய்கின்றனர். சூஃபியாக்களுக்கு இது ஆகும் என்று கூறுகின்றனர். திக்ரு என்பதன் கருத்தையும் சரீயத்தின் சட்டங்களையும் சரியாக விளங்காத காரணத்தால் ஏற்படும் தீமையாகும் இது. அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்வது மிகப்பெரும் தீமையாகும் என்பதை பற்றிய விளக்கத்தை இங்கு காண்போம்.

அகத்தி கீரை

1. அகத்திகீரையை பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து தேங்காய் சேர்த்து சாப்பிட தலைசூடு மற்றும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.

2. அகத்திகீரையுடன் தேங்காய் சேர்த்து செய்த பதார்த்தங்களை சாப்பிட்டால் வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் நீங்கும்.

3. அகத்திகீரை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளைக் கோளாறு உள்ளவர்களுக்கு பூரண குணம் அடையும்.

4. அகத்திப்பூவையும், மொட்டுக்களையும் உணவாகப் பயன்படுத்திவர உடல் உஷ்ணத்தை போக்கும். பித்தம் சம்பந்தமான அனைத்து பிணிகளும் நீங்கும்.