அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 29 நவம்பர், 2011

இஸ்லாமியர்களுக்கான செல்போன்


இந்த நவீன காலத்தில் ஒவ்வரு நாளும் ஒவ்வரு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய உலக நடப்புபடி பெரும்பாலான மக்கள் செல்போன் தான் அதிகம் உபயோகித்து வருகிறார்கள். புதிய வசதிகள், புதிய மாடல்களில் செல்போன்களின் உற்பத்திகளும் நாளுக்கு நாள் பெருகி கொண்டுதான் வருகிறது. இவ்வாறு தற்போது ஐ டெல் நிறுவனம் இஸ்லாமியர்களுக்கான செல்போன் ஒன்றை விரைவில் அறிமுகபடுத்த இருக்கிறது. ஐ டெல் நிறுவனம் அறிமுகபடுத்த இருக்கும் இந்த ஐ டெல்-786 என்ற 2 சிம் பொருந்த கூடிய மாடல் செல்போனில் இஸ்லாமியர்களுக்கு 5 வேலை தொழுகையின் நேரத்தை கொண்டு அலாரம் அடிக்க கூடிய வசதியும், இஸ்லாமியர்களுக்காக தயாரிக்கப்பட்ட காலேண்டர் மற்றும் சாக்கட் காலேண்டர் வசதிகளும், 1.3 பிக்சஸ் கேமரா, சிறப்பான விடியோ ரேக்கார்டிங் வசதிகள், புழு டூத் வசதிகள், பொழுது போக்கு அம்சம் கொண்ட mp3 ,mp4 ,மிடியா பிளேயர் வசதிகளையும் கொண்டது,மேலும் இந்த செல்போனில் பயன்பாட்டிற்கு ஆங்கிலம்,ஹிந்தி,உருது,இந்தோனேசியா,துருக்கி, பெர்ஷியன் போன்ற 11 மொழிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த செல்போன் மூலம் வருகிற வருவாய் மூலம் 2.5 சதவீதம் பங்கு ஏழை இஸ்லாமிய குழந்தைகளுக்கு பயன்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்க உருவாக்கபட்டிருக்கும் இந்த ஐ டெல்-786 செல்போன் விரைவில் இந்திய சந்தைக்கு வர இருக்கிறது. இதனுடைய விலை ரூபாய் 2,999 ஆகும். 
நன்றி: மஸ்தூக்கா

வியாழன், 24 நவம்பர், 2011

நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள்

அகிலத்திலே அதிகமான மக்கள் அற்ப வாழ்விற்காக தங்களை அடகு வைத்து அசிங்கமான அர்த்தமற்ற காரியங்களிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள் ஆனால் நாம் அழிவில்லா மறுமை வாழ்விற்காக நம்மை அர்ப்பணித்து  இழிவான செயல்களை விட்டும் விலகி இனிய காரியங்களிலே ஈடுபட்டிக்கொண்டிருக்கிறோம். எந்தளவிற்கெனில் மார்க்க நெறிமுறைக்கு கட்டுப்படுவதுதான் முக்கியம் என்பதால், தடுமாறிக் கொண்டிருக்கின்ற ஊரையும் உறவினர்களையும் பகைத்துக் கொண்டு பல கடமையான சுன்னத்தான மற்றும் அனுமதிக்கப்பட்ட காரியங்களை செய்துக் கொண்டிருக்கிறோம்.

அதே நேரத்தில் நமது அமல்களெல்லாம் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்பட்டு ஆசைப்பட்ட சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில் சில தன்மைகளை நம்மிடமிருந்து நாம் வேறொடு களைந்தெரிய வேண்டும். அந்தபண்புகளின் அடையாளங்கள் தென்படுகின்ற நிலையிலே காலத்தை ஒதுக்கி வியர்வையை சிந்தி அருமையான காரியங்களை செய்திருந்தாலும் அவை அல்லாவிடத்திலே விலைமதிப்பற்றதாகிவிடும். வழங்கப்பற்ற அருட்கொடைகளை வாரி இறைத்திருந்தாலும் அக்காரியங்கள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாமல் வீணாகிவிடும். ஆகவே, நமது அமல்களை பாழ்படுத்தக்கூடிய அத்தகைய நச்சுப்பன்புகளை பற்றி இக்கட்டுரையிலே காண்போம்.

இணைவைத்தல்

நாள்தோரும் இறைநிராகரிப்பாளர்கள் நாடே போற்றுகின்ற வகையிலே நற்காரியங்களை செய்தாலும் சேவை செய்வதையே தங்களது கொள்கையாக கொண்டிருந்தாலும் மற்றவர்களின் வாழ்விலே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதையே தங்களது இலட்சியமாகக் கொண்டிருந்தாலும் அல்லாஹ் அவர்களுடைய அனைத்து அமல்கலையும் அழித்துவிடுவான் என்பதை அனைத்து முஸ்லீம்களும் அறிந்துள்ளனர்.

அந்த இறைநிராகரிப்பாளர்களிடம் நிறைந்துள்ளதைப் போன்றே பலவழிகேடான செயல்கள் முஸ்­மகளிடத்திலே ம­லிந்து காணப்படுகின்றன. காஃபிர்கள் தங்களது கடவுள்களை படைப்பினங்களின் தரத்திற்கு தாழ்த்தி பல விஷயங்களில் சிலைகளை வடிப்பதை போன்று பல பெயர் தாங்கி முஸ்­ம்கள் படைப்பினங்களான மனிதர்களை அவ்­யாக்கள் மகான்கள் ஷேகுமார்கள் என்று துதிப்பாடி அல்லாஹ்வுடைய அந்தஸ்துக்கு உயர்த்தி தர்கா வழிபாட்டிலே வீழ்ந்துகிடக்கின்றன. தாயத்து தகடு ஜோதிடம் குறிபார்த்தல் நல்லநேரம் கெட்டநேரம் போன்ற மூடநம்பிக்கையிலே முழ்கி இணைவைப்பிலே ஊரிப்போய்கிடக்கின்றனர்.

முஃமின்களாக நோன்பு தொழுகை ஹஜ் மற்றும் பல வழிபாடுகளை புரிந்தாலும் அவர்களது வாழ்விலே இணைவைப்பு என்பது சாக்கடை நீரைப் போன்று இரண்டறக்கலந்து காணப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் நற்காரியங்கள் ஏற்று கொள்பட்டு அதற்குரிய பிரதிபலனை பெற்று கொள்வார்களா? மாறாக நஷ்டவாளிகளாக மாறிவிடுவார்களா? என்பதை அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். 
(அல்குர்ஆன் 9:17)

இணைவைப்பாளர்கள் இமயமலையளவிற்கு நல்லமல்களை செய்திருந்தாலும் அல்லாஹ் அவற்றை அற்பமாகக் கருதி அழித்துவிடுவான். எந்தளவிற்கு எனில் இறைப்பணியை பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே மக்கள் மன்றத்திலே எடுத்துவைத்த நபிமார்களை கூட இணைவைத்தால் உங்களது அனைத்து அமல்களும் நாசமாகிவிடும் என அல்லாஹ் எச்சரித்துள்ளான். இதை திருமறையிலே கூறுகிறான்

''நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்ட மடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.  
 (அல்குர்ஆன் 39: 65 66)

ஆகவே, நமது அமல்கள் அங்கீகரிக்கப்பட்டு இன்பமான வாழ்வினை பெற முத­ல் இணைவைப்பின் சாயல் கடுகளவு கூட நமது வாழ்விலே பட்டுவிடாமல் கவனமாக வாழ வேண்டும்

புதன், 23 நவம்பர், 2011

திராட்சை

திராட்சைப் பழத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. திராட்சையை அப்படியே சாப்பிட யோசிப்பவர்கள் அதை ஜுஸாக சாப்பிடலாம். எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
 
ஒரு டம்ளர் கிரேப் ஜுஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்' ஆக வைத்துக்கொள்ள `டயட்'டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம்.

செவ்வாய், 22 நவம்பர், 2011

கோதுமை

நவதானியங்களில் ஒன்றான கோதுமையானது பனிக்காலங்களில் பயிராகின்றது. வட இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் இதுவே முக்கிய உணவாக மக்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
* வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.

உடல் பலம் அதிகரிக்க:

கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும்.
உலோகத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு வாய் மூலமாகவோ, சுவாசத்தின் மூலமாகவோ, தோல் வழியாகவோ உலோகம் உடலினுள் சென்று ரத்தத்தில் கலந்து விடுவதால் ஏற்படும் உலோக நஞ்சைப் போக்க, கோதுமை மாவை நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் போதும். அந்த நஞ்சு முறிந்துவிடும்.
கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படுகின்ற அதிகப்படியான ரத்தப்போக்கிற்கு கோதுமை கஞ்சியுடன் வெந்தயத்தூள், மஞ்சள் ஒரு சிட்டிகை கலந்து உட்கொள்ள கொடுக்க நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
கோதுமை மாவை நெய்விட்டு வறுத்து, சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், வெட்டை ஆகியவை குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை அதிக நன்மை தரக்கூடியது, இவர்கள் கோதுமையை ரொட்டி, அடையாக செய்து சாப்பிடுவது நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

வியாழன், 17 நவம்பர், 2011

உம்ரா

இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாஃப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது ஆகியவையே உம்ராவாகும்.
அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.
தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும், மக்காவாசிகளும் ஹஜ்ஜுக்காக மக்காவிலேயே இஹ்ராம் கட்டலாம். ஆனால், இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

ரமளானில் உம்ரா

ரமளானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1782, 1863