அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 29 ஜூலை, 2011

இறையில்லத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள் (பகுதி-2)

அலங்காரம் செய்தல்

இறையில்லத்திற்குள் இறைவனை வணங்குவதற்காக வரும்போது அலங்காரமாக, தூய்மையான ஆடையணிந்து வரவேண்டும் என்று இந்த வசனம் தெரிவிக்கின்றது.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் 7 : 31


ஆனால் இஸ்லாமிய சமுதாயம் தங்களை அலங்கரிப்பதை விட்டுவிட்டு பள்ளிவாசல்களை அலங்கரிப்பதை காண்கிறோம். பள்ளிக்குள் வரும்போது அழுக்குப்பண்டாரமாக, துர்நாற்றத்துடன் வருகின்றார்கள். ஆனால் பள்ளிவாசல்களை மின்விளக்குகளால் அலங்கரிக்கின்றார்கள்.

பள்ளிவாசல்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக வானாளாவிய அளவில் இராட்சத மின்விளக்குகளை பள்ளிவாச­ல் பொருத்துவதையும், சிறுசிறு மின்விளக்குகள் மூலம் பள்ளிவாசல் முழுவதையும் ஜோடனை செய்வதையும் இந்த வசனம் கூறுகின்றது என்று சொல்லி­ மக்கள் செய்யும் காரியத்தினை அனுமதிக்க முடியாது.

திங்கள், 25 ஜூலை, 2011

இறைநேசர்கள் யார்? (பகுதி-1)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  
இறைநேசர்கள் என்ற சொல்லுக்கான விளக்கம்

இறைநேசர்கள் அதாவது இறை (+) நேசர்கள் இறைவன் யாரை நேசிக் கிறானோ அவரே இறைநேசராக இருப்பார்.

இறைவன் யாரை நேசிக்கிறான், யாரை நேசிப்பதாக கூறுகிறான் என்பதை அறிந்துக்கொள்வது பற்றி அவனே தெளிவுபட அருள்மறை குர்ஆனில் கூறியிருக்கிறான்! மேலும் அல்லாஹ் யாரை குறிப்பிட்டு இவர் அவ்லியா என்று கூறவில்லையோ அவர்களை நாம் அவ்லியாவாக கருதமுடியாது! அப்படி நாம் கருதினால் நாம் அல்லாஹ்வின் மீது நாம் பொய்யை இட்டுக்கட்டிய குற்றத்திற்கு தள்ளப்படுவோம் இதை உணரவேண்டாமா?


சிலர் தர்காஹ்-கப்ருகளில் இருக்கும் இறந்த மனிதர்களை அவ்லியாக்கள் என்றும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைநேசர்கள் என்றும் வாய்கூசாமல் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள் அவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதற்கான ஆதாரத்தை முன்வைக்கவேண்டும்! மேலும் இவ்வாறு பொய் கூறுபவர்கள் கீழ்கண்ட இறைவசனத்தை படித்திருக்க வேண்டாமா?

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல் குர்ஆன் 10 : 17)

 

ஞாயிறு, 24 ஜூலை, 2011

நற்செயலுக்குக் கிடைக்கும் பரிசு.

இறைவன் மனிதனை உலகில் படைத்த நோக்கம் அவனை வணங்குவதற்காகத்தான்.அதன் காரணத்தினால் மனிதனுக்கு வாழ்வையும் மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளான்.மனிதன் வாழுகின்ற பொழுது நற் செயலை செய்கின்றானா? இல்லையா? என்பதை சோதித்துப் பார்க்கிறான். அவன் செயல்கள்; செய்தால் அதற்கு கூலி மரணத்தின் பின் மறுமையில் வழங்குவான்.இதையே திருமறையில் கூறுகிறான்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தை யும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன் மன்னிப்பவன்.(67:2)

படைப்புக்களில் அழகானவனும் பகுத்தறிவாளனும் மனிதனே!

இறைவனுடைய படைப்புக்களில் விலங்குகள்,பறவைகள் போன்ற பல வகையான படைப்புக்கள் உள்ளன.ஆனால் தன்னுடைய படைப்புக்களில் அழகானதாகவும் சிறந்த படைப்பாகவும் பகுத்தறிவுள்ளதாகவும் மனிதனை அல்லாஹ் படைத்துள்ளான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.(95:4)

ஆதமுடைய மக்களை மேன்மைப் படுத்தினோம். அவர்களைத் தரையிலும், கட­லும் சுமந்து செல்ல வைத்தோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட அவர்களைச் சிறப்பித்தோம்.(17:70)

நற் செயலுடையோரே சிறந்தவர்கள்.இன்று மனிதன் பகுத்தறிவின் மூலமாக எல்லாப் படைப்புக்களை விடவும் சிறந்தவனாக திகழ்கின்றான்.இதை எல்லா மதங்களும் கொள்கைகளுமே ஏற்றுக்கொள்கின்றன.ஆனால் அல்லாஹ்விடத்தில் ஒரு மனிதன் பகுத்தறிவின் மூலமாக மாத்திரம் சிறந்தவனாக முடியாது.ஏன் என்றால் அல்லாஹ் கூறுகிறான். 

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூ­ லிஉண்டு.(95:4,5,6)

இந்த வசனத்தில் மனிதனை அழகாக படைத்ததாகவும் அம்மனிதனையே இழிந்தவனாகவும் ஆக்கியிருப்பதாகவும் கூறுகிறான்.ஆனால் நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோர் தான் சிறந்தவர்கள் என்றும் உணர்த்துகிறான்.ஆகவே பகுத்தறிவின் மூலமாக ஒரு மனிதன் சிறந்தவனாக முடியாது.அவனிடத்தில் ஈமானும் நற் செயல்களும் இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் தான் அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தவனாக முடியும்.இவ்வாறு அல்லாஹ் கூறுவதற்கு காரணம் உள்ளது.ஏன் என்றால் எத்தனையோ நபர்கள் பெயரளவில் முஸ்லிம்களாக உள்ளனர்.ஆனால் அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப் படுகின்ற முஸ்லிம்களாக இல்லை.அப்துல்லாஹ்(அல்லாஹ்வின் அடியான்)என்ற பெயரை சூட்டியிருப்பார் ஆனால் அவனோ ஆபாசத்தின் தந்தையாக இருப்பான்.மூஸா என்று பெயரை சூட்டியிருப்பான் ஆனால் அவனுமோ வட்டிக்கு முன்னுதாரனமாக  இருப்பான்..இது போல் எத்தனையோ பெயர்தாங்கி முஸ்லிம்கள் உள்ளனர்.இவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாக முடியுமா? சிந்தியுங்கள்.

தௌஹீதின் எதிரிகள்

“இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் விரோதிகளாக ஆக்கியிருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான (பொய்ச்) செய்திகளை, (க் காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். (6:112)

ஜின்னிலுள்ள ஷைத்தான்கள், மனிதர்களிலுள்ள ஷைத்தான்களை வழிகேடு, தீமை, பொய்யான செய்திகள் போன்றவற்றைக் கொண்டு, அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தி, அவர்களை வழிகெடச் செய்கிறார்கள் என்பதையே மேலேயுள்ள வசனம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

“மறுமையை நம்பாதோரின் இருதயங்கள் அதற்கு (அந்த வீணான செய்திகளுக்கு)ச் செவிசாய்த்து, அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் (தீய) கருமங்களை இவர்களும் செய்வதற்காகவுமே (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்)” (6:113)
நபிமார்கள் தமது சமூகங்களுக்கு அழைப்பு விடுத்த கலிமதுத் தௌஹீதை விட்டு, அம்மக்களை, மேற்காட்டிய வசனங்களில் கூறப்பட்ட வழிகேடர்கள் வழிகெடுத்துக் கொண்டிருந்தார்கள். நபிமார்களுக்கும், தௌஹீதைப் போதிப்பவர்களுக்கும் இவ்வாறான எதிரிகளை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் ஞானத்திலுள்ளதாகும்.

ஏனென்றால் இஸ்லாமியப் பிரசாரம் தௌஹீதின் மீதுதான் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆச்சரியம் என்னவெனில் தௌஹீதின்பால் மக்களை அழைப்பதை, மக்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதாக சில ‘தாஇகள்’ (இஸ்லாமிய அழைப்பாளர்கள்) கருதுகின்றனர். தௌஹீது தான் பிரிந்த நிலையிலிருக்கும் மக்களை ஒன்று படுத்துவதாய் இருக்கின்றது. ‘தௌஹீத்’ என்று கூறப்படும் அந்தப்பதமே அதற்குச் சான்றாய் அமைந்துள்ளது.

முஷ்ரிக்குகளோ, ‘படைத்தவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதை நம்புதல்’ என்ற கருத்துடனுள்ள ‘தௌஹீதுர் ருபூபிய்யா’வை அறிந்திருந்தனர். அல்லாஹ்தான் அவர்களைப் படைத்தான் என்பதை ஏற்றிருந்தனர். அவர்கள் நிராகரித்ததெல்லாம் ‘அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைக்கக்கூடிய இரட்சித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமேயாகும்’ என்று கருத்துப்படும் தௌஹீதுல் உலூஹிய்யாவைத்தான்.

நார்வே பயங்கரம்: இஸ்லாமிய எதிர்ப்புணர்வால் தாக்குதலை நடத்திய வாலிபர்!

ஓஸ்லோ: நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நார்வேயைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு காரணமாக இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.

ஓஸ்லோவில் இவர் நடத்திய ஒரு குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 92 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆண்ட்ரெஸ் பெஹ்ரிங் பிரேவிக் (32) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வலதுசாரிக் கொள்கைகளில் தீவிரமான இவர் இஸ்லாமிய எதிர்ப்பாளர் என்று தெரியவந்துள்ளது.

இவர் தனது இன்டர்நெட் பிளாக்கில் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை வெளியிட்டுள்ளார். மேலும் நார்வே உள்பட ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்ப்பதாகவும், பல்வேறு இனங்கள் இணைந்து வாழ்வதை எதி்ர்ப்பதாகவும் தனது பிளாக்கில் இவர் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் இனப் போர் துவங்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஐரோப்பியர் அல்லாதவர்களும், கம்யூனிஸ்டுகளும் வெளியேற்றப்பட்டு ஐரோப்பா தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் இவர்.

இவருக்கு வலதுசாரி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சனி, 23 ஜூலை, 2011

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “ஆன்லைன்” மூலம் பதிவு செய்யும் வழிமுறைகள்: நேரில் போக தேவையில்லை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள், பட்டதாரிகள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைய தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்தால் கால விரயம், அலைச்சல், பணச்செலவினை மிச்சப்படுத்தலாம்.  
தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக மனுதாரர்கள் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதிகள் ஆன்லைன் வழியாக பதிவு செய்து, அடை யாள அட்டை மற்றும் வேலை வாய்ப்பு பதிவு எண் பெற்ற மனுதாரர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது கல்வி சான்றினை அனுப்ப தேவையில்லை.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் சென்னை சாந்தோமில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை.

தாங்கள் சார்ந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலோ, வீட்டில் உள்ள கம்ப்யூட்டரிலோ, இண்டர்நெட் மையங்களிலோ, புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு ஆகிய பணியினை மேற்கொள்ளலாம்.
மனுதாரர்களின் அடையாள அட்டை தொலைந்து போக நேரிட்டால் தங்கள் பதிவெண்ணை பயன்படுத்தி அடையாள அட்டையினை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் மனு தாரர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும்.
ஆன்லைன் பதிவு செய்வோரும் உடனடியாக அடையாள அட்டை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். மனுதாரர் விரும்பினால் பதிவெண்ணை மட்டும் "சேவ்" செய்துகொண்டு தேவைப்படும்போது பதிவட்டை எடுத்துக் கொள்ளலாம்.   கூடுதல் கல்வித்தகுதி பதிவு செய்ய விரும்புவர்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் "அப்டேட் டிரோபைல்" சென்று "சேவ்" செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே இடமாற்றம், முகவரி மாற்றம் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். பிற மாவட்டங்களுக்கு மாறி சென்றால் அதற்கு ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்ய இயலாது. நேரில்தான் வரவேண்டும்.
மாவட்டத்திற்குள் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் ரேஷன் கார்டு எண்ணை மட்டும் குறிப்பிட வேண்டும். உலகின் எந்த மூளையில் இருந்தும் பதிவை புதுப்பித்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். இந்த வசதியை மனுதாரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நன்றி : மணற்கேணிடைம்ஸ்

குழந்தைகளுக்கு அருகே புகைப்பிடிப்பவர்களே...!எச்சரிக்கை

மற்றவர்கள் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புகைப்பிடிப்பதால் புற்று நோய், ரத்தம் சம்பந்தமான நோய், இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர்.ஆனால் பிறர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் என்பது புதிய தகவலாக இருக்கிறது அல்லவா! ஆம், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகம், அறிவியல் துறை மாணவர்களின் உதவியுடன் சிகரெட் புகையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த புதிய ஆய்வை மேற்கொண்டது.   12 முதல் 19 வயது வரையிலானவர்கள் ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அதிர்ச்சியான விஷயங்கள் தெரிய வந்தன.
 
ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:-
 
சிகரெட் பிடிப்பவர்களை விட, அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வந்தது. குறிப்பாக காது செவிடாகும் நிலை ஏற்படுகின்றன.   சுவாசிக்கப்படும் சிகரெட் புகை, மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று, காதின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒலியை கிரகிக்கும் மெல்லிய உறுப்பை சேதப்படுத்துகிறது.

திங்கள், 18 ஜூலை, 2011

ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது

அல்லாஹ்வின் திருப்பெயரால்....


நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு  நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
தலையில் பிறந்தோன் காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஞாயிறு, 10 ஜூலை, 2011

பொருளாதாரம்-கேள்வி பதில்

வங்கியின் மதிப்பு குறைந்து நிலையில் கடன் கொடுத்து, திரும்ப வாங்கும் போது வங்கியின் மதிப்பு உயர்தால் அந்த பணம் வட்டியாகுமா?
என்னுடைய நண்பர் அவசரத் தேவைக்காக 4000 சவூதி ரியால் கடன் வாங்கினார். அன்றைய தினம் வங்கியில் மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 91 ரியால்களாகும். நான்கு மாதம் கழித்துத் திருப்பித் தரும் போது வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 96 ரியால் என உயர்ந்து விட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் இந்திய ரூபாய் 2000. அதனால் என்னிடம் 4000 ரியால் கடன் வாங்கிய எனது நண்பர் கூடுதலாக 200 ரியால் தந்தார். இது வட்டியா? விளக்கம் தரவும். - அதிரை தீன் முஹம்மது, புரைதா

எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் கடன் கொடுத்தீர்களோ அதே கரன்ஸியின் அடிப்படையில் தான் திருப்பி வாங்க வேண்டும். அதிகப்படுத்தி வாங்கக் கூடாது.

'நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ, வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி) நூல்: புகாரி 2176

இந்த ஹதீஸின் அடிப்படையில் 4000 ரியால் கடன் கொடுத்திருந்தால் அதே 4000 ரியால் மட்டுமே வாங்க வேண்டும். அதிகமாகக் கேட்டு வாங்கினால் அது வட்டி என்பதில் சந்தேகமில்லை.

நெஞ்சு எரிச்சல் ஏன் ?

வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்.

கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சமைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படுவதை சாப்பாட்டிற்கு பின் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

வெள்ளி, 8 ஜூலை, 2011

இறையில்லத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள் (பகுதி-1)

அகில உலகையும் படைத்து, பரிபா­த்துக் கொண்டிருக்கும் ஓரிறைவனை, அவனது அடியார்கள் கூட்டாகவும், தனியாகவும் வணங்கி வழிபடுவதற்காக எழுப்பும் ஆலயமே இறையில்லம், வழிபாட்டுத்தலம் எனப்படுகின்றது. எப்போது இறைவனுக்காக என்ற தூயநோக்கில் ஒரு பள்ளிவாசலை எழுப்புகிறோமோ அப்போதே அதற்கு இறைவன் சொந்தக்காரனாக ஆகிவிடுகின்றான். எனவே தான் பள்ளிவாசல்கள் யாவும் தனக்கே சொந்தம் என இறைவன் திருக்குர்ஆனில் உரிமை கொண்டாடுகின்றான்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72 : 18

உலகில் உள்ள இடங்களிலேயே தன்னை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட ஆலயம், தனக்கு மிகவும் விருப்பமானது என்றும் தெரிவிக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)
முஸ்லி­ம்1190

இறைவனுக்கு சொந்தமான, மிகவும் விருப்பமான பள்ளிவாசலை நம்முடைய செயல்பாடுகளால் அவனுக்கு வெறுப்பிற்குரியதாக மாற்றிவிடுகின்றோம். இறைவனது இல்லத்தில் அவனது விருப்பத்திற்கேற்ப, உத்தரவிற்கேற்ப நடந்து கொள்ளாமல் நம்முடைய மனவிருப்பத்திற்கு தோதுவாக செயல்படுகின்றோம்.

உலகில் மனிதர்களால் உயர்வாக மதிக்கப்படும் எந்தவொரு இடமாக இருந்தாலும், அதற்கென சில வரையறைகளும் ஒழுங்குமுறைகளும் கட்டாயமாக கடைபிடிக்கப்படும். கவர்னர் மாளிகை, அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் அவற்றை நிர்வாகம் செய்பவர்களால் பிறப்பிக்கப்பட்டிருக்கும். வெளிநாடுகளில் பெரும் பெரும் ஷாப்பிங் சென்டர்களில் கூட ஷூ அணிந்து தான் உள்ளே வரவேண்டும். கை­லி, வேஷ்டி அணிந்தவர்கள் உள்ளே வரக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுவதை அறிகிறோம்.

கே­லிக்கூத்துகளும், அனாச்சாரங்களும் நிறைந்திருக்கும் இது போன்ற இடங்களிலும் சில ஒழுங்குமுறைகள் வரையறுக்கப்படுமாயின் இறைவனுடைய ஆலயம் நிபந்தனைகள் விதிக்கப்படுதற்கு மிகவும் ஏற்றமானதே.

பள்ளிவாச­ன் புனிதம்

இறையில்லம் என்பது சாதாரணமான ஒன்றல்லவே. இறையில்லத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மறுமை நாளில் இறைவனின் அருளுக்கு உரியவர்கள். முழு மனித சமுதாயமும் அந்நாளில் வேதனைகளில் மூழ்கி, தவித்துக் கொண்டும், சூரியனின் அளவற்ற அனலுக்கு இரையாகிக் கொண்டும் நிம்மதி பெற நிழலை தேடி அலையும் தருணத்தில் சில பாக்கியவான்கள் மட்டும் இறைவனது சிம்மாசனத்தின் நிழலை பெற்று நிம்மதி பெறுவார்கள், மகிழ்ச்சியுறுவார்கள். அவர்களில் இறையில்லத்தோடு தொடர்பில் இருந்தவர்களும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழலில் (அடைக்கலம்) அளிப்பான்:(அதில் ஒருவர்) பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)புகாரி 660

இறைவனை வணங்குவதற்காக அவனது ஆலயத்திற்கு வந்தால் அவர்களுக்கென சொர்க்கத்தில் ஒரு மாளிகையை இறைவன் தயார் செய்வதாகவும் நபிகளார் தெரிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பள்ளிவாசலுக்கு  (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.
புகாரி 662

இவ்வளவு உயர்வுமிக்க, தனக்கு விருப்பமான பள்ளிவாச­ல் அவசியம் பேணப்பட வேண்டிய சில ஒழுங்குமுறைகளை இறைவன் விதிக்கின்றான். அவைகளை அறிந்து, பேணுவதின் மூலம் இறையில்லத்தை கண்ணியம் செய்வோமாக.

இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும்.
அல்குர்ஆன் 22 : 32

பிரார்த்தனை
முதன்மையாக இறையில்லத்திற்குள் நுழையும் போது அவனது அருளை, கருணையை வேண்டும் விதமாக ஒரு பிரார்த்தனை புரிய வேண்டும். அந்த பிரார்த்தனையை நபிகளார் கற்றுத்தந்துள்ளார்கள். இதனை கூறிய வண்ணம் உள்ளே நுழைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ‘அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்; பள்ளிவாசரிரி­ருந்து வெளியேறும்போது ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’ (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிரிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுமைத் (ர­லி), அல்லது அபூஉசைத் (ர­லி)
முஸ்­லிம் : 1286 அபுதாவூத் 323

அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்


தொழுகைக்காகவோ, வேறு ஏதேனும் விஷயத்திற்காகவோ பள்ளியினுள் நுழைந்தால் உடனே அமர்ந்து விடக்கூடாது.மாறாக உட்காரும் முன் இரண்டு இரக்அத்கள் தொழவேண்டும் என நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
 


அறிவிப்பவர் : அபூகத்தாதா (ஹர்ஸ் பின் ரிப்ஈ) அஸ்ஸலமீ (ரலி)
புகாரி 444
இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுதான் அமரவேண்டும் என்பதில் நாம் அலட்சியம் காட்டிவிடக்கூடாது. ஏனெனில் நபிகளார் இதில் மிகுந்த கவனம் எடுத்துள்ளார்கள். ஒரு முறை நபியவர்கள் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில்  ஒரு மனிதர் உள்ளே நுழைகின்றார். உரையை தவற விடாது கேட்க வேண்டும் என்ற நோக்கில் அமர்ந்து விடுகின்றார். இதைக்கண்ட நபியவர்கள் தொழாமல் அமர்ந்து விட்ட அத்தோழரை நோக்கி தோழரே எழுந்து இரண்டு இரக்அத்கள் சுருக்கமாக தொழுதுவிட்டு பிறகு உட்காருங்கள் என்று உரையின் இடையிலேயே குறிப்பிடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாüல் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார் உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), ”நீர் தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இல்லை” என்றார். ”(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
புகாரி 931

அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதின் முக்கியத்துவத்தை இச்சம்பவம் ஆழமாய் உணர்த்துவதை அறியலாம்.

நன்றி : கடையநல்லூர் அக்ஸா  
                 & 
அப்துல் கரிம் மேளப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரி

தொடரும் இன்ஷாஅல்லாஹ்...ஆப்பிரிக்காவின் புதிய நாடு - தெற்கு சூடான்

ஜூபா: சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு நாளை உதயமாகிறது. இதற்காக முதல் சுதந்திர தின விழா தெற்கு சூடான் நாட்டின் ஜூபா நகரில் கொண்டாடப்படவுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் மிகப்பெரிய நாடு சூடான். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு போரி்ல் 1.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி பேச்சவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் நடந்த மக்கள் வாக்கெடுப்பில் சூடான் இரண்டாக பிரிய ஆதரவு பெருகியதைத்தொடந்து. அதிபர் பஷீர்அல்-அசாத் சூடானை, சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிக்கும் முடிவுக்கு அனுமதியளித்தார். அதன்படி நாளை (9-ம் தேதி) தெற்கு சூடான் தனி நாடு ஆப்ரிக்க கண்டத்தில் உதயமாகிறது.

தலைநகர் ஜூபாவில் கோலாகல விழாவுடன் ‌கொண்டாடப்படுகிறது. புதிய ராணுவ வீரர்கள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக தீவிர ஒத்திகையில் ஈடுபட்டனர். இரு நாடுகளின் எல்லையாக அபைய், தெற்கு கோர்டோபான் நகரங்கள் பிரிக்கப்பட்டன. ‌தெற்கு சூடான் நாடு உதயமாவ‌தற்கு , அதிபர் பஷீர் அல்-ஆசாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா இருக்கும்.

தெற்கு சூடான் புதிய நாட்டின் முதல் அதிபராக சல்வாகெய்ரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராணுவ உயரதிகாரியாக இருந்த இவர் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தெற்கு சூடான் விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடி போராடி வந்தார். நாளை சல்வாகெய்ரர் தெற்கு சூடான் நாட்டின் முதல் அதிபராக பதவியேற்கிறார்.

நன்றி : தாளம்நியூஸ்

செவ்வாய், 5 ஜூலை, 2011

பெருங்காயம்

பித்தம் நீங்க:-

கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.

புழுக்களை ஒழிக்க:-

சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும். வயிற்றில் இருக்கும் நாடாப் புழுக்களை இது அழிக்கிறது.


புரதச்சத்து பெற:-
பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

மருத்துவகுணமும் உடையது:-

வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பல்வலிக்கும் பெருங்காயம் நல்ல மருந்து. பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.

நன்றி : கூடல்

திங்கள், 4 ஜூலை, 2011

அல்லாஹ் என்றால் யாருங்க? (பகுதி - 3)

உங்கள் இறைவன் அல்லாஹ் அளவற்ற அருளாளன்

 • ஒன்றுமில்லாமல் இருந்த உங்களை கருவாக ஆக்கினான்
 • கருவுக்குள் உயிரை ஊதி, உடலை கொடுத்தான்
 • உடலுக்குள் உறுப்புகளை கொடுத்தான்
 • உறுப்புகளுக்கு கட்டளை செலுத்த மூளையை படைத்தான்
 • மூளைக்கு சிந்திக்கும் ஆற்றல் கொடுததான்
 • பசி எடுக்கும் போது குழந்தையிடம் அழுகை கொடுத்ததான்
 • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் மற்றும உணவு கொடுத்தான்
 • உணவுக்காக உலகை கொடுத்தான்
 • உலகில் நிலம், நீர், காற்று, மழை, வெயில், குளிர், உஷ்ணம் என்று அனைத்தையும் கொடுத்தான்
 • உடல் சுகத்தை தணிக்க மனைவியை கொடுத்தான்
 • வயோதிக பருவத்தில் பெற்ற மக்களை போர்வை யாக்கினான்
 • மரணித்தபின் உங்கள் உடலை புதைக்க மண்ணை  கொடுத்தான்.

வெள்ளி, 1 ஜூலை, 2011

பரிணாமக் கோட்பாடு (Evolution Theory) - 10

அன்பிற்க்கினிய இஸ்லாமிய சகோதரர்களே..!பரிணாமக்கோட்பாட்டைப் பற்றியும், அது தவறானது என்பதையும், ஒவ்வொரு படைப்பையும் அல்லாஹ் தான் நுட்பமாகப் படைத்தான் என்பதையும் கடந்த சில பதிவுகளில் பார்த்தோம்.குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனும் அந்த கோட்பாட்டிற்க்கு இஸ்லாம் தன் மறுப்பை தெரிவிக்கிறது.

ஆதி மனிதராகிய ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தன் கைகளால் மண்ணைக் கொண்டு படைத்தான்.அவரிலிருந்து அவரது துணை ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான்.ஏனைய மனிதர்களை விந்துத் துளிகளின் மூலம் படைத்தான்.

அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.அவரை மண்ணால் படைத்து "ஆகு" என்று அவரிடம் கூறினான்.உடனே அவர் ஆகி விட்டார்.(3:59)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்!அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்.அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்!........(4:1)

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்).உங்களை மண்ணாலும் பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம்.நாம் நாடியதை கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்.பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்......(22:5)

இனி மனிதனின் பிறப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் காண்போம்

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
(அல்குர்ஆன் 23:12-14)
 
 மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை 
 1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
 2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
 3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
 4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
 5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
 6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்