அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 29 மே, 2013

சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு

ஜூன்  9 ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் சவூதி அரசாங்கம் கடுமையான உத்தரவு.
சவூதியில் இயற்றப் பட்டுள்ள நிதாகத்எனும் புதிய சட்டத்தின் படி, சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு மூன்று மாத கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்திய தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி, தனி ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் இருப்பதால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட், இக்காமா, காலாவதி ஆனவர்கள் மற்றும் ஹூரூப் கொடுக்கப்பட்டவர்கள், மேலும் விசா விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.

சவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ள இவ்வேளையில், மேற்கண்ட வகைகளில் சட்ட விரோதமாக சவூதியில் வாழும் இந்தியர்கள் தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

செவ்வாய், 28 மே, 2013

பசலைக்கீரை

பசலைக்கீரை, கொடி வகையைச் சேர்ந்த இந்த இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது.இக்கீரையில் வைட்டமின்  A, B C  போன்ற சத்துக்களும் இரும்பு, சுண்ணாம்பு மற்றும் நார் சத்துக்களும் மிகுந்து காணப்படுகிறது..

தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். உடலில் உள்ள வறட்சியை போக்கி நீர்சத்தை உண்டாக்கும். இந்த கீரை கிராமங்களில் பெரும்பான்மையான விடுகளில் வளர்க்கப்படும். இந்த கீரையை பருப்பில் சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்டால் மலச்சிக்கல் பறந்து போகும்.

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்10-ல் திறப்பு-தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஒருவாரம் கழித்து 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து போய்விடவில்லை. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக 10--ந் தேதிக்கு திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிகள் திறப்பை ஒருவார காலம் ஒத்தி வைத்துள்ளது. தமிழகத்திலும் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :thatstamil

திங்கள், 27 மே, 2013

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு - ஓர் அவசர அலசல்


இந்நிகழ்கால நிகழ்வுகளில் கிரிகெட் பற்றிய உண்மைத் தகவல்களையும், அதனால் ஏற்படும், தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களையும் பற்றி தெளிவாக உணர்த்துவதற்காக இந்த கட்டுரை வரையப் படுகிறது.

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு.

ஒரு விளையாட்டாக இருந்தால் அந்த விளையாட்டை விளையாடுவதின் மூலம் உடலுக்கு ஒரு பயிற்சி கிடைக்க வேண்டும். ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு அந்த விளையாட்டு ஒரு நன்மையைத் தர வேண்டும் எந்த நன்மையும் இல்லாத விளையாட்டை விளையாட்டுக்கள் பட்டியலில் சேர்பதே ஒரு சிறந்த சிந்தனையாளரின் பண்பாக இருக்க முடியாது.11 பேர்கள் விளையாட பல கோடி மக்கள் அந்த விளையாட்டை பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள்(?) விளையாடுவது 11 பேர்தான் அதிலும் அவர்களுக்குக் கூட அந்த விளையாட்டினால் எந்த நன்மையும் இல்லை.இதே நேரத்தில் அதைப் பார்க்கும் பல கோடி மக்களும் தங்கள் நேர காலத்தை வீனாக்கி தீமையை சம்பாதிப்பதுதான் கவலையான விஷயம்.

வாழ்க்கையாகிவிட்ட கிரிகெட் விளையாட்டு(?)

ஒரு விளையாட்டென்ரால் அது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாக இருக்கலாம். அதனால் உடலுக்கும் உள வளத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கலாம்.வியர்வை வெளியாகுதல், ஓடி ஆடித் திரிவதின் மூலம் இரத்த ஓட்டம் சீராக அமைதல் போன்றவற்றால் மிகப் பெரிய உடலியல் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்கலாம்.ஆனால் இந்த கிரிகெட் விளையாட்டைப் பொருத்த வரையில் வாழ்க்கையில் விளையாட்டும் ஒரு பகுதி என்பது போய் வாழ்க்கையே விளையாட்டாகிவிட்டதுதான் கவலையான செய்தியாகும்.

வெள்ளி, 24 மே, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -19)

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக்கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. ஆன்மீகவாதிகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதுண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்குச் செய்யப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர். ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே இந்தச் சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகமே.


உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத் தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத் தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.

எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று (மக்களுக்குத் தெரியும் வகையில்) இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். நூல் : அஹ்மத்: 7054


எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்! நூல்கள் : அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449

யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கை யில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். நூல் : புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

வியாழன், 23 மே, 2013

பிளாஸ்டிக் பாட்டில்

நீங்களும்  குடிநீர் குப்பி (mineral water bottle ) பயன் படுத்துபவராகத்தான் இருக்க வேண்டும்! இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடைகளில் 
வாங்கிப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர்ப் பாட்டில்களில் ஒட்டியுள்ள லேபிளில் ''பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் " (Crush the bottle after use) என்று எழுதியிருக்கும் வாசகத்தைப் பார்த்துக்கூட இருக்க மாட்டோம்.அவ்வளவு அஜாக்கிரதை! அப்புறம் எங்கே படித்திருக்க முடியும்.அவ்வாறு  படித்ததைச் செயல்படுத்தி இருக்கமுடியும். பிரிட்ஜ்ஜில் வைக்க பலவண்ணங்களில் அழகாக பலவகை வடிவங்களில்  பாட்டில்களை வாங்கி சேமித்து வைத்திருப்போம்.ஆனால் அது பற்றிய எச்சரிக்கை விழிப்புணர்வு இருக்க வாய்ப்பில்லை. இதோ படியுங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.


இன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கு கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தும் வழக்கம்தான் நாகரிகமாக கருதப்பட்டு அதனை பின்பற்றியும் வருகிறோம்.பாட்டில் நாகரிகத்தைப் பின்பற்றும் எவரும் அந்தப் பாட்டிலில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் படிப்பதும் இல்லை. படித்தாலும் பின்பற்றுவதும் இல்லை. 
இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை  சேகரித்து வைத்து சிறுவர் முதல் பெரியவர் வரை பள்ளிக்கும, அலுவலகத்துக்கும் குடிநீர் கொண்டு செல்லப் பயன்படுத்துகின்றோம். ஏன் பிரிட்ஜில் குளிர் நீர் சேமிப்பதற்கும் இவற்றைப் பயன் படுத்துகின்றோம். இன்னும் கூறப்போனால்  வீடுகள் உட்பட - விசேசங்கள் மற்றும் திருவிழாக்காலங்களில் பல இடங்களில்   தண்ணீர் அருந்த பிளாஸ்டிக் டம்ளர்களையே பயன்படுத்துகிறோம்.எல்லா பிளாஸ்டிக் (நெகிழியினால்) ஆனபாட்டில்களையும் பெட் (pet ) என்பர். 
 

வெள்ளி, 17 மே, 2013

அபாய உலகில் ஓர் அபய பூமி!

இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், 

கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்துகொண்டிருக்கின்றன. 

அத்துடன் உலக நாடுகள் புரட்சிகளையும் போராட்டங்களையும் சந்தித்துக் 

கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக, டிசம்பர் 2010-ல் துனிசியாவில் ஒரு 

முஸ்லிம் வியாபாரி தற்கொலை செய்துகொண்டது அந்நாட்டில் ஒரு 

புரட்சியைத் தோற்றுவித்தது. அந்தப் புரட்சி அக்கம்பக்கத்து நாடுகளான 

எகிப்து, சிரியா, யமன், லிபியா என்று பற்றிக் கொண்டது.அந்தக் கொடிய, 

கோரத் தீயில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி இரையானது. 

லிபியாவில்கதாபியையும் அவரது ஆட்சியையும் பலியாக்கியது. இப்போது 

சிரியாவும் சீக்கிரத்தில் பலியாகஉள்ளது. ஏற்கனவே இராக் எரிந்து 

கொண்டிருக்கின்றது. பஹ்ரைனும் இதன் பாதிப்புக்குள்ளாகிஇருக்கின்றது.
 
சுற்றியும் சூழவும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.ஆனால் மக்கா நகரம்  
 
மட்டும் அமைதிஅபயநகரமாகத் திகழ்ந்து  கொண்டிருக்கின்றதுஏன் 
 
இதற்கு  அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.
 

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு)அபயமளிக்கும்புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை  அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா? [அல்குர்ஆன் 29:67]
இந்த அற்புத உண்மையை உற்று நோக்குமாறு உலக மக்களை  
அல்குர்ஆன் கூறுகின்றதுஇதன் மூலம் தன்னை ஓர் இறைவேதம்  என்றும்,  
தன்னையே வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளுமாறும் மக்களுக்கு  
இந்தக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது.

வியாழன், 16 மே, 2013

விரல் ரேகை இல்லாத மனிதர்கள் !!

விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல் ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி நடப்பதுண்டு. ரேகை இல்லாமல் இருப்பது ஒருவகை தோல் நோய் என்கின்றனர் டாக்டர்கள். விரல் ரேகை பற்றிய ஆராய்ச்சியை டெர்மடோகிளிபியா என்று அழைக்கின்றனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சேர்ந்த தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் இலி ஸ்பீரிச்சர் தலைமையிலான குழுவினர், விரல் ரேகை இல்லாமல் இருப்பதற்கு காரணமான மரபணு மாற்றத்தை கண்டுபிடித்துள்ளனர்.

வீடு கட்டுவதற்கான உதவித் தொகை அதிகரிப்பு

புதுடில்லி, மே 14- ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் உதவித் தொகையை, மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு, "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம், வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, 45 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. தற்போது இந்த தொகை, 70 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
நக்சலைட் வன்முறைகளால் பாதிக் கப்பட்ட பகுதிகள், மலைப் பிரதேசங் கள் ஆகியவற்றில் வீடு கட்டுவதற்கு, 48,500 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொகை, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த் தப்பட்டுள்ளது. வீடில்லாத ஏழை களுக்கு, வீடு கட்டுவதற்கு இடம் வாங்குவதற்காக, ஒரு நபருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், மாநில அரசு கள் மூலம், வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை, 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. - இவ்வாறு, ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

நன்றி :viduthalai






சவுதியில் 2 மாதங்களுக்கு முன் இறந்த கடலூர் வாலிபர் உடல் சென்னை வந்தது

ஆலந்தூர், மே.15-

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை சேர்ந்தவர் கந்தசாமி செல்வராஜ் (34). இவருக்கு குருலட்சுமி என்ற மனைவியும், செல்வபாரத், செல்வநாயகி, செல்வி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகருக்கு கட்டிட தொழிலாளியாக சென்றார்.

இந்நிலையில் அங்கு கடந்த மார்ச் 17-ந்தேதி மாரடைப்பால் இறந்தார். எனவே அவரது உடலை இந்தியா கொண்டுவர சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் குடும்பத்தினர் முறையிட்டனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ரியாத்தில் உள்ள வளைகுடா வெளிநாட்டு வாழ் இந்தியர் தமிழர் நல அமைப்பிடம் முறையிட்டனர். இவர்கள் அதற்குரிய நடவடிக்கை எடுத்து உடலை மீட்க சவுதி அரேபியாவில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

இந்த விமானம் நேற்று(15.05.13)  காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் இருந்து இறக்கப்பட்ட உடல் உறவினர் சேரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேத்தியாதோப்பு எடுத்து சென்றார்.

ஜூன் 17ல் என்ஜீனியரிங் கவுன்சிலிங்

சென்னை: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி ஜூன் 17முதல் தொடங்குகிறது. முதலில் விளையாட்டு பிரிவினருக்கு ஜுன் 17 முதல் ஜூன் 19 வரை கலந்தாய்வு நடைபெறும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜீனியரிங் எனப்படும் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப மனுக்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வரும் 20-ம் தேதி கடைசி நாளாகும். சி.பி.எஸ்.இ மாணவர்கள் மே 30-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் தர வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீடு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜுன் 12-ல் வெளியிடப்படும் எனவும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் தொடங்கும் எனவும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 11 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் கிடைத்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி புதிதாக உறுப்பு கல்லூரியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் தெரிவித்துள்ளனர்.
 
நன்றி:thatstamil 

புதன், 15 மே, 2013

BSNL நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை!

தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிக்காம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியில் சேர விரும்பும் டிப்ளமோ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (TTA) பணியிடங்களை நிரப்ப வருகிற ஜூன் 30-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. குன்னூர், கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காரைக்குடி, கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள செகண்டரி சுவிட்சிங் ஏரியா பிரிவில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், ரேடியோ என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் டிப்ளமோ படித்த மாணவர்கள் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். எம்எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களும் இந்தப் பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

வயது வரம்பு இந்த ஆண்டு ஜூலை 13-ஆம் தேதியன்று, 18-வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும். பிஎஸ்என்எல் ஊழியர்களாக இருப்பவர்கள், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 40 வயது வரை இருக்கலாம். ஓபிசி பிரிவைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 43 வயது என்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 45 வயது என்றும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

சூரியனில் இருந்து அடுத்தடுத்து சிதறும் நெருப்பு பிளம்புகள்: விண்கலங்கள் பாதிக்கும் அபாயம்

கடந்த 48 மணி நேரத்தில் சூரியனில் ஏற்பட்ட மிகப்பெரிய 4 வெடிப்புகளில் இருந்து நெருப்பு ஒளிப்பிளம்புகள் சீற்றத்துடன் வெளியேறியுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சூரிய ஒளிப்பிளம்பு நேற்று படம் பிடிக்கப்பட்டது.

இந்த நெருப்பு ஒளிப்பிளம்புகளில் இருந்து வெளியேறும் வெப்பக் கதிர்கள் பூமியை வந்தடையும். அப்போது பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கலத்திற்கும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

சோலார் மினிமம் காலகட்டத்தில் இருப்பதைவிட மேக்சிமம் காலகட்டத்தில் அதிக வெப்பம் இருக்கும். சூரியனின் 11 ஆண்டுகால இந்த சுழற்சி இப்போது நெருங்கிக்கொண்டிருப்பதால், சூரியனில் இருந்து இதுபோன்று நெருப்பு ஒளிப்பிளம்புகள் அடிக்கடி வெளியேறும் என்று பிரிட்டன் வானியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

நன்றி : maalaimalar

வெள்ளி, 10 மே, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -18)

மிக எளிதில் மக்களை ஏமாற்ற உதவும் ஆன்மீகத் தலைமையை எவ்வாறு அப்பழுக்கற்றதாக ஆக்கிச் சென்றார்கள் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகக் கலந்து கொண்ட போர்களில் உஹதுப் போரும் ஒன்றாகும்.இப்போரில் அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இறைத் தூதரைக் காயப்படுத்தி பற்களையும் உடைத்தவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்' என்று கூறினார்கள். உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை என்ற குர்ஆன் வசனம் (3:128) அப்போது அருளப்பட்டது
 நூல் : முஸ்லிம் 3346.

வேதனைப்படுத்தப்பட்டவர்கள் எதிரிகளைக் குறித்து இவ்வாறு கூறுவது சாதாரணமான ஒன்று தான். இறைத் தூதரைக் காயப்படுத்தியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் பயன்படுத்திய வாசகத்தை இந்த வகையில் குறை கூற முடியாது. 'தனக்கு ஏதோ ஆற்றல் இருப்பதாகவும் தன்னுடன் மோதியவர்களைச் சபித்தே அழித்து விடுவேன் என்பது போன்ற ஆன்மீக ஆணவமும் இந்தச் சொற்றொடரில் இல்லை. இது ஒரு வேதனையின் வெளிப்பாடு தானே தவிர வேறு இல்லை' என்று தான் நாம் நினைப்போம். ஆனால், இறைவன் இதை விரும்பவில்லை.இறைத் தூதரைக் காயப்படுத்தினால் காயப்படுத்தியவர்கள் தோல்வியைத் தான் தழுவ வேண்டும் என்பதில்லை. இறைவன் நாடினால் இத்தகைய கொடூரமானவர்களுக்கும் இவ்வுலகில் வெற்றியை வழங்குவான். மறுமையில் தான் இவர்களுக்கான சரியான தண்டனை கிடைக்கும்.இறைத் தூதரைத் தாக்குவதோ, ஆதரிப்பதோ இவ்வுலகின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. அது இறைவனாக எடுக்கின்ற முடிவாகும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இதை போதிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொற்றொடர் இந்த அடிப்படைக்கு எதிரானது என்று இறைவன் கருதுகிறான். தமக்கு இறைத் தன்மை உள்ளது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தா விட்டாலும், வேதனையின் வெளிப்பாடாகவே இருந்தாலும் இறைவன் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கூட விரும்பவில்லை. தனது அதிகாரத்தில் தலையிடுவதாக இறைவன் எடுத்துக் கொள்கிறான்.எனவே தான் முஹம்மதே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவுறுத்துகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட வேதனையை விட அவர்கள் கடவுளாகக் கருதப்படும் வாசலை முழுமையாக அடைக்க வேண்டும் என்பதில் தான் இறைவன் கவனம் செலுத்தினான்.

ரத்த அழுத்ததை குறைக்க உதவும் சூரிய ஒளி

சூரிய ஒளியால் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும் நிலையில் தற்பொழுது மேலும் சில நன்மைகளை பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
சூரிய ஒளி, உடலிலுள்ள ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றது.
இந்த ரசாயனம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி புரிகின்றது. மேலும் திடீர் மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : newsonews

தமிழகத்தில் பான் பராக், குட்காவுக்கு தடை: முதல்வர் அதிரடி

சென்னை: முதல்வர் ஜெயலலிதா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதாவது பான் மசாலா, குட்கா போன்றவற்றை இங்கு தயாரித்து, விற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக சட்டசபையில் அவர் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவி்ப்பில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி தரப்படும். ஆண்டுதோறும் இனிமேல் 15 சதவீதம் நிதி உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் 15 இடத்தில் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு இந்தாண்டு 10 ஆயிரம் பசுகை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து குட்கா , பான் மசாலா போன்றவற்றை தமிழகத்தில் தயாரிக்க முடியாது, கடைகளில் விற்க முடியாது. யாரும் இருப்பு வைக்கவும் கூடாது. இதன் மூலம்  பான் பராக்கை கண்ட இடங்களில் மென்று தினறு புளிச் புளிச் என யாரும் துப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நன்றி : thatstamil

வியாழன், 9 மே, 2013

இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை - இளமை !

உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
 
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70) 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி)

இளமை! இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை! வளம் 
 பொருந்திய ஆக்கங்களுக்கும், வீரதீரமிக்க சாகசங்களுக்கும் உண்டான செயல் களமே இளமை! தயக்கமும் தடுமாற்றங்களும் இன்றி தரம் உயர்ந்த கனவுகளை மெய்ப்படுத்த முயற்சிக்கும் அருமையான காலகட்டமே இளமை!

இந்த பூவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் அது கொள்கையானாலும் சரி, கோட்பாடுகளானாலும் சரி புதிய புதிய விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களானாலும் சரி அல்லது குடும்பப்பராமரிப்பானாலும் சரி அதன் பின்னே ஒரு இளைஞனின் கனவும் உழைப்புமே அஸ்திவாரமாய் இருப்பதைக் காணலாம்.கடினமாய் தோன்றுபவைகள் எல்லாம் இளைஞனின் கைபட்டு இலகுவாய் ஆன சம்பவங்கள் மனித வரலாற்றில் மண்டிக் கிடப்பதை சர்வசாதரணமாய் நாம் பார்க்க முடிகிறது. நபிமார்களானாலும் நல்லடியார்களானாலும் இறையருள் பிரமிக்க வைக்கும் அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் வழிகாட்டும் வரலாறுகளாய் ஆனது அவர்கள் இளமையில் வளர்த்த செயல்திட்டங்களேயாம்.அதனால் தான் அரசியல் கட்சிகளும் சரி, மதம் சார்ந்த அமைப்புகளும் சரி இளைஞர்களை கருத்தில் கொண்டு தான் செயல்படுகின்றனர். இளைஞர்களை கவரும் விதத்தில் தங்களின் செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றனர். இளைஞர்களை வசீகரித்து அவர்களின் அந்த தன்னலமில்லாத, எதையும் சாதிக்க வேண்டும் என்கிற உந்துதலை தங்களின் சுயவளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு, இளைஞர்களை பகடைக் காய்களாக ஆக்கி விடுகின்றனர். ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா இளைஞர்களைக் கொண்டு தான் தன்னுடைய மார்க்கத்தை உறுதிப்படுத்தி இருக்கிறான். மேலும் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இறைவன் நமக்கு தன்னுடைய வேதத்தகத்திலே பல நபிமார்களின் வரலாறுகள் மூலமாக கற்றும் தருகிறான். மேலும் இந்த உலகில் நம்மை படைத்த இறைவன் நாம் மரணித்தப் பின் கேள்வி கேட்கப்படும் நாளில் எழுப்பப்படும்போது பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற தன்னுடைய திருத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மூலமாக எச்சரிக்கையும் செய்கிறான்.

வெள்ளி, 3 மே, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -17)

'நானும் உங்களைப் போன்ற மனிதனே' என்று பிரகடனம் செய்துவிட்டு அதை எந்த அளவுக்கு உறுதியாகக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கான மற்றொரு சான்றையும் பாருங்கள்.

தாம்பத்திய உறவுக்குப் பின்னர் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளை.

ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். அனைவரும் வரிசையில் நின்றனர். தொழுகைக்குத் தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அப்போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் 'அப்படியே நில்லுங்கள்' எனக் கூறி விட்டுச் சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள். நூல் : புகாரி 275, 639, 640

அவர்கள் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். என்ன இவர்கள் இவ்வளவு கவனமில்லாமல், அக்கரையில்லாமல் தொழுகை நடத்த வந்து விட்டார்களே என்று மக்கள் நினைப்பார்கள் என்றெல்லாம் இந்த மாமனிதர் வெட்கப்படவில்லை. மற்றவர்களைப் போலவே தாமும் ஒரு மனிதர் தாம், மற்றவருக்கு ஏற்படுவது போலவே தமக்கும் மறதி ஏற்படும் என்பதை மக்கள் மன்றத்தில் பகிரங்கப்படுத்துகிறார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள். அதன் காரணமாக தலைநகரில் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் பொறுப்பையும் அவர்கள் சுமந்து கொண்டார்கள். தலைநகரான மதீனாவைப் பொருத்த வரை அவர்கள் தாம் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்கள்.தலைமை நீதிபதியாக இருப்பதுடன் ஆன்மீகத் தலைவராகவும் இருப்பதால் தமது தீர்ப்பில் எந்தத் தவறும் நிகழாது என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும். அதை அப்படியே மக்கள் நம்பியிருப்பார்கள். நபிகள் நாயகத்தின் தீர்ப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் வேண்டுமானால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதலாம். அவரும் கூட வெளிப்படையாக அதை விமர்சிக்க முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு இருந்தது. ஆனால் இந்த மாமனிதர் என்ன சொன்னார்கள்?

'
மக்களே! என்னிடம் நீங்கள் வழக்கு கொண்டு வருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட தனது வாதத்தை நிலை நாட்டும் திறமை பெற்றவராக இருக்கிறார். நானும் அதைக் கேட்டு அதை உண்மை என நம்பி தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் அவனுக்கு அது கேடாக முடியும்' என்று எச்சரித்தார்கள்
 நூல் : புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185