அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 31 மே, 2011

டைபாய்டு காய்ச்சல்-நச்சுக் காய்ச்சல் (TYPHOID FEVER)

குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல் (TYPHOID FEVER) சால்மோனல்லா டைஃபி (SALMONELLA TYPHI) என்ற நுண் உயிரியால் ஏற்படும் ஒரு வியாதி ஆகும் . இது மனிதர்களை மட்டுமே தாக்கும் . எங்கு எல்லாம் சுத்தம் குறைவாக உள்ளதோ அங்கு எல்லாம் இந்த வியாதி வரும் .

குழந்தைகளுக்கு பொதுவாக 1 -5 வயது வரை எதிர்ப்பு சக்தி குறைவதால் வர வாய்ப்பு அதிகம் . அதாவது அசுத்தமான நீர் , உணவு ( பால் , ஐஸ் கிரீம் , அரை வேக்காடு முட்டை , சாலட், மோர் ,சாப்பிட்ட பின் ஒரு வாரத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்குள்(INCUBATION PERIOD OF TYPHOID IS 7-14 DAYS ) இதன் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் .

அறிகுறிகள் :

ஒரு வாரத்திற்கு மேல்பட்ட ஜுரம் . வைத்தியம் செய்யவில்லை என்றால் ஒரு மாதம் வரை ஜுரம் இருக்கும் .

திங்கள், 30 மே, 2011

நபிகளாரின் நற்குணங்கள் பகுதி - 1

தன்னடக்கம்

நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது.

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2411)

தேன் - மருத்துவ குணங்கள்

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகள் உள்ளது. மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

ஞாயிறு, 29 மே, 2011

புயலுக்குப் பின் அமைதி

நபிகளார் காட்டிய ஏகத்துவக் கொள்கையை ஏற்று, அதன் வழிப்படி நடக்க நாம் முயற்சிக்கும் போது பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

ஊரில் எதிர்ப்பு, ஊர் நீக்கம் ஆகியவற்றுடன், பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏச்சுப் பேச்சுக்கள் என்று எண்ணற்ற துன்பங்கள் இந்த உண்மையான கொள்கையை ஏற்றதால் ஏற்படுகின்றன. இந்தக் கொள்கையின் சிறப்பினை விளங்கி ஏற்று நடக்க முன்வரும் போது இது போன்ற துன்பங்களால் கொள்கையை விடுபவர்களையும் நாம் பார்க்க முடிகின்றது.

இது போன்ற சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்து  கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. நபிகளார் அவர்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்த போது மிகப் பெரிய துன்பங்களைச் சந்தித்துள்ளார்கள்.

அவற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நாம் சந்திக்கும் இவை மிகவும் அற்பமானதே!

முதலில் திருக்குர்ஆன் இது தொடர்பாகக் கூறும் அறிவுரைகளைப் பார்ப்போம்.


உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)


சொர்க்கத்திற்குச் செல்பவர்கள் இவ்வாறு சோதிக்கப்படும் நேரத்தில் நாம் பொறுமையை மேற்கொண்டு சொர்க்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களும் மற்ற இறைத் தூதர்களும் எவ்வாறு சோதிக்கப்பட்டார்கள் என்பதைப் பாருங்கள்.

(முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சூழ்ந்தது. (அல்குர்ஆன் 6:10)


(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.

சனி, 28 மே, 2011

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிறுவனங்கள்

தயவுசெய்து இதன் பிரதியைப், பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும் இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை,
 சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,
சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் -
 சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
 
நன்றி :  mpmpages

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-7வல்ல நாயன் அல்லாஹ்வின் படைப்புக்களின் தொடரில் வரும் மற்றொன்றுதான், தும்பி. ஆங்கிலத்தில் dragonfly என்றழைக்கப்படுகிறது.நமது சூழலில் காணப்படுகின்ற எனினும் நமது சிந்தனைக்குப் புலப்படாத ஒரு சிறிய உயிரினம்தான் இது.அல்லாஹ் சர்வ வல்லமை பொருந்தியவன் என்ற வகையில் இதிலும் ஏராளமான அற்புதங்களை நமக்குக் காண்பிக்கின்றான்.அவ்வகையில் தும்பிப்பூச்சி பற்றி சற்று நோக்குவோம்.
               
நமது சூழலில் பல்வேறு வகையான தும்பிகள் காணப்படுகின்றன.அவை ஒவ்வொன்றும் உடற் பருமனிலும் நிறத்திலும் வேறுபடுகின்றன.பொதுவாக இவை பறப்பதற்கு இயலுமான மெல்லிய நான்கு சிறகுகளைக் கொண்டிருக்கும்.இச்சிறகுகள் ஒலி ஊடுருவக்கூடிய பொலித்தீன் போன்ற அமைப்பில் காணப்படுகின்றன.அவற்றில் மிக நுன்னிய இரத்த நாளங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
               
இச் சிறகுகளுக்கு அல்லாஹ் ஓர் அபார சக்தியை வழங்கியுள்ளான்.அதாவது இவற்றால் ஒரு மணி நேரத்தில் 80-97 மஅ தூர வேகத்தில் பறந்து செல்ல முடியும்.இந்த வேகத்தில் துரிதமாக சிறகடித்துப் பறக்கும் போது அம்மெல்லிய சிறகுகள் பிய்ந்து விடாது இருக்கும் வகையிலும் ,எதிர்ப்படும் கடும் காற்றுக்கும் ஈடு கொடுத்துச் செல்லும் வகையிலும், எதிரி விலங்குகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள தனக்கு வேண்டிய விதத்தில் திடீர் திடீரென திசையை மாற்றிப் பறப்பதற்கும் உகந்த வகையிலும் அல்லாஹ் இந்த அற்புதத்தை வழங்கியுள்ளான்.அது மட்டுமன்றி பறந்துகொண்டிருக்கும் போதே அதே வேகத்தில் திசை மாறி தனது உணவைப் பற்றும் ஆற்றலையும் அந்தரத்தில் அசையாது ஒரே இடத்தில் நிற்கும் ஆற்றலையும் அல்லாஹ் இவற்றிற்கு வழங்கியுள்ளான்.
   

வெள்ளி, 27 மே, 2011

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு உதவி தொகைகள்,

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.

வெந்தயம்

வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால் தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற்காய் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகிவிடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் (glycosides) வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்த கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாக சுரக்கத் தூண்டிவிடுகிறது. அசைவ உணவுக்காரர்களுக்கு இது நன்மை கூட்டுகிறது.
           
 வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது.

நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.
 

ஹஜ் புனித பயணத்திற்கு தமிழகத்திலிருந்து 3,049 பேர் தேர்வு!

நடப்பு ஆண்டில் தமிழகத்திலிருந்து, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு 3,049 பேர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை இராயப்பேட்டை புதுக் கல்லூரியில்  செவ்வாய்க்கிழமை, 2011-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்லும் பயணிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த சுமார் 1,500 ஹஜ் பயணிகள் கலந்து கொண்டனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைச் செயலாளர் சந்தானம், தமிழக ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன், குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

B.Arch கட்டிட நிர்மான கலை படிப்பிற்கான NATA தேர்வு

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி) முஸ்லீம்களால் நடத்தபடுகின்றன.  

B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA  தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும்.  

செவ்வாய், 24 மே, 2011

ப்ளூடூத் தொழில்நுட்பம் (Bluetooth technology)

Bluetooth Earphone உபயோகிக்கலாமா..? Cordless Landline Phone உபயோகப் படுத்தலாமா?

 இரண்டுமே  Bluetooth wireless technolgy வகையை சேர்ந்த மிகவும் அரிய மகத்தான சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகள்தான். இவற்றையும் செல்ஃபோன் போல காதோடு ஒட்டிவைத்தவாறு நீ…..ண்டநேரம் மணிக்கணக்கில் அடிக்கடி பேசுவதற்காக உபயோகிக்கும்போது அதே ஆபத்துக்கள் வரலாம் என்கின்றனர் சிலர், வராது என்கின்றனர் பலர்..! எது சரி..? ஏனெனில், இவை தருவதும் அதே microwave radiation தான் என்கின்றனர் சிலர்..! இல்லை… இல்லை… பாதிப்பு இல்லாத Radio Waves-களைக்கொண்டு ப்ளூடூத் இயர்/ஹெட்ஃபோன்கள்  செயல்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்கின்றனர் பலர்..! எது சரி..? தற்போது ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலைகள் எவை..? இதுதான் இப்போது எல்லா குழப்பத்துக்கும் முக்கிய பிரச்சினை.

 Microwave என்றால் எவை..? Radio wave என்றால் எவை..?

திங்கள், 23 மே, 2011

கண்டெடுக்கப்பட்ட பொருள்

பிறர் தவற விட்ட பொருளை ஒருவர் கண்டெடுத்தால் அவர் ஒரு வருட காலம் மக்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் செய்யாமல் அதை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வருட காலம் அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால் எடுத்தவரே அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருப்பவர் வழிகேட்டிலேயே உள்ளார்.அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல் ஜுஹனீ (ரலி)
நூல்: முஸ்லிம் (3556)

முதியவர்களிடம் நடந்துகொள்ளும் முறைகள் (பகுதி - 2)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த மனிதர். மக்காவை வெற்றி கொண்ட அந்நேரத்தில் மக்காவிற்கும் மதீனாவிற்கும் மன்னர் அவர்கள் தான். இந்த நிலையிலும் முதியவரைப் பார்க்க நான் வந்திருப்பேனே என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் முதியவர் நலம் பேண வேண்டும் என்று கூறுகிறது.

இந்த உலகத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்து வாழும் இயல்பிலேயே மனிதனை இறைவன் படைத்துள்ளான். அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை பல கட்டங்களில் அவன் பிறரைச்சார்ந்துள்ளான். இவனுக்கும் இவன் யாரைச்சார்ந்து இருக்கின்றானோ அவனுக்கும் இந்த சார்புவாழ்வினால் இவ்வுலகில் பலன் ஏற்படுவதால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். முஸ்­லிம்கள் மறுமைநாளை நம்பியவர்கள். எனவே நம்மைச் சார்ந்து வாழும் முதியவர்களுக்கு உதவிபுரிவதால் இவ்வுலகத்தில் நமக்கு பலன் கிடைக்காவிட்டாலும் மறுஉலகத்தில் பலன் கிடைக்கும் என்று நம்பினால் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் இதற்கான கூலி  கிடைக்கும்.

ஞாயிறு, 22 மே, 2011

ஐ.நா.சபை மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா தேர்வுஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு
ஆகி இருக்கிறது.ஜெனீவா நகரில் நடந்த
ஓட்டெடுப்பில் இந்தியாவுக்கு 181
ஓட்டுகள் கிடைத்தன. இதன் மூலம் உலகில் எந்த
பகுதியிலும் மனித
உரிமை மீறல் நடந்தாலும், அதை தட்டிக்கேட்கும்
உரிமை இந்தியாவுக்கு
கிடைத்துள்ளது.இந்தியா மட்டுமின்றி
இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்,
குவைத் உள்ளிட்ட மேலும் 13 நாடுகளும், மனித உரிமை கவுன்சிலுக்கு
உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.இவர்களின் பதவிக்காலம் 3
ஆண்டுகளாகும்.
இதுபற்றி ஐக்கிய நாட்டு சபையின் தெற்கு ஆசிய பகுதி மனித உரிமை
மேற்பார்வையாளர் மீனாட்சி கங்குலி கூறுகையில்,இந்தியா மிகப்பெரிய
ஜனநாயக நாடு என்பதால் மிகச்சிறந்த முறையில் செயலாற்றும்'' என்று
நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி : மணற்கேனிடைம்ஸ்

வெள்ளி, 20 மே, 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-6

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

அது 1938 ஆம் வருடம். 

கிறிஸ்துமசுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன (Dec 22). தென் ஆப்ரிக்காவின் கிழக்கு கடல் பகுதியில், சாலும்னா ஆற்றின் வாயிற்பகுதியில் தன் குழுவினருடன் மீன் பிடித்து கொண்டிருந்தார் கேப்டன் கூசன். 

அப்போது வலையில் சிக்கியது ஒரு வினோதமான மீன். 

ஆம், அது மிகவும் வினோதமான மீன். ஏனென்றால் அப்படிப்பட்ட மீனை இதுவரை அவர் பார்த்ததில்லை. தன்னுடைய வலையில் சிக்கிய அந்த மீன் இன்னும் சிறிது நாட்களில் உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்த போகின்றது என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை.  

அப்போது அவருக்கு தோன்றியதெல்லாம் இந்த வினோதமான மீனைப் பற்றி கிழக்கு லண்டன் (East London - தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நகரம்) அருங்காட்சியகத்திற்கு தகவல் கொடுப்போம் என்பதுதான். 

செவ்வாய், 17 மே, 2011

பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் ?

எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.
அந்த வகையில் பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்:

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது.ஆகையால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை மிக்சியில் அரைத்து ஜூஸாக குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது பழத்தின் முழு பலனைத் தராது.
பழங்களை ஜூஸாக குடிப்பதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடும்போதுதான் நார்ச்சத்தும் கிடைக்கிறது. சத்தும் முழுமையாக கிடைக்கிறது.

நன்றி : பனிப்புலம்

உங்களுக்கு வேண்டுமா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِசுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

திங்கள், 16 மே, 2011

நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை

இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், அல்லது குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது ஒரு நாட்டளவிலான பிரச்சனையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது ஒருவகையான பொறாமை உணர்வு தான்.

ஒரு தனி மனிதன் தன்னை விட மேலுள்ளவனையும், ஒரு குடும்பம் தனக்கு மேலுள்ள குடும்பத்தையும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள நாட்டையும் பார்ப்பது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம்.

என்றைக்கு மேற்கூறப்பட்டவர்கள் தமக்குள்ளதை மட்டும் கொண்டு தன்னிறைவு அடைவது மட்டுமில்லாமல், தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடைகின்றாரோ அன்றைக்கு அவர்களது பிரச்சனைகள் தீர்ந்து அவரிடம் குடிபுகுந்த பொறாமை குடிபெயர்ந்து அங்கு அமைதி குடியேறுகின்றது. நிம்மதி அங்கு கொடி கட்டிப் பறக்கின்றது.

ஒரு மனிதனுடைய அழகு, பணம், பதவி என்று ஆயிரம் பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். உதாரணமாக ஒரு தனி மனிதனின் அழகை எடுத்துக் கொள்வோம்.

முதியவர்களிடம் நடந்துகொள்ளும் முறைகள் (பகுதி - 1)

மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு இறைவன் அறிவை அதிகமாகக் கொடுத்திருந்தாலும் அவனை நல்வழிப்படுத்த பிறரின் வாயிலாக உபதேசங்களும் விதிமுறைகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றது. எனவே தான் எல்லா நாடுகளிலும் குடிமக்கள் பேணவேண்டிய ஒழுக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அவ்வப்போது அந்நாடு அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. மனிதனுடைய அறிவை நம்பி அந்நாடு அவற்றை வ­யுறுத்தாமல் விட்டுவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

அவனுடைய அறிவு நல்லதையும் தீயதையும் தனித்தனியே பிரித்துக்காட்டினாலும் அவன் தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தவறான வழியில் செல்பவனாக இருக்கிறான். இவற்றை கவனத்தில் கொண்டு தான் இஸ்லாமிய மார்க்கம் ஆன்மீக ரீதியில் பிள்ளைகள் பெற்றோர்களிடத்திலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்திலும் கணவன் மனைவியிடத்திலும் மனைவி கணவனிடத்திலும் இப்படி ஒவ்வொருவரிடத்திலும் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை அவனுக்கு பட்டிய­லிட்டு கூறுகிறது. இதன் அடிப்படையில் முதியவர்களிடத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

சனி, 14 மே, 2011

உயிர் காக்க உதவும் பத்து வழிமுறைகள்


நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவ மனைக்கு ஓடுகிறோம்.அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி. உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும்.

உலர்ந்த திராட்சை(Raisins)

நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று திராட்சை. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!
பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் விட்டமின் பீ   (VitaminB) மற்றும் சுண்ணாம்புச் சத்து(Calcium) அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.குழந்தைகள் வளர்ச்சிக்கு வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது.

வெள்ளி, 13 மே, 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-6

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்,  உருவாக்குபவன்,  வடிவமைப்பவன்அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.
ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !

இதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரினங்களுக்கு இருப்பதை விட ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான்.

அதே போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான திமிலை இறைவன் வடிவமைதான்.

புதன், 11 மே, 2011

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க K9 Web Protection


இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில்

பல ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச

இணையதளங்கள் நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து

நம் குழந்தைகளை மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில்

புகுந்து விளையாடுகிறான் ன்று சொல்லும் பெற்றோர்கள் முதலில்

புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை

மட்டும் வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல,
 அவர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான்

இணையதளம். இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும்

அனைத்தையும் நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில

உண்மை புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது

பாடம் அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும்

முடிவில் சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான்

நிதர்சனமான உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல

நம் குழந்தைகளையும்  பாதுகாக்க வேண்டிய நிலையில் தான்

நாம் இப்போது இருக்கிறோம்.K9 மென்பொருள் துணையுடன்  எளிதாக

நாமாகவே ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை

செய்யலாம் இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றி

காண்போம்.கண்டிப்பாக இந்தப் பதிவு நம் அனைவருக்கும்

பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.


தமிழகத்தில் இயங்கும் முஸ்லிம் கல்லூரிகள்

+2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை எங்கு சேர்ப்பது என்ற ஆலோசனையில் மூழ்கி இருப்பார்கள் இந்த நேரத்தில் தமிழகத்தில் இயங்கும் முஸ்லிம் கல்லூரிகள் பற்றிய ஒரு பார்வை....

இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி

வட ஆற்காடு மாவட்டம் வாணியம் பாடி முஸ்லிம்கள், 'வாணியம்பாடி
முஸ்லிம் கல்விச் சங்கம்' என்ற அமைப்பை 1903ம் ஆண்டு தொடங்கினர்.
சர் சையத் அஹமத்கானின் கருத்துகளால் உண்டான எழுச்சியே
இவ்வமைப்பின் தோற்றத்திற்குக் காரணமாகும். 1905ம் ஆண்டு
வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் பதிவு செய்யப்பட்டது.
இஸ்லாமியா தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. ஜனாப் டி.ஹாஜி
பத்ருதீன், ஜனாப் மலங் ஹயாத் பாஷா, ஜனாப் டி.அமீனுதீன், ஜனாப் மலங்
அஹமது பாஷா ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில்
தொடக்கப்பள்ளி 1912ம் ஆண்டு இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியாக
உயர்ந்தது.1916-ம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரிக்கு
பெண்ட்லேண்ட் பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது. நவாப் சி. அப்துல்
ஹக்கீம் போன்ற கொடையாளிகளின் உதவியால் 1919ம் ஆண்டு
இஸ்லாமியா கல்லூரி தொடங்கப்பட்டது.
1948-ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமது சயித் மியாசியின் செயலாளராக

செவ்வாய், 10 மே, 2011

மறுமையின் அவசியம்

திங்கள், 9 மே, 2011

காரட் ஜூஸ்

இதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது.

உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.

குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.

காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.

காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.

அல்லாஹ்வின் திருப்தி யாருக்கு?(பகுதி-2)

இன்னும் நாம் பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரிப்பதில் கவனிக்க வேண்டியதில் தேவையானது , அன்பு தான் இந்த அன்பு எனும் அரவணைப்பினால் அவர்கள் மன ஆறுதல் அடைவார்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு புது தெம்பும் பிறக்கும் முழுமையாக  மன நிறைவு இருக்கும்.நீண்டதாக வாழவும் அது வித்திடும்.ஆனால் இன்றைக்கு ஒருவனுக்கு நோய் ஏற்பட்டால் அவனை பிற மனிதர்கள் கண்டு கொள்ளமல் அவனை புறக்கணிக்கின்றனர்.

இப்படியிருந்தால், இறைவனின் திருப்தி  நமக்கு இம்மையில் உண்டா? மறுமையிலும் உண்டா? என்றால் நிச்சியமாக இருக்காது.அவனின் கோபம் தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.அடுத்து,நாம்  அவர்களை புறக்கணிப்பதால் அவர்கள் நிலை என்ன தெரியுமா? நோயாளிகளின் மனநிலைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.சில பேர் தற்கொலையும் செய்து கொள்ளுகிறார்கள்.அவன் நிரந்தரமான நரகத்திற்க்கு போவதற்க்கு நாம் காரணமாக அமையக் கூடாது

ஞாயிறு, 8 மே, 2011

அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்

மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ், அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம்  நிர்ணயம் செய்து வருபவன்.
இன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து, இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே.தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான்.அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் உனக்கு உதவி செய்ய இயலாத நிலையிலிக்க, உணவளித்து உனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்படும் அனைத்தையும் அருளினான்.

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُونَ شَيْئا ً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)

கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை  மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழ்முடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.
 

சனி, 7 மே, 2011

எலுமிச்சை

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறிகளும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுவதுமாக குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால் நோய்வராமல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்கள் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

புதினா

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் உணவுக்கு சுவையும் மணமும் தர பயன்படுத்தப்படுகிறது.புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது மற்றும் .மணமும் காரச் சுவையும் கொண்டது.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினா மிகவும் உதவுகிறது. ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் வாய்வுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இதில் இருக்கின்றன.

வெள்ளி, 6 மே, 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-5

ஏக இறைவனின் திருப்பெயரால்......

இதற்கு முன் ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பனுக்கள் தண்ணீரை அதிகம் உறிஞ்சிக் கொள்வதால் அது இரத்தத்தை உறைய விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது அதனால் பயணிகளையும், அவர்களுடைய சுமைகளையும் சுமந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்த்தோம்.

ஆனாலும், ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ?  நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
ஒட்டகம் என்ன ?
மனிதனுடைய நிலையே அது தான் !

மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரினங்களுடைய நிலையும் இது தான்.

நண்பர்கள் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்: முஸ்லிம் (4760)
நல்ல நண்பனைத் தேர்வு செய்வதற்கு முன்னால்: ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் தான் நல்லவர்கள் நம்மிடம் பழகுவார்கள். இனம் இனத்தைச் சாரும் என்ற அடிப்படையில் நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள். இதனால் தான் மோசமான குணம் உள்ளவர்களிடம் அது போன்ற குணம் உள்ளவர்கள் தான் அண்டுவார்களே தவிர நற்குணம் படைத்தவர்கள் அண்டுவதில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி (3336)

புதன், 4 மே, 2011

தயிர்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் "பி"யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது.

இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

உணரப்படாத தீமை – சினிமா!

நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது. இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா?இல்லையெனில்… மக்களைச் சுருள வைக்கும் திரைப்பட சுருளையெல்லாம் ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’

சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.

கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், “அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி.தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான். இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் செர்டிபிகட்ஸ்.

செவ்வாய், 3 மே, 2011

முஸ்லிம்களே! விழித்திருங்கள் !!

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவன் எனவும், அவனைத்தவிர வேறு கடவுள்கள் இல்லை எனவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்கள். அல்லாஹ்வின் போதனைகள் ஆகிய குர்ஆனையும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலான ஹதீஸையும் பின்பற்றக்கூடியவர்களே முஸ்லிம்கள்.

முன்னைய காலத்தில் தாம் வாழ்கின்ற வாழ்க்கையைக் கொண்டே இவர்கள் முஸ்லிம்கள் என்று அறியக்கூடியதாக இருந்தது. அது ஒரு காலம். அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கையை நடைமுறைப்படுத்தியவர்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெயரைக் கொண்டுதான் ஒருவர் இன்னொருவரை, இவர் முஸ்லிம் சகோதரர் என்று அறியக்கூடியதாகவுள்ளது.அதுவும் அவர் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வாழ்பவரா என்பதை அல்லாஹ்வே அறிவான் நாம் முஸ்லிம்கள் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டியவர்கள். ஆனால், இன்று மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியவர்களாகவும் ஒரு முஸ்லிமுடைய பண்புகளை குழிதோண்டிப் புதைக்கக்கூடியவர்களாகவும் உள்ளோம்.

ஏகத்துவ இமாம் - இப்ராஹீம் (அலை)

இப்ராஹீம் (அலை) அவர்கள் அன்று ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப்பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!


இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)

திங்கள், 2 மே, 2011

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

அல்லாஹ்வின் திருப்தி யாருக்கு?(பகுதி-1)

இந்த உலகில் நம்முடையை வாழ்க்கை என்பது எதற்க்கு?, எதனை நோக்கி பயணிக்கிறோம் என்றால் ஈமான் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் பளிச் சென்று செல்லிவிடுவார்கள் நம் மறுமை வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்க தான் என்று.அது மட்டும் அல்ல நாம் செய்யக்கூடிய நல்ல அமல்கள் அதனை எதிர் நோக்கி தான் என்பதில் எந்த ஈமான் தாரிகளுக்கும் எவ்வித சந்தேகமில்லாமல் கூறுவோம்.


இவ்வுலக வாழ்கையின் நல்ல செயல்முறைகள் செய்வதும் மற்றும் தீமையான வழிமுறைகளே எல்லாம் ஒவ்வொரு முஸ்லிம்களும் புறக்கணிப்பதும் எதற்க்கு என்றால் அல்லாஹ்வின் திருப்தி பெற வேண்டும் என்ற தொலைநோக்குபார்வை தானே தவிர வேறு எதுவாகவும் அறவே இருக்க வாயப்பில்லை அதன் வகையில் அல்லாஹ்வின் திருப்தியை பெற என்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதை காண்போம்.


 முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது அதுதான் மகத்தான வெற்றி. (9-72)

ஞாயிறு, 1 மே, 2011

ஸியாரத் என்றால் என்ன?


சம்சுதீன்

பதில் :
 
ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும். அவர்கள் மறுமை வாழ்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
 
கப்ருகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன.
முதல்வகை:
 
முஸ்லிம்களின் கப்ர்களை ஸியாரத் செய்வது முதல் வகை. மண்ணறைகளுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருதல் ஒரு வகையாகும். இதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.
(2208) ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ الآخَرَانِ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّهِ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ. فَيَقُولُ: «السَّلاَمُ عَلَيْكُمْ دَارِ قَوْمٍ مُؤْمِنِينَ. وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَداً. مُؤَجَّلُونَ. وَإِنَّا، إِنْ شَاءَ اللّهُ، بِكُمْ لاَحِقُونَ. اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ» وَلَمْ يُقِمْ قُتَيْبَةُ قَوْلَهُ «وَأَتَاكُمْ». 
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள)
"பகீஉல் ஃகர்கத்' பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:
 
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்.வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன்.அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.