அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 31 மார்ச், 2011

குறைந்த கட்டணத்தில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் "TANCET" என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம்.இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.
பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வலியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்சி பெறுமாரு கூறுங்கள். இந்த மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும். 
மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ்

ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் சலுகை!

சென்னை: "ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்' என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால்
குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும், போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும், ஹஜ் பிரிவில் எட்டு

எண்ணெய்யும், கொழுப்பும்

நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எண்ணெய் பற்றி சில விஷயங்களைச் சொன்னால்தான் உங்களால் அந்தத் தொடர்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
எண்ணெய்யைச் சமையலில் பயன்படுத்துவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
நாம் சாப்பிடும் உணவுக்கு அது சுவையையும், நறுமணத்தையும் கூட்டுகிறது.சமையல் எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம்(energy packets) என்று சொல்லலாம்.மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய்.கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது.
உணவுக் குழல்,இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணை புரிகிறது.
மேலே சொன்னவை போன்ற பல காரணங்களுக்காகத்தான் எண்ணெய்யை நாம் உபயோகிக்கிறோம்.நம்மில் பலர் எண்ணெய்யும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் உண்மை என்னவெனில் எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு,கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய் (A fat is a solid oil and an oil is a liquid fat).
கொழுப்பும், எண்ணெய்யும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

புதன், 30 மார்ச், 2011

ஏப்ரல் ஃபூல் - ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல்,உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் பிறரை ஏப்ரல்ஃபூல்–முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல்ஃபூல்–க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது.முஸ்லிம்களில் சிலரும் இதை செய்து வருகின்றனர்.எனவே நாம்,நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.


ஹோலி கலாச்சாரம்

பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த

பிச்சாவரம்

பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம்.இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.
இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள், சுரபுன்னை காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு

சர்க்கரை நோய்க்கு நிவாரணம் தரும் பாதாம்

சர்க்கரை நோய் அல்லது இருதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அது ஆயுசுக்கும் பாடாய்படுத்தி விடும்.
இந்நிலையில் இந்த இரண்டு நோயையுமே கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஆய்வை நடத்திய மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பாதாம் பருப்பு மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 வகை சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுஅதில் முக்கிய பங்காற்றுகிறதாம்.

தொழுகை முறை (விளக்கப்படங்களுடன்): பாகம் - 2

ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?

சிலர் ருகூவுக்குப் பின்னர் எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும்.கைகளை நேராக தொங்க விடுவதே சரியான முறையாகும்.(தவறான முறை)ஸஜ்தா செய்தல்

கைகளை முத­லில் வைக்க வேண்டும்.

ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர் அல்லாஹு அக்பர் என்று

செவ்வாய், 29 மார்ச், 2011

இளநீர்

தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு இளநீரில் இருக்கிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன.
இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும்.
இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது.
காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக

சத்தியப்பாதையும் சமூக மரியாதையும்

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். ''நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.) 

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

''எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

''என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு

திங்கள், 28 மார்ச், 2011

பவளப் பாறைகள் (coral reefs )

சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக பூமிப்பந்தில், பரந்த அளவில், ஆழம் குறைந்த கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பவளப் பாறைகளை (coral reefs )உண்டாக்கும் எளிமையான உயிரினங்கள் தற்போது புவி வெப்பமடைத்தல், காலநிலை மாற்றங்கள், கடலோடு மாசுக்கள் கலத்தல், கடற்கரையில் உள்ள இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் மீன்பிடி போன்ற முக்கிய காரணிகளால் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அருகி வரும் நிலை சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவொன்றில் இருந்து அறியப்பட்டுள்ளது.

இந்தப் பவளப் பாறைகளே கடலரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான வாழிடத்தையும் இவை

மேற்குலகின் சிந்தனை ரீதியான படையெடுப்பு - 2(நேற்றைய கட்டூரையின் தொடர்ச்சி....)

இந்த சிந்தனைப் படையெடுப்பு கீழைத்தேய ஆய்வுகள் என்ற பெயரில் அல்குர்ன்,அல்ஹதீஸ்,ஸீரா, தாரீஹ் என்ற அம்ஷங்களைத் திரிபு படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இராணுவப் படையெடுப்பால் சாதிப்பது அசாத்தியமெனக் கண்டதன் பிற்பாடே இவ்வாறு அல்குர்ஆன் மீதும் திருத்தூதர்மீதும் களங்கத்தை ஏற்படுத்த மேற்கு விளைந்துள்ளது.
இஸ்லாத்திற்கெதிராக ஊடகங்களின் பயன்பாடு இன்று பெரும்பாலான ஊடகங்கள் யூத சியோனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருப்பது சிந்தனைப் படையெடுப்பிற்காக அவர்கள் வகுத்த திட்டத்தின் ஒரு கட்டமாகும். 1897இல் சுவிட்சர்லாந்தில் 300 யூதத்தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் எடுத்த தீர்மானங்கள் குறித்து மீள சிந்திக்க வைக்கின்றது.

அவற்றில் சில தீர்மானங்கள் பின்வருமாறு.

ஊடகங்கள் குறிப்பாகத் தொலைத்தொடர்பு சாதனங்கள் யூதர்களின் கைவசம் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், கலாசாலைகளிலும்

மைக்ரோவேவ் ஓவன்


இன்று நம்மூர் சமையலறைகளில் `மைக்ரோவேவ் ஓவன்’கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. மைக்ரோவேவ் ஓவன் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்று தெரியுமா? இரண்டாம் உலகப் போரின்போது நடந்தது அது.

விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் `மேக்னட்ரான்’ என்ற பொருள் பயன்படுத்தப்படும். அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.

ஒரு பெரிய பல்பில் இருந்துவரும் வெப்பம் அந்த `மேக்னட்ரானில்’

விஞ்ஞான உண்மைகள்


ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.

வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.

மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.

உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை.

ஞாயிறு, 27 மார்ச், 2011

வீண் விரயம் செய்யாதீர்கள்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒரிலவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன்  6:141.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான். அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப் புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி

இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள் அறிமுகம்

சென்னை: முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திஸ் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கார்பன் சைக்கிள் மாடல்களை டி.ஐ சைக்கிள்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

முருகப்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும், சென்னையை சேர்ந்த டி.ஐ., நிறுவனம், சைக்கிள் தயாரிப்பில் நாட்டின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. காலமாற்றத்திற்கு தக்கவாறு புதிய
மாடல்களை அறிமுகப்படுத்துவதிலும் டி.ஐ., கெட்டிக்காரத்தனமாக செயல்படுகிறது.

மேற்குலகின் சிந்தனை ரீதியான படையெடுப்பு - 1

கத்தியின்றி, இரத்தமின்றி,  துப்பாக்கியின்றி,  ரவைகளின்றி,  இலை மறைகாயாய்  இன்றொரு யுத்தம் நடைபெறுகின்றது. இலகுவில் எவரும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் கனகச்சிதமாய் இப்போரை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.  இதில் எதிர்பார்க்கப்படும் பரப்பு மிக விசாலமாயினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவிர அங்கே அவர்கள் பெரியளவில் எதனையும் தடைக்கற்களாகக் காணவில்லை. எனவே அவர்களின் முதல் எதிரி இஸ்லாம். முதல் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுப்பதே!
மேலே குறிப்பிட்டயுத்தம்அதனை வழிநடத்தும்அவர்கள்இந்த இரண்டு அறியாக்கணியங்கள் குறித்தும் அவர்களின் சதிமுயற்சிகள் குறித்தும் இக்கட்டுரையில் ஆராயவிருக்கின்றோம்.
18ம் , 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மேற்கொண்ட காலணித்துவ ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே இதனையும் நோக்க வேண்டும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகமகா யுத்தமாகக் கருதப்படும் மூன்றாம் மண்டல நாடுகள் மீதான மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பாகும். உலகளாவிய ரீதியில் தங்களது தலைமை கை நழுவி விடக்கூடாதென்ற நப்பாசையும், என்ற நாம மந்திரம் கை விட்டுப் போகக் கூடாதென்ற பேராசையுமே இவ்வாறானதொரு யுத்தத்திற்குத் திருப்பு முனையாக அமைந்துள்ளது. 2ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வளர்முக நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக மேற்குலகு அடிமைப்படுத்தி வந்தது. எனினும் உலகம் விழித்துக் கொண்டதனால் அதன் தொடர்ச்சியை இன்று சிந்தனைப் படையெடுப்பினூடாக மறைமுகமாக மேற்கொள்கின்றது.

சனி, 26 மார்ச், 2011

பேப்பர் பேட்டரி

நம்மள்ல பல பேருக்குத் தெரியும் மின்சாரத்த தேக்கி வைக்கிற பேட்டரியை, பொதுவா சிங்க், மாங்கனீஸ்  மாதிரியான வேதியல் பொருள்களாலதான் உருவாக்க முடியும்னு. அதுமட்டுமில்லாம, லெட், மெர்க்குரி, போன்ற ஆபத்தான வேதியல் பொருள்கள் கொண்ட பேட்டரிக்களால சுற்றுச்சூழல் வெகுவா பாதிப்புக்குள்ளாகுது!
உலக வெப்பமயமாதல் மாதிரியான பேரவலங்கள தவிர்க்க வேண்டி, “எங்கும் பசுமை, எதிலும் பசுமைன்னு” எல்லாம் மாறிகிட்டு வர்ற இந்தக்

கால் மூட்டுவலி

நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்ற பழமொழி உண்டு.  இந்த பழமொழியின்  பொருளை  நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள்.
மனித உடலானது எண்ணற்ற  தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும்.  உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது.  இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது.  இதற்கு ஆதாரமாக செயல்படுபவை தச வாயுக்கள்தான்.  இவற்றின் செயல்பாடுகளில் சீற்றம் கண்டால் அவை உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும். 

ஐபேட்-2 அறிமுகம்

ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், சென்ற மார்ச் 2ல் தன்னுடைய ஐபேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட்டது. முந்தையதைக் காட்டிலும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேகமான இயக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விலை சிறிது கூட குறைக்கப் படவில்லை. வை-பி(WiFi) திறன் கொண்ட 16 ஜிபி மாடல், 499 டாலருக்கும், 64 ஜிபி 699 டாலருக்கும், 3ஜி ஐபேட் 629 மற்றும் 829 டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ல் அமெரிக்காவில் வெளியான இந்த ஐபேட் மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 25ல் வெளியாகிறது.
இதன் சிறப்பம்சங்கள் என அறிவிக்கப்பட்டவற்றை இங்கு காணலாம்.

1. ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட A5 என அழைக்கப் பட்ட புதிய டூயல் கோர் ப்ராசசர் இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.

வெள்ளி, 25 மார்ச், 2011

பேச்சின் ஒழுங்குகள் (பாகம்-1)

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும், கொடியவனாகவும், மென்மையானவனாகவும், கடுமை காட்டுபவனாகவும் பிரதிப­க்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் ஜோக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார். 

நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.

விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு


வியாழன், 24 மார்ச், 2011

கொழுப்பை குறைக்கும் உணவுவகைகள்

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா என்று தேடிப்போக வேண்டாம்.
கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம்.

பெற்றோர்கள்-அல்லாஹ்வின் அருட்கொடை

அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. (அல்குர்ஆன் 14:34)அல்லாஹ் இந்த மனித சமுதாயத்துக்கு எண்ணற்ற அருளைச் செய்துள்ளான். இந்த அருளில் உள்ளது தான் ஒவ்வொரு குழந்தைக்கும் இறைவன் கொடுத்துள்ள பெற்றோர் எனும் பாக்கியம். அந்த அருளையும் அதன் உன்னதத் தன்மையையும், மகிமையையும் உணர்த்தவே இந்தக் கட்டுரை.

இஸ்லாமிய மார்க்கம், பெற்றோரின் மதிப்பைப் பிள்ளைகளுக்கு உணர்த்தும் போது பின்வருமாறு கூறுகின்றது.

''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:23)

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வ­யுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது ''என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்­ம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 46:15)

புதன், 23 மார்ச், 2011

ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் ஐ.நா சபை

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.


 கடந்த இருபது ஆண்டுகளாக, ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா,

தொழுகை முறை (விளக்கப்படங்களுடன்): பாகம் - 1


நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.  
                                                                                                                                  (அல்குர்ஆன் 4:103)

தொழுகைகளையும்,நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்!அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!
                                                                                                                                (அல்குர்ஆன் 2 : 238)

(முஹம்மதே!)வேதத்தி­ருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக!தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)

இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்­மான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி­)     நூல் : முஸ்­லிம்

நமக்கும்,அவர்களுக்கும்(இறைமறுப்பவர்களுக்கும்)உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். .  அறிவிப்பவர்: புரைதா (ரலி­) நூல்: நஸயீ

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர் : மா­க் பின் ஹுவைரிஸ் (ர­லி) நூல் : புகாரீ

இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார்
காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.

செவ்வாய், 22 மார்ச், 2011

கிரீன் டீ

தினம் இரண்டு வேளைகள் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு மறதி நோய் தாக்குவதில்லை என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் ஆற்றலையும் அது உடலுக்குத் தருகிறதாம். சாதாரண டீ குடிக்கிற போது வெளியாகாத சில ரசாயனங்கள், கிரீன் டீ குடிக்கும் போது வெளியாவதோடு, உடனுக்குடன் உடலால் கிரகித்துக் கொள்ளப்பட்டு, மறதிக்கும், புற்றுநோயை உருவாக்கும் செல்களுக்கும் எதிராகப் போராடச் செய்கிறதாம். அது மட்டுமின்றி, காபி, டீயை தவிர்த்து, பால், சர்க்கரை

நேசமும் அழகும்

உடல் தோற்றம் அழகாக இருப்பதால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகர், நடிகைகளிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதாக அவர்களுக்குப் பின்னால் விளங்காத கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமான ஆபத்தானவை!

அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவனது தோற்றமும் அழகானது.

கோஹினூர் வைரம்


இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும்
ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.


இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி

திங்கள், 21 மார்ச், 2011

IISc – B.S. படிப்பில் சேர

இந்தியாவில் மிக உயர்ந்த அறிவியல் கல்வி நிறுவனம் இந்திய அறிவியல் கழகம்எனப்படும் “IISC”. இது மத்திய அரசின் நிறுவனம், பெங்களூரில் மட்டுமே உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் 4 ஆண்டு இளநிலை அறிவியல் (B.S) படிப்பிற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்கு விண்ணப்பிக்க IIT-JEE, AIEEE, AIPMT தேர்வில் ஏதாவது ஒன்றை எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்
B.S (MATHEMATICS)
B.S. (PHYSICS)
B.S (CHEMISTRY)
B.S (BIOLOGY)
B.S. (MATERIALS)
B.S. (ENVIRONMENTAL SCIENCE)

இந்த www.iisc.ernet.in/ug இணையதளத்திற்க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.400விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 25

இது மத்திய அரசின் நிறுவனம் எனவே முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு உள்ளது. இங்கு படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்காக சிறப்பு கல்வி உதவி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

மேலும் விபரங்கள் இந்த www.iisc.ernet.in/ug இணையதளத்தில் உள்ளது.

நன்றி : S. சித்தீக்.M.Tech

நன்றி : அதிரை ஃபாரூக்


ஒரே மரத்தில் 315 வகை மாம்பழங்கள்

ஒரு மரத்தை, “பரிசோதனை சாலை’ என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்கத்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத்தான், “பரிசோதனை சாலை’ என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறது.
இந்த குறிப்பிட்ட மாமரத்துக்கு, இப்போது, 75 வயது. ஆனால், 10 வயது மரம் மாதிரி அத்தனை இளமையாக காட்சியளிக்கிறது. இந்த மரத்தில், ஆராய்ச்சியின் மூலம், 315 வகையான மாம்பழங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கியவர் கலிமுல்லா கான்.
மலிகாபாத் என அழைக் கப்படும் இந்த பகுதிக்கு,மாம்பழ சீசனில்

ஞாயிறு, 20 மார்ச், 2011

இறைவனிடம் கேட்பது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு- RASMIN M.I.Sc

ஒரு மனிதன் இறைவனிடம் தனது தேவைகளை முன்வைப்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் அழகிய நடை முறைகள் பலவற்றைக் கற்றுத் தருகிறது.அதிலே மிகவும் முக்கியமான நடைமுறை எவருக்கு எந்தத் தேவையானாலும் அதை அவர் தனது இறைவனிடம் நேரடியாக் கேட்க்க வேண்டும் இடைத்தரகர் வைக்கக் கூடாது. அதே போல் எந்தக் காரணம் கொண்டும் இறைவன் அல்லாதவர்களிடம் கேட்கவே கூடாது அப்படிக் கேட்டால்
அது இறைவனுக்கு இணை வைத்தல் என்ற
மாபெரும் குற்றமாக கருதப்படும்.
தான் பலவீனமானவன் என்பதையும் இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

இறைவனின் மாபெரும் அருளால் ஓர் இனிய துவக்கம்.
மார்க்கத்தை உண்மை வடிவில் அறிந்திட, அறிவியல், உலகநடப்பு, உடல்நலம் தொடர்பான செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒர் வலைதளம்.