அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 6 மார்ச், 2012

செஷல்ஸில் நடந்த மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் 3வது இடம்

செஷல்ஸ்:  செஷல்ஸ் தீவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் பதூர் சுலைமான் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

செஷல்ஸ் தீவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஈக்கோ பிரெண்ட்லி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5வது ஆண்டாக நடத்தப்பட்ட போட்டி கடந்த மாதம் 26ம் தேதி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பதூர் சுலைமான்(31) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அவர் இப்போட்டியின் 42.165 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 48 நிமிடம் 12 வினாடிகளில் கடந்தார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக