அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
அரசு உதவிபெறும்
மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு
முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கீயர்
மற்றும் பார்சி வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு
பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் ஆண்டிற்கு
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு
இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவிகள் இந்த ஆண்டின் இறுதித் தேர்வில் [1 ஆம் வகுப்பு நீங்கலாக] 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று
தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13 ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் 2 பேருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும்
குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
(நபியின் மனைவியரே!) உங்கள் வீடுகளில்
ஓதிக் காட்டப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் ஹிக்மத்தையும் நினைவு கூருங்கள். (அல்குர்ஆன்
33 : 34)
ஹிக்மத்
என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப் பட்ட ஞானம் தான் என்பது முற்றிலும் தவறானது
என்பதை இவ்வசனம் விளக்குகிறது. இவ்வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் எவ்வாறு ஓதிக்
காட்டப்படுகிறதோ அதுபோலவே ஹிக்மத்தும் ஓதிக் காட்டப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான். நபியின்
மனைவியர் வீட்டில் ஓதிக் காட்டப்படுகிறது என்றால் ஓதிக் காட்டியவர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களையும்
ஓதிக் காட்டியுள்ளார்கள். மேலும் ஹிக்மத்தையும் ஓதிக் காட்டியுள்ளார்கள் என்பது
தெளிவாகிறது.
திலாவத் – ‘ஓதிக் காட்டுதல்’ என்பது பிறரது வார்த்தையை ஒருவர்
எடுத்துக் கூறுவதைக் குறிக்கும் சொல்லாகும். எனவே அல்லாஹ்வின் வசனங்கள் எப்படி
நபியின் சொந்த வார்த்தை இல்லையோ அது போலவே ஹிக்மத்தும் அவரது சொந்தக் கருத்தல்ல. இரண்டுமே
அல்லாஹ்வுக்குச் சொந்தமாகவுள்ளதால் தான் இரண்டையும் நபி (ஸல்) ஓதிக்
காட்டியுள்ளார்கள் என்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
குர்ஆன்
அல்லாத வஹீ உள்ளது என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலேயே உள்ளன. அவற்றை
மேலும் பார்ப்போம்.
அல்லாஹ்
எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப்புத்தகத்தை மட்டும் கொடுத்து இதை மட்டும்
மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அனுப்புவதில்லை. மாறாக வேதத்தில்
எழுகின்ற சந்தேகங்களுக்கு
குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.
திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்த உண்மையை குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும்.
கடந்த இரண்டு தொடர்களில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம்.அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.
அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையையும் உங்கள் மீது அவன் இறக்கிய கிதாபையும் ஹிக்மத்தையும் நீங்கள் நினைவு கூருங்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களுக்குப் போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 231)
மேலும் அல்லாஹ் உம்மீது கிதாபையும் ஹிக்மத்தையும் இறக்கியுள்ளான். மேலும் நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுத் தந்தான். உமக்கு அல்லாஹ் செய்திருக்கும் அருள் மகத்தானதாக உள்ளது. (அல்குர்ஆன் 4 : 113)
இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கிதாபையும், ஹிக்மத்தையும் அருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையற்ற வீணான ஒரு வார்த்தையும் இருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது. அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியது வேதம் மட்டுமே, அதாவது அல்குர்ஆன் மட்டுமே என்றிருந்தால் கிதாபை உம்மீது இறக்கினான் என்று கூறுவதே போதுமானதாகும். ஆனால் கிதாபையும் ஹிக்மத்தையும் உம்மீது இறக்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் இரண்டு வகையான செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியதாகக் கூறும் போது கிதாபை மட்டும் தான் அல்லாஹ் அருளினான் என்று வாதிடுவது இவ்விரு வசனங்களையும் மறுப்பதாகத் தான் அமையும்.
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த வாரம், 29.05.2012 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில தலைவர் சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட வினாக்களுக்கும் விமர்சனங்களுக்கும் விடையளித்தார்.
கூட்டதில் கலந்து கொண்ட மக்களில் ஒரு பகுதியினர்
10.05.2012 முதல் 20.05.2012 வரை லால்பேட்டை தவ்ஹீத் மர்கஸில் நடந்த கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.
மாவட்டத் தலைவர் முத்து ராஜா அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்......!
புதுச்சேரி
ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்தாண்டு, 75லிருந்து 145 ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பால், 20 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த புதுச்சேரிக்கு, தற்போது, 40 இடங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் முதுநிலை
மருத்துவ படிப்பு இடங்கள், 88லிருந்து 124 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
டி.எம்., நெப்ரோலஜி, டி.எம்., மெடிக்கல்
ஆங்காலஜி, எம்.சி.எச்., பிளாஸ்டிக் சர்ஜரி, எம்.சி.எச்., குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நரம்பு உணர்வு அகற்றியல், எம்.எஸ்.சி., எம்.எல்.டி., எம்.எஸ்.சி., மெடிக்கல்
சைகாலஜி உட்பட,
ஒன்பது புதிய மருத்துவ
சிறப்பு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
படிப்பு கால
ஆராய்ச்சி நிதியாக, 20011-12 ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு, 33.67 லட்சமும், முதுநிலை மருத்துவர்களுக்கு, 52.61 லட்சமும் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு, இத்திட்டத்திற்கான தொகை, 3.25 கோடி ரூபாயாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.
நன்றி : Thaalamnews
நம் அனைவர் மீதும் இறைவனின்
சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும்
போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக
கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே
சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில்
பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த
வீரர்,
தன்னுடைய இந்த செயலால்
பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.
யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?
கடந்த மே மாதம் நடந்த இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் நடந்தேறியது. இந்த வீரரின்
பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி
கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர்
லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின்
சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது..
யாயா டோரே - இந்த மனிதர்
கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள
ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட
தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும்,
போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும்
கில்லாடி.
ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட
வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று
தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.
கடந்த மே மாதம் newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு
கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட
அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne)
பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை
ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.
என்ன காரணம்?
இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்”.
(I don't drink
because I am a Muslim)"
அல்ஹம்துலில்லாஹ்........!
நன்றி : எதிர்க்குரல்
இன்ஷா அல்லாஹ் நாளை (29.05.2012) கடலூர் மாவட்டம், லால்பேட்டையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.தாங்கள் தங்கள் சுற்றம் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறது ஆயங்குடிTNTJ
நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்
அழைப்புப் பணிக்காக ஆயங்குடி TNTJ மூலம் நான்கு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகை