அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

வானின் வர்ணம்

மேகமில்லாத வானம் பகல் நேரத்தில் நீலநிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்று என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? வளி மூலக்கூறுகள் ஏனைய நிறங்களை விட நீல நிறத்தை அதிகம் அதிகம் சிதறலடையச் செய்வதே இதற்குக் காரணம்.  அப்போது சூரிய அஸ்தமனத்தின் போது மட்டும் சூரியனும் வானமும் இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களில் தோன்றுவது ஏன்? அதிகமான மக்கள் ஏன் விஞ்ஞானம் படித்தவர்கள் கூட இதன் காரணத்தை பிழையாகவும் அரைகுறையாகவுமே விளங்கியுள்ளனர். இந்த விஷயத்தை இயன்றவரை அறவே குறையற்றதாக பாமரர்களும் விளங்கும் வண்ணம் நாம் விளக்குகிறோம். 

வெள்ளொளியானது(light) 7 நிறங்களின் கலவை என்பதற்கு வானவில்லின் சாட்சியொன்றே போதும்.  இதை முதன்முதலில் நிரூபித்த ஐசாக் நியூட்டன் எனும் விஞ்ஞானியோ சாட்சிக் கூண்டில் நிற்க வைத்தது அரியத்தையாகும்.அரியம் என்பது கண்ணாடியினாலான முப்பரிமான முக்கோணம்(prism).அரியத்தினுடு வெள்ளை நிற ஒளியை அனுப்பும் போது 7 நிறங்களும் பிரிந்து வெளிப்படும். விஞ்ஞான மொழியில் இது நிறமாலை( spectrum ) எனப்படும். ஒவ்வொரு நிறமும் தனக்கே உரித்தான அலைநீளங்களைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

சிவப்பு நிறமானது பெரிய அலைநீளத்தைக் கொண்டது.  இதன் அலைநீளம் 720 நனோ மீற்றர் (nm) ஆகும். ஒரு நனோ மீற்றர் என்பது ஒரு மீட்டர் நீளத்தின் 100 கோடியில் ஒரு மடங்கு. அலை நீளம் குறைந்தது ஊதா நிறமாகும், இது 380 nm  அலைநீளம் உடையது.   இதற்கு இடைப்பட்ட நிலையில் உள்ள நிறங்களின் அலைநீளத்துக்கு அமைய ஏறுவரிசை வருமாறு, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு.

திங்கள், 11 ஏப்ரல், 2011

தண்ணீர் ! தண்ணீர் !!

உடல் இயக்கங்கள் அதிகரிக்க நீர் பருகும் தேவை அதிகம்.
ஒரு மனிதனின் உடல் எடையில் இரண்டில் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60% நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அளவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதனுக்கு கிட்டதட்ட 10 காலன்(gallon) தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில்(cell) இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தண்ணீர் தேவையான அளவு அருந்த வேண்டியது அவசியம், இல்லை எனில் தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது, மேலும் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும்,உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது.

அந்த ஏழு நபர்கள் (பாகம்-2)

இறை இல்லங்களுடன் ஈடுபாடு கொண்ட மனிதர்:

அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித்துடன் ஒரு முஃமின் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். இத்தெடர்பு இறையச்சத்துடன் கூடிய இதயபூர்வமானதாக அமைய வேண்டும். ஒரு தொழுகையை நிறை வேற்றி விட்டு, அடுத்த தொழுகை நேரத்தை எதிர்பார்த்து, அல்லாஹ்வின் இல்லம் சென்று, அவனுடன் உரையாட ஆவலாக இருக்க வேண்டும்.
தொழுகை அல்லாஹ்வுடனான உரையாடலாக உள்ளது. பிரார்த்தனையாகத் திகழ்கிறது. பள்ளியில் சென்று, அல்லாஹ்வைக் காண்பது போன்று வணங்கவும், தனது இதயக்  கிடக்கைகளையும் உளக் குமுறல்களையும் அவனிடம் இறக்கிவைத்து, இறைஞ்சவும் ஒரு சாதனமாக அமைகிறது.  பள்ளியுடன் நெருக்கமான தொடர்பு ஒரு முஃமினின் வாழ்வில் அதி முக்கியமானதாகிவிடுகிறது. உண்மையான முஃமின் பள்ளியுடனான தொடர்பை துண்டித்து வாழ முடியாது. எந்த நிலையிலும் பள்ளியுடன் தொடர்பு துண்டிக்கப்படலாகாது. அவ்வாறு, துண்டிப்பவருக்கு இறையருள் எட்டாக் கனியாகிவிடும். எனவே, ஒவ்வொரு மனிதனும் இறையில்லங்களான மஸ்ஜித்களுடன் இதய பூர்வமான – ஆத்மார்த்தமான தொடர்புகளை வைத்துக் கொள்வது அவசியமாகும்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

தமிழகத்திலிருந்து முதல் முஸ்லிம் பெண் ஐ.பி.எஸ்

தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம்: என் சொந்த ஊர் கோவை. என் அப்பா, அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். நான் 10ம் வகுப்பில், 78 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2வில், 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பட்டப்படிப்பை முடித்தபின், எம்.பி.ஏ., படித்தேன். பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன்.அப்போதெல்லாம், ஐ.ஏ.எஸ்., பற்றி எந்த கனவும் இல்லை.அப்பாவின் நண்பர், பேராசிரியர் முத்துகுமார், என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க ஆலோசனை கூறினார். அதையடுத்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கும் கனகராஜ் என்பவரிடம் சேர்ந்து படித்தேன்.என் அம்மாவின் எண்ணம், திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான். என் அப்பா, என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க வைப்பதில் குறியாக இருந்தார். நானும் விடாமுயற்சியுடன் படித்தேன். டில்லி சென்று படித்தால், தேர்வில் எளிதாக ஜெயிக்கலாம் என்று யோசனை கூறினர். 

மெட்ரிக்குலேசன் கணித பரீட்சை: சிக்கலான கேள்விக்கு மதிப்பெண் வழங்கப்படும்; தேர்வுத்துறை அறிவிப்பு!!

பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் தேர்வு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (11-ந் தேதி) மெட்ரிக்குலேசன் தேர்வு முடிகிறது.   தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 28-ந் தேதி நடந்த கணிதம் தேர்வில் முதல்நாளில் முதல் கேள்வி சற்று சிக்கலானதாக இருந்ததால் மாணவ-மாணவிகள் குழப்பம் அடைந்தனர்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும்.

இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால்
பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

சனி, 9 ஏப்ரல், 2011

அமல்களைப் பாதுகாப்போம்

நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்வது நம்மீது எவ்வாறு கடமையோ அதே போன்று நன்மைகளை அழிக்கும் காரியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். நமது வியாபாரத்தில் எது நஷ்டத்தை தரும் எது லாபத்தை தரும் அறிந்து கொள்கிறோமோ அதே போன்று அறிந்து கொள்வது கடமையாகும். இப்படி அறிந்து செயல்படுவதுதான் நமது மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும்.


மத்ஹபுகளை பின்பற்றுதல்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (47 : 33)


இணைவைத்தல்

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

மக்கள் தொகை

அன்புடையீர்...! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் வெளியீடு
இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் தோராயமான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,
இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.
2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.
2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.