அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 9 ஏப்ரல், 2011

அமல்களைப் பாதுகாப்போம்

நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்வது நம்மீது எவ்வாறு கடமையோ அதே போன்று நன்மைகளை அழிக்கும் காரியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். நமது வியாபாரத்தில் எது நஷ்டத்தை தரும் எது லாபத்தை தரும் அறிந்து கொள்கிறோமோ அதே போன்று அறிந்து கொள்வது கடமையாகும். இப்படி அறிந்து செயல்படுவதுதான் நமது மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும்.


மத்ஹபுகளை பின்பற்றுதல்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (47 : 33)


இணைவைத்தல்

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

துன்யாவை நேசித்தல்
உங்களுக்கு முன் சென்றோரைப் போல் (நீங்களும் இருக்கிறீர்கள்.) அவர்கள் உங்களை விட வ­லிமை மிக்கோராகவும், அதிக மக்கட் செல்வமும் பொருட் செல்வ மும் உடையோராகவும் இருந்தனர். தங்களுக் குக் கிடைத்த பாக்கியத்தை அனுபவித்தனர். உங்களுக்கு முன் சென்றோர் தமது பாக்கியத்தை அனுபவித்தது போல் உங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை நீங்கள் அனுபவித்தீர்கள். (வீண் விவாதங்களில்) மூழ்கியோரைப் போல் நீங்களும் மூழ்கி விட்டீர்கள். இவர்களது செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விட்டன. இவர்கள் தாம் இழப்பை அடைந்தவர்கள். 9 : 69
பித்அத் செய்தல்
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். ”அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ் விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது” எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
பிறர் பார்ப்பதற்காக செய்தல்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.2 :264


அஸர் தொழுகையை விடுதல்.
அபுல்மலீஹ் (ஆமிர் பின் உசாமாலிரஹ்) அவர்கள் கூறியதாவது:
மேகமூட்டமுடைய  ஒரு நாளில் புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் நாங்கள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ”அஸர் தொழுகையை விரைவாக (அதன் ஆரம்பநேரத்தில்) நிறைவேற்றுங்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ”யார் அஸர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன” என்று கூறியுள்ளார்கள்” என்றார்கள்.நாய் வளர்த்தல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய் விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
”கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அல்லாஹ் மன்னிக்கமாட்டான்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர், ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று கூறினார். அல்லாஹ், ”இன்ன மனிதனை நான் மன்னிக்கமாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்துவிட்டேன். உன் நல்லறங்களை அழித்துவிட்டேன்” என்றோ, அதைப் போன்றோ கூறினான்.இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நன்றி : கடையநல்லூர் அக்ஸா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக