அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வானம் பிளந்து போகும்

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும் என்று கூறும் அல்குர்ஆன்!!!
இதை உண்மை படுத்திய NASAவான்வெளி ஆய்வு நிலையம்

“வானம் பிளந்து எண்ணையை போன்று சிவந்ததாக ஆகும் ” -(55:37)

வானம் பிளந்து போகும். அதாவது வானத்து கட்டுமானப் பொருட்கள்
வெடித்துப் பிளந்து விடும்.அப்போது அதன் தோற்றம் பூ போன்றிருக்கும்.
அந்த பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் என்பது இறைவனே அறிந்த விஷயமாகும். எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை இறைவனே ஆக்கி வைத்துள்ளான்.

அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின் மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன.அப்படி வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன. விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும். இது போன்று சிறிய சிறிய வசனங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை அல்லாது மனிதர்களின் வார்த்தை அல்ல என்பதற்கு இது போன்ற வசனங்கள் நமக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

(மின்னஞ்சல் தகவல்)
நன்றி : சமீர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக