அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 4 மே, 2011

உணரப்படாத தீமை – சினிமா!

நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது. இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா?இல்லையெனில்… மக்களைச் சுருள வைக்கும் திரைப்பட சுருளையெல்லாம் ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’

சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.

கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், “அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி.தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான். இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் செர்டிபிகட்ஸ்.

செவ்வாய், 3 மே, 2011

முஸ்லிம்களே! விழித்திருங்கள் !!

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவன் எனவும், அவனைத்தவிர வேறு கடவுள்கள் இல்லை எனவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்கள். அல்லாஹ்வின் போதனைகள் ஆகிய குர்ஆனையும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலான ஹதீஸையும் பின்பற்றக்கூடியவர்களே முஸ்லிம்கள்.

முன்னைய காலத்தில் தாம் வாழ்கின்ற வாழ்க்கையைக் கொண்டே இவர்கள் முஸ்லிம்கள் என்று அறியக்கூடியதாக இருந்தது. அது ஒரு காலம். அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கையை நடைமுறைப்படுத்தியவர்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெயரைக் கொண்டுதான் ஒருவர் இன்னொருவரை, இவர் முஸ்லிம் சகோதரர் என்று அறியக்கூடியதாகவுள்ளது.அதுவும் அவர் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வாழ்பவரா என்பதை அல்லாஹ்வே அறிவான் நாம் முஸ்லிம்கள் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டியவர்கள். ஆனால், இன்று மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியவர்களாகவும் ஒரு முஸ்லிமுடைய பண்புகளை குழிதோண்டிப் புதைக்கக்கூடியவர்களாகவும் உள்ளோம்.

ஏகத்துவ இமாம் - இப்ராஹீம் (அலை)

இப்ராஹீம் (அலை) அவர்கள் அன்று ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப்பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!


இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)

திங்கள், 2 மே, 2011

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

அல்லாஹ்வின் திருப்தி யாருக்கு?(பகுதி-1)

இந்த உலகில் நம்முடையை வாழ்க்கை என்பது எதற்க்கு?, எதனை நோக்கி பயணிக்கிறோம் என்றால் ஈமான் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் பளிச் சென்று செல்லிவிடுவார்கள் நம் மறுமை வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்க தான் என்று.அது மட்டும் அல்ல நாம் செய்யக்கூடிய நல்ல அமல்கள் அதனை எதிர் நோக்கி தான் என்பதில் எந்த ஈமான் தாரிகளுக்கும் எவ்வித சந்தேகமில்லாமல் கூறுவோம்.


இவ்வுலக வாழ்கையின் நல்ல செயல்முறைகள் செய்வதும் மற்றும் தீமையான வழிமுறைகளே எல்லாம் ஒவ்வொரு முஸ்லிம்களும் புறக்கணிப்பதும் எதற்க்கு என்றால் அல்லாஹ்வின் திருப்தி பெற வேண்டும் என்ற தொலைநோக்குபார்வை தானே தவிர வேறு எதுவாகவும் அறவே இருக்க வாயப்பில்லை அதன் வகையில் அல்லாஹ்வின் திருப்தியை பெற என்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதை காண்போம்.


 முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது அதுதான் மகத்தான வெற்றி. (9-72)

ஞாயிறு, 1 மே, 2011

ஸியாரத் என்றால் என்ன?


சம்சுதீன்

பதில் :
 
ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும். அவர்கள் மறுமை வாழ்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
 
கப்ருகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன.
முதல்வகை:
 
முஸ்லிம்களின் கப்ர்களை ஸியாரத் செய்வது முதல் வகை. மண்ணறைகளுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருதல் ஒரு வகையாகும். இதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.
(2208) ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ الآخَرَانِ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّهِ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ. فَيَقُولُ: «السَّلاَمُ عَلَيْكُمْ دَارِ قَوْمٍ مُؤْمِنِينَ. وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَداً. مُؤَجَّلُونَ. وَإِنَّا، إِنْ شَاءَ اللّهُ، بِكُمْ لاَحِقُونَ. اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ» وَلَمْ يُقِمْ قُتَيْبَةُ قَوْلَهُ «وَأَتَاكُمْ». 
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள)
"பகீஉல் ஃகர்கத்' பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:
 
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்.வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன்.அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.
 

இஸ்லாத்தின் பார்வையில் சகோதரர்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக ‎வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் ‎அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த ‎இருவரில் சிறந்தவர்.''
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)‎

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "முஃமினை ‎மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி ‎விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் ‎பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் ‎கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)‎

இஸ்லாத்தில் பெண்களுக்கும் சொத்து உண்டா?


”இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வ­யுறுத்துகிறான்.

அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு.
ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது.

அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு.

அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.