அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 2 மே, 2011

அல்லாஹ்வின் திருப்தி யாருக்கு?(பகுதி-1)

இந்த உலகில் நம்முடையை வாழ்க்கை என்பது எதற்க்கு?, எதனை நோக்கி பயணிக்கிறோம் என்றால் ஈமான் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் பளிச் சென்று செல்லிவிடுவார்கள் நம் மறுமை வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்க தான் என்று.அது மட்டும் அல்ல நாம் செய்யக்கூடிய நல்ல அமல்கள் அதனை எதிர் நோக்கி தான் என்பதில் எந்த ஈமான் தாரிகளுக்கும் எவ்வித சந்தேகமில்லாமல் கூறுவோம்.


இவ்வுலக வாழ்கையின் நல்ல செயல்முறைகள் செய்வதும் மற்றும் தீமையான வழிமுறைகளே எல்லாம் ஒவ்வொரு முஸ்லிம்களும் புறக்கணிப்பதும் எதற்க்கு என்றால் அல்லாஹ்வின் திருப்தி பெற வேண்டும் என்ற தொலைநோக்குபார்வை தானே தவிர வேறு எதுவாகவும் அறவே இருக்க வாயப்பில்லை அதன் வகையில் அல்லாஹ்வின் திருப்தியை பெற என்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதை காண்போம்.


 முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது அதுதான் மகத்தான வெற்றி. (9-72)

அல்லாஹ்வின் திருப்தியின் அவசியத்தை உணர்ந்து நல்ல காரியங்களே முற்படவேண்டும் அல்லாஹ்வின் திருப்தி இருந்தால் தான் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் அல்லாஹ்வின் திருப்தி என்பது பல விதமான முறையில் நமக்கு கிடைக்கும் அதை அல்லாஹ்  ஏராளமான இடங்களில் அவன் கட்டளைகளையும், வாழ்க்கை நெறிகளையும் அல்லாஹ்  கூறுகிறான்.மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் கட்டளைகளையும் நீண்ட விளக்கங்களையும் நமக்கு கூறுகின்றார்கள்.


இதில் நாம் காண்பது எதுவெனில் மனிதனுக்கு செய்கின்ற உபகாரம்,  சேவைகள், அவர்களை கவனிப்பதும் அல்லாஹ்வின் திருப்தியை நாம் பெற முடியும்.அதன் வகையில் இன்று மனிதனுக்கு நாம் செய்ய வேண்டிய தலையாய கடமை நலன் விசாரணை.இன்று எத்தனையோ மனிதர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆட்ப்பட்டு, பாதிக்கப்பட்டு கவலையுடனும் பதற்றதுடனும் பிற மனிதர்களின் அன்பபை எதிர்பார்த்தும்,அரவணைப்பு எனும் தேவையை பலவழிகளிலிலும் எதிர்ப்பார்க்கின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக பல்வேறு வகையில் பாதிப்பு அடைந்துள்ள,அடைந்திருக்கும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இஸ்லாம் பல வகையில் கட்டளையிடுகிறது.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது

 நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட (ஏழு செயல்கள் இவை தாம்;

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2.
ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3.
தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று சொன்னால் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று பிராத்திப்பது
4.
சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.
5.
அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.
6.
விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.
7.
சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.
(புகாரி  2445.)  
இதில் முதலில் நோயாளிகளே நலம் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால், அந்த பணியின் முக்கியத்துவம் நமக்கு புரிகிறது
அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவிக்கிறார்கள்
இறைத்தூதர்(ஸல்)  அவர்கள் போர்க்கைதியை (எதிரியிடமிருந்து)
விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம்
விசாரியுங்கள்" என்று கூறினார்கள். 3046.
நபிகள் நாயகம் (ஸல) அவர்கள், பசித்தவர்களுக்கு உணவளிப்பது எப்படியோ அதுபோல் நலம் விசாரிப்பதும் தலைபெரும் கடமை என்பதை நமக்கு  உணர்த்தியிருக்கிறார்கள்
நபிகள் நாயகம்(ஸல) அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல் அவர்கள்  தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள் (புகாரி 2742).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாங்கள் காலத்தில் நோய்வாய்ப்பட்ட பல மார்க்க அன்பர்களை நலம் விசாரிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களின் முன்னால் யார் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் அந்த அன்பர்களை சந்திப்பதை தான் அவர்களின் தன்னலமற்ற சேவையாக செயதார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதநேயத்தை உலக்கு சென்னார்கள், அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்


                                                                  தொடரும் இன்ஷா அல்லாஹ்.......
நன்றி : தவ்ஹீத் வெளிச்சம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக