அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 15 மே, 2013

BSNL நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை!

தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிக்காம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியில் சேர விரும்பும் டிப்ளமோ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (TTA) பணியிடங்களை நிரப்ப வருகிற ஜூன் 30-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. குன்னூர், கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காரைக்குடி, கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள செகண்டரி சுவிட்சிங் ஏரியா பிரிவில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், ரேடியோ என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் டிப்ளமோ படித்த மாணவர்கள் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். எம்எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களும் இந்தப் பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

வயது வரம்பு இந்த ஆண்டு ஜூலை 13-ஆம் தேதியன்று, 18-வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும். பிஎஸ்என்எல் ஊழியர்களாக இருப்பவர்கள், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 40 வயது வரை இருக்கலாம். ஓபிசி பிரிவைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 43 வயது என்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 45 வயது என்றும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

சூரியனில் இருந்து அடுத்தடுத்து சிதறும் நெருப்பு பிளம்புகள்: விண்கலங்கள் பாதிக்கும் அபாயம்

கடந்த 48 மணி நேரத்தில் சூரியனில் ஏற்பட்ட மிகப்பெரிய 4 வெடிப்புகளில் இருந்து நெருப்பு ஒளிப்பிளம்புகள் சீற்றத்துடன் வெளியேறியுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சூரிய ஒளிப்பிளம்பு நேற்று படம் பிடிக்கப்பட்டது.

இந்த நெருப்பு ஒளிப்பிளம்புகளில் இருந்து வெளியேறும் வெப்பக் கதிர்கள் பூமியை வந்தடையும். அப்போது பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கலத்திற்கும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

சோலார் மினிமம் காலகட்டத்தில் இருப்பதைவிட மேக்சிமம் காலகட்டத்தில் அதிக வெப்பம் இருக்கும். சூரியனின் 11 ஆண்டுகால இந்த சுழற்சி இப்போது நெருங்கிக்கொண்டிருப்பதால், சூரியனில் இருந்து இதுபோன்று நெருப்பு ஒளிப்பிளம்புகள் அடிக்கடி வெளியேறும் என்று பிரிட்டன் வானியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

நன்றி : maalaimalar

வெள்ளி, 10 மே, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -18)

மிக எளிதில் மக்களை ஏமாற்ற உதவும் ஆன்மீகத் தலைமையை எவ்வாறு அப்பழுக்கற்றதாக ஆக்கிச் சென்றார்கள் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகக் கலந்து கொண்ட போர்களில் உஹதுப் போரும் ஒன்றாகும்.இப்போரில் அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இறைத் தூதரைக் காயப்படுத்தி பற்களையும் உடைத்தவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்' என்று கூறினார்கள். உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை என்ற குர்ஆன் வசனம் (3:128) அப்போது அருளப்பட்டது
 நூல் : முஸ்லிம் 3346.

வேதனைப்படுத்தப்பட்டவர்கள் எதிரிகளைக் குறித்து இவ்வாறு கூறுவது சாதாரணமான ஒன்று தான். இறைத் தூதரைக் காயப்படுத்தியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் பயன்படுத்திய வாசகத்தை இந்த வகையில் குறை கூற முடியாது. 'தனக்கு ஏதோ ஆற்றல் இருப்பதாகவும் தன்னுடன் மோதியவர்களைச் சபித்தே அழித்து விடுவேன் என்பது போன்ற ஆன்மீக ஆணவமும் இந்தச் சொற்றொடரில் இல்லை. இது ஒரு வேதனையின் வெளிப்பாடு தானே தவிர வேறு இல்லை' என்று தான் நாம் நினைப்போம். ஆனால், இறைவன் இதை விரும்பவில்லை.இறைத் தூதரைக் காயப்படுத்தினால் காயப்படுத்தியவர்கள் தோல்வியைத் தான் தழுவ வேண்டும் என்பதில்லை. இறைவன் நாடினால் இத்தகைய கொடூரமானவர்களுக்கும் இவ்வுலகில் வெற்றியை வழங்குவான். மறுமையில் தான் இவர்களுக்கான சரியான தண்டனை கிடைக்கும்.இறைத் தூதரைத் தாக்குவதோ, ஆதரிப்பதோ இவ்வுலகின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. அது இறைவனாக எடுக்கின்ற முடிவாகும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இதை போதிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொற்றொடர் இந்த அடிப்படைக்கு எதிரானது என்று இறைவன் கருதுகிறான். தமக்கு இறைத் தன்மை உள்ளது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தா விட்டாலும், வேதனையின் வெளிப்பாடாகவே இருந்தாலும் இறைவன் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கூட விரும்பவில்லை. தனது அதிகாரத்தில் தலையிடுவதாக இறைவன் எடுத்துக் கொள்கிறான்.எனவே தான் முஹம்மதே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவுறுத்துகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட வேதனையை விட அவர்கள் கடவுளாகக் கருதப்படும் வாசலை முழுமையாக அடைக்க வேண்டும் என்பதில் தான் இறைவன் கவனம் செலுத்தினான்.

ரத்த அழுத்ததை குறைக்க உதவும் சூரிய ஒளி

சூரிய ஒளியால் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும் நிலையில் தற்பொழுது மேலும் சில நன்மைகளை பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
சூரிய ஒளி, உடலிலுள்ள ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றது.
இந்த ரசாயனம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி புரிகின்றது. மேலும் திடீர் மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : newsonews

தமிழகத்தில் பான் பராக், குட்காவுக்கு தடை: முதல்வர் அதிரடி

சென்னை: முதல்வர் ஜெயலலிதா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதாவது பான் மசாலா, குட்கா போன்றவற்றை இங்கு தயாரித்து, விற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக சட்டசபையில் அவர் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவி்ப்பில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி தரப்படும். ஆண்டுதோறும் இனிமேல் 15 சதவீதம் நிதி உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் 15 இடத்தில் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு இந்தாண்டு 10 ஆயிரம் பசுகை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து குட்கா , பான் மசாலா போன்றவற்றை தமிழகத்தில் தயாரிக்க முடியாது, கடைகளில் விற்க முடியாது. யாரும் இருப்பு வைக்கவும் கூடாது. இதன் மூலம்  பான் பராக்கை கண்ட இடங்களில் மென்று தினறு புளிச் புளிச் என யாரும் துப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நன்றி : thatstamil

வியாழன், 9 மே, 2013

இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை - இளமை !

உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
 
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70) 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி)

இளமை! இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை! வளம் 
 பொருந்திய ஆக்கங்களுக்கும், வீரதீரமிக்க சாகசங்களுக்கும் உண்டான செயல் களமே இளமை! தயக்கமும் தடுமாற்றங்களும் இன்றி தரம் உயர்ந்த கனவுகளை மெய்ப்படுத்த முயற்சிக்கும் அருமையான காலகட்டமே இளமை!

இந்த பூவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் அது கொள்கையானாலும் சரி, கோட்பாடுகளானாலும் சரி புதிய புதிய விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களானாலும் சரி அல்லது குடும்பப்பராமரிப்பானாலும் சரி அதன் பின்னே ஒரு இளைஞனின் கனவும் உழைப்புமே அஸ்திவாரமாய் இருப்பதைக் காணலாம்.கடினமாய் தோன்றுபவைகள் எல்லாம் இளைஞனின் கைபட்டு இலகுவாய் ஆன சம்பவங்கள் மனித வரலாற்றில் மண்டிக் கிடப்பதை சர்வசாதரணமாய் நாம் பார்க்க முடிகிறது. நபிமார்களானாலும் நல்லடியார்களானாலும் இறையருள் பிரமிக்க வைக்கும் அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் வழிகாட்டும் வரலாறுகளாய் ஆனது அவர்கள் இளமையில் வளர்த்த செயல்திட்டங்களேயாம்.அதனால் தான் அரசியல் கட்சிகளும் சரி, மதம் சார்ந்த அமைப்புகளும் சரி இளைஞர்களை கருத்தில் கொண்டு தான் செயல்படுகின்றனர். இளைஞர்களை கவரும் விதத்தில் தங்களின் செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றனர். இளைஞர்களை வசீகரித்து அவர்களின் அந்த தன்னலமில்லாத, எதையும் சாதிக்க வேண்டும் என்கிற உந்துதலை தங்களின் சுயவளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு, இளைஞர்களை பகடைக் காய்களாக ஆக்கி விடுகின்றனர். ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா இளைஞர்களைக் கொண்டு தான் தன்னுடைய மார்க்கத்தை உறுதிப்படுத்தி இருக்கிறான். மேலும் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இறைவன் நமக்கு தன்னுடைய வேதத்தகத்திலே பல நபிமார்களின் வரலாறுகள் மூலமாக கற்றும் தருகிறான். மேலும் இந்த உலகில் நம்மை படைத்த இறைவன் நாம் மரணித்தப் பின் கேள்வி கேட்கப்படும் நாளில் எழுப்பப்படும்போது பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற தன்னுடைய திருத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மூலமாக எச்சரிக்கையும் செய்கிறான்.

வெள்ளி, 3 மே, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -17)

'நானும் உங்களைப் போன்ற மனிதனே' என்று பிரகடனம் செய்துவிட்டு அதை எந்த அளவுக்கு உறுதியாகக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கான மற்றொரு சான்றையும் பாருங்கள்.

தாம்பத்திய உறவுக்குப் பின்னர் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளை.

ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். அனைவரும் வரிசையில் நின்றனர். தொழுகைக்குத் தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அப்போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் 'அப்படியே நில்லுங்கள்' எனக் கூறி விட்டுச் சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள். நூல் : புகாரி 275, 639, 640

அவர்கள் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். என்ன இவர்கள் இவ்வளவு கவனமில்லாமல், அக்கரையில்லாமல் தொழுகை நடத்த வந்து விட்டார்களே என்று மக்கள் நினைப்பார்கள் என்றெல்லாம் இந்த மாமனிதர் வெட்கப்படவில்லை. மற்றவர்களைப் போலவே தாமும் ஒரு மனிதர் தாம், மற்றவருக்கு ஏற்படுவது போலவே தமக்கும் மறதி ஏற்படும் என்பதை மக்கள் மன்றத்தில் பகிரங்கப்படுத்துகிறார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள். அதன் காரணமாக தலைநகரில் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் பொறுப்பையும் அவர்கள் சுமந்து கொண்டார்கள். தலைநகரான மதீனாவைப் பொருத்த வரை அவர்கள் தாம் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்கள்.தலைமை நீதிபதியாக இருப்பதுடன் ஆன்மீகத் தலைவராகவும் இருப்பதால் தமது தீர்ப்பில் எந்தத் தவறும் நிகழாது என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும். அதை அப்படியே மக்கள் நம்பியிருப்பார்கள். நபிகள் நாயகத்தின் தீர்ப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் வேண்டுமானால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதலாம். அவரும் கூட வெளிப்படையாக அதை விமர்சிக்க முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு இருந்தது. ஆனால் இந்த மாமனிதர் என்ன சொன்னார்கள்?

'
மக்களே! என்னிடம் நீங்கள் வழக்கு கொண்டு வருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட தனது வாதத்தை நிலை நாட்டும் திறமை பெற்றவராக இருக்கிறார். நானும் அதைக் கேட்டு அதை உண்மை என நம்பி தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் அவனுக்கு அது கேடாக முடியும்' என்று எச்சரித்தார்கள்
 நூல் : புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185

வியாழன், 2 மே, 2013

ஆச்சர்யமூட்டும் அமேசான்.....!!

உலகில் உள்ள காடுகளிலேயே மிகப்பெரியது அமேசான் காடுகள். அடர்த்தியான காடுகளும் இவைதான். அமேசான் என்றால் 'உயரமான திடகாத்திரமான பெண்' என்று அர்த்தம். அமேசான் நதியை நதிகளின் ராணி என்றுஅழைக்‍கிறார்கள். 6,712 கி.மீ. நீளம்கொண்ட இந்த நதி ராணி என்றால் அதை சூழ்ந்திருக்‍கும் காடு ராஜாதானே.அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது. சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.

உலகப்பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்‍கின்றன. உலகில் உள்ள ஒரு கோடிக்‍கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்‍கும் மேல் இருக்‍கின்றன. 2,500 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்‍கள் இந்த காடுகளில் உள்ளன.