அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 25 ஜூன், 2013

பாஸ்போர்ட் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

பாஸ்போர்ட் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டும். காவல்துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்களைத் தர வேண்டும். ரூ.4,000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் தொலைத்திருந்தால் 35 லிருந்து 40 நாட்கள் காலவரையறைக்குள் கிடைக்கும். வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நன்றி  :tamil.webdunia


0 கருத்துகள்:

கருத்துரையிடுக