அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 26 ஜூன், 2013

கடமை..நாட்டுப்பற்று..மனிதாபிமானம்..ஓர் உதாரணம்...!

டேராடூன்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற களமிறங்கிய இந்திய விமானப் படையின் முதலாவது மீட்பு அணியின் கமாண்டராக பணியாற்றியவர் எஸ்.எம்.யூனூஸ். இமயமலை சுனாமியில் சிக்கியோ இந்து யாத்ரீகர்களை மீட்ட யூனூஸின் மகத்தான சேவை ஒரு இந்தியனாக பெருமை கொள்ள வைக்கும்.. ஜூன் 14-ந் தேதி முதல் உத்தர்காண்ட் மாநிலத்தில் மழை...ஜூன் 16-ந் தேதி சரஸ்வா விமானப்படை முகாமில் இருந்த 152வது ஹெலிகாப்டர் யூனிட்டில் கமாண்டர் அதிகாரியாக இருக்கும் யூனுஸுக்கு முதலில் தகவல் கிடைக்கிறது.. மிகப் பெரும் பேரழிவை மழை உருவாக்கிவிட்டிருக்கிறது என.
ஜூன் 17-ந் தேதி டேராடூனின் ஜோலிகிராண்ட் ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறங்குகிறார் யூனூஸ்.. மறுநாள் காலை 9 மணிக்கு தமது மிக்-17 வி5 ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் பகுதிக்கு செல்கிறார். இந்த ஹெலிகாப்டர் 3 டன் எடையை சுமக்கக் கூடியது.. கேதார்நாத்தில் இருந்து குப்தகாசிக்கு 20 பேரை முதலில் மீட்டு வருகிறார் யூனூஸ்... இப்படியாக மொத்தம் 500 இந்து யாத்ரீகர்களை மீட்டவர் யூனூஸ்.. இவரது மீட்புப் பணி ஜூன் 18, 19 என தொடர்ந்து கொண்டே இருந்தது.
கேதார்நாத்தில் தாம் முதலில் சென்ற போது அங்கிருந்த ஹெலிபேட் அப்படியேிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.. கேதார்நாத் மீட்புப் பணியை முடித்துவிட்டு ஜூன் 20 பத்ரிநாத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டோம்..தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்றே வருகின்றன என்கிறார் யூனூஸ்.
பீகாரின் பகல்பூரைச் சேர்ந்த 38 வயதான யூனூஸ் இந்திய விமானப் படையில் 1995ஆம் ஆண்டு இணைந்தார். அப்போது பைலட் அதிகாரி என்ற பதவியில் இணைந்தார். தற்போது அப்பதவி இல்லை. தமது மீட்புப் பணிகள் பற்றி கருத்து தெரிவித்த யூனூஸ், இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் இந்தியன் என்பதுதான்.. அப்படித்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டோம்.. என்கிறார்.

நன்றி :thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக