அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 29 மார்ச், 2011

இளநீர்

தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு இளநீரில் இருக்கிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன.
இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும்.
இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது.
காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக
எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டிவிடுகின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது.
காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய மருந்து இது. மதுபான அடிமைகள் இளநீருக்கு அடிமையானால் அவர்கள் ஆரோக்கியம் மிக்க மனிதராகத் திகழ்வார்கள்.
குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப் பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள்.
இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாகக் கிரகித்துக் கொள்கிறது.
பாக்டீரியாக்கள் இல்லாத நோய் நுண்ம நச்சுக்கள் ஒழிக்கப்பட்ட இந்தத் தண்ணீர் பாதுகாப்பானது.
கேரளாவிலும் தமிழகத்திலும் மினரல் பாட்டில்களைவிட இளநீர் அதிகம் விற்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.
சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. இதனால்தான் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்இ மஞ்சள் காமாலை நோயாளிகள் சூட்டால் வெளியாகும். மஞ்சள் நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச் சொல்லுகிறார்கள்.
100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு 29 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும் இரத்த விருத்திக்கு 0.1 மில்லி கிராம் இரும்பும் இந்த இரும்புச் சத்தை உடல் நன்கு கிரகித்துக் கொள்ள செம்பு 0.04 மில்லி கிராமும் உள்ளன. அது மட்டுமல்ல இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குளோரின் உப்பு 183 மில்லி கிராமும் வயிற்றில் ஹைடிரோ குளோரிக் அமிலம் சுரக்கவும் தசைப்பகுதியில் அதிகமாகச் சுண்ணாம்புச் சத்து தங்கிவிடாமல் தடுக்க மிகவும் உதவும் சோடியம் உப்பு இளநீரில் நன்கு உள்ளது.
இத்துடன் மூளையும் நரம்பு மண்டலமும் கோளாறு இல்லாமல் இயங்கவும் உடலுக்கு முக்கியமாக உதவும் தாது உப்பான பாஸ்பரஸ் 37 மில்லி கிராமும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சியும் தினசரி ஒரே ஒரு இளநீரில் கிடைக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.
பசி எடுத்துச் சாப்பிடவும் மூளை நலம் (மென்ட்டல் ஹெல்த்) சிறப்பாகப் பாதுகாக்கப்படவும் டீ குரூப் வைட்டமின் நியாஸினும் இளநீரில் உள்ளது. டீ வைட்டமின் அணியைச் சேர்ந்த ‘பாந்தோதெனிக்’அமிலம் ‘பயோட்டின்’ ‘ஃபோலிக்’ அமிலம் ‘பைரிடாக்ஸின்’ போன்றவையும் இளநீரில் சிறிதளவு உள்ளன.
வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.
காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.
பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.
காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.
மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.
உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன் நலமாக நீடிக்கும் சக்தி தினசரி அருந்தும் இளநீரில் இரகசியமாக உள்ளது. இந்த இரகசியத்தை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

நன்றி : அலைகள்

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

Assalamu alaikkum
Very fine, keep it up and
Thanks for your good article.

Yakub
Hanjin Shipping

கருத்துரையிடுக