அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 27 மார்ச், 2011

இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள் அறிமுகம்

சென்னை: முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திஸ் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கார்பன் சைக்கிள் மாடல்களை டி.ஐ சைக்கிள்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

முருகப்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும், சென்னையை சேர்ந்த டி.ஐ., நிறுவனம், சைக்கிள் தயாரிப்பில் நாட்டின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. காலமாற்றத்திற்கு தக்கவாறு புதிய
மாடல்களை அறிமுகப்படுத்துவதிலும் டி.ஐ., கெட்டிக்காரத்தனமாக செயல்படுகிறது.
விண்ணை முட்டும் எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் சைக்கிள்களுக்கு மீண்டும் மவுசு கூடி வருகிறது. இதைக்கருத்தில்கொண்டு, கார்பன் இழையில்(கார்பன் ஃபைபர்) தயாரிக்கப்பட்ட எடை குறைந்த கார்பன் சைக்கிள் மாடல்களை டி.ஐ., அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டி.ஐ., நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது:

"மோன்ட்ரா பிராண்டு பெயரில் மூன்று இலகுரக கார்பன் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கார்பன் சைக்கிள்கள் என்ற பெருமையுடன் மோன்ட்ரா சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.21,000 முதல் ரூ.1.5 வரையிலான விலையில் மோன்ட்ரா கார்பன் சைக்கிள்கள் சந்தையில் கிடைக்கும். ஆண்டுக்கு 12,000 கார்பன் சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். வாடிக்கையாளர் மத்தியில் கார்பன் சைக்கிள்கள் அதிக வரவேற்பை பெறும்,"என்று கூறினார்.

நன்றி :தட்ஸ்தமிழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக