அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 26 மார்ச், 2011

பேப்பர் பேட்டரி

நம்மள்ல பல பேருக்குத் தெரியும் மின்சாரத்த தேக்கி வைக்கிற பேட்டரியை, பொதுவா சிங்க், மாங்கனீஸ்  மாதிரியான வேதியல் பொருள்களாலதான் உருவாக்க முடியும்னு. அதுமட்டுமில்லாம, லெட், மெர்க்குரி, போன்ற ஆபத்தான வேதியல் பொருள்கள் கொண்ட பேட்டரிக்களால சுற்றுச்சூழல் வெகுவா பாதிப்புக்குள்ளாகுது!
உலக வெப்பமயமாதல் மாதிரியான பேரவலங்கள தவிர்க்க வேண்டி, “எங்கும் பசுமை, எதிலும் பசுமைன்னு” எல்லாம் மாறிகிட்டு வர்ற இந்தக்
காலத்துல முக்கால்வாசி தொழில்னுட்பங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டே உருவாக்கப்படுகின்றன அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.
அந்த வரிசையில சமீபத்திய நல்வரவு “பேப்பர் பேட்டரி”! என்னங்க, இப்படி ஆச்சரியமாப் பார்த்தா எப்படி? நான் சொல்றது நம்புறமாதிரி இல்லையோ? இருக்கலாம், ஏன்னா இதுவரைக்கும் குறைந்தபட்சம் ஒரு உலோகமாவது இல்லாம தயாரிக்க முடியாதுங்கிற நெலைமல இருக்கிற பேட்டரிய சம்பந்தமே இல்லாத மாதிரி பேப்பர்ல உருவாக்க முடியும்னு சொன்னா நம்புறது கஷ்டம்தான்!

பேப்பர் பேட்டரி
ஆனா, வேற வழியில்ல. நீங்க நம்பித்தான் ஆகனும். ஏன்னா, முழுக்க முழுக்க செல்லுலோஸ் (அதாங்க பேப்பர்!) மட்டுமே கொண்டு, மின்சாரத்தை கடத்தும் ஆனால் சுற்றுச்சூழலுக்கு 100% பாதுகாப்பான ஒரு பேட்டரியை உருவாக்க முடியும்னு நிரூபிச்சிருக்காங்க  ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம்மே!
அதுக்காக நீங்க, “இந்த பேட்டரி வெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டும்தானா” அப்படின்னு அல்பமா நெனச்சுடாதீங்க. இதுல நீங்க கற்பனை செஞ்சு பார்க்க முடியாத அளவுக்கு பெரிய மாயாஜாலமெல்லாம் இருக்குங்க! வாங்க அது என்னன்னு பார்ப்போம்….

பேப்பர் பேட்டரியின் மாயாஜாலங்கள்!
ஒரு உதாரணத்துக்கு சொல்லனும்னா, பொதுவா நீங்க பரிசுப் பொருள்கள் எல்லாம் கொடுக்கும் போது அதை ஒரு பல வண்ண, ஜொலிக்கிற மாதிரி இருக்குற பேப்பரிலே சுத்தி  “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” அப்படின்னு எழுதிக் கொடுக்கிறதுதானே வழக்கம்? ஆனால் அதுவே, பரிசுகளை சுற்ற பயன்படுத்தும் பேப்பரே “வண்ண ஒளியுடன் ஒளிரக்கூடிய எழுத்துக்களைக் கொண்டிருந்தால்” எப்படி இருக்கும்?! சொல்லவே வேணாம்…..சும்மா சூப்பரா இருக்கும்!

சரி, இனி நாம இந்த பேட்டரியப் பத்தின சில சுவாரசியங்களை வரிசையா பார்ப்போம்….

1. இந்த பேட்டரிய மிகச் சுலபாம உருவாக்கிடலாமாம். ஏன்னா, “க்ளாடோஃபோரா” அப்படிங்கிற ஒரு கடல் வாழ் ஆல்கேவான ஒரு தாவரத்திலிருந்துதான் இதை உருவாக்கியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, கடல்ல தானா வளர்றதுனால இது மிகவும் மலிவானதும்கூட!
2. மிகவும் லேசான, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான, வளைக்கக்கூடிய, உலோகக் கலப்பே இல்லாத , மலிவான பேட்டரியாம் இந்த பேப்பர் பேட்டரி. அடேங்கப்பா!
3. இது செல்லுலோஸில் உருவாக்கப்பட்ட பேட்டரி என்பதால் “பாலிமர் பேட்டரி” அப்படிங்கிற வகையைச் சார்ந்தது. ஆனால், இதுவரை உள்ள பாலிமர் பேட்டரிக்களைவிட 50-200 மடங்கு அதிக அளவு மின்சாரத்தை தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்ததாம் இந்த பேப்பர் பேட்டரி!
4. இதை மிகச் சுலபமா “சார்ஜ்” பண்ணிடலாமாம். அதுமட்டுமில்லாம, இப்போ பயன்பாட்டுல இருக்கிற லித்தியம் பேட்டரிக்களை விட வேகமா சார்ஜ் ஆகக் கூடிய சக்தி படைத்ததாம் இந்த பேட்டரி. பரவாயில்லையே!
5. இந்த பேட்டரியில் ரீச்சார்ஜபுள் வகையும் உண்டு.

இதை எல்லாத்தையும் விட கவர்ச்சிகரமான ஒரு பயன்பாடு இருக்கு இந்த பேட்டரிக்கு. அது என்னன்னா, “ஃப்லெக்சிபுள் எலக்ட்ரானிக்ஸ்” அப்படின்னு சொல்லக்கூடிய, உடைகளின்மேல் ஜொலிக்கும் தன்மை கொண்ட சில பயன்பாடுகளுக்கும்  இந்த வகை பேப்பர் பேட்டரிக்களை உபயோகப்படுத்திக்கொள்ளலாமாம்.

உதாரணமா சொல்லனும்னா, உங்க வீட்டுல இருக்குற வால்பேப்பர்ல இருக்குற லைட் சென்சர்ல இந்த வகை பேப்பர் பேட்டரியப் போட்டுட்டீங்கன்னா அப்புறம் என்ன வீட்டையே ஒரே ஜிகு ஜிகுன்னு ஜொலிக்க வச்சிடலாம் போங்க!
தற்போதைக்கு தொடக்க நிலையில இருக்கிற இந்த பேப்பர் பேட்டரியின் பயன்பாடு கூடிய சீக்கிரம் முழுமையடைஞ்சு கடைகள் கிடைக்கும்னு சொல்றாங்க மரியா ஸ்ட்ரோம்மே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக