அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

இறைநேசர்கள் யார்? (பகுதி-3)

தமக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் ‘திருப்தி அடைந்தீர்களா?’ என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ள போது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?’ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் ‘அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்’ என்பான். அவர்கள் ‘அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ‘உங்கள் மீது என் திருப்பதியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான். (அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி – 6549)

அல்லாஹ்வுக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வதாக நற்சான்று அளிக்கிறான்! இன்று நம்மில் எத்தனைபேர் அல்லாஹ்வுக்கு கீழ்படிகிறோம் இந்த வசனத்தை உங்கள் உள்ளத்தில் நுழைத்து சிந்தித்துப் பாருங்கள்.

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ”செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோன் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 24: 51)


அல்லாஹ் என்ற வார்த்தையை கேட்டால் உள்ளம் நடுங்க வேண்டும் தவறான வழியில் நாம் இருந்து இந்த தவறான வழி அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல்ல என்று அறிந்துக் கொண்டாலோ அல்லது தூதரின் வழிகாட்டுதலை செவியுற்றாலோ அந்த நிமிடமே நாம் நம்முடைய தவறான செயல்களை விடுவித்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட வேண்டுமே ஆனால் இன்றைக்கு நாம் தலைவர்களுக்கு கீழ்படுதலில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம் இது உண்மையான கீழ்படுதலா?

தலைமைப் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் ஒரு விஷயத்தில் மாறு செய்வது போன்று தென்பட்டால் அவருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர் என்ன செய்ய வேண்டும்? தலைமை பதவியில் இருப்பவருக்கு கட்டுப்பட வேண்டுமா? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டுமா? இந்த உலகத்தில் உள்ள அற்ப சுகத்திற்காக ஈமானை விற்கலாமா? இவ்வாறு ஈமானை விலைபேசி விற்பவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானா?


அறிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே இறைநேசர்கள் என்பவர்கள் இவர்கள்தான்!

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்தவர்கள்
காசு பணத்திற்காக அல்லாமல் அல்லாஹ்வுகாக ஒருவரை யொருவர் நேசிப்பவர்கள், உதவி செய்பவர்கள், நெருங்கி வாழ்பவர்கள், தம்மைவிட பிறரை அதிகமதிகம் நேசிப்பவர்கள், மக்கள் கொஞ்சம்கூட வழிதவறி நரக வாசலை அடைந்துவிடக்கூடாதே என்று வருந்துபவர்கள்

ஹிஜரத் செய்தவர்களில் ஒரு பகுதியினர்
அன்ஸார்களிலும்  மற்றும் முந்திச் சென்ற முதலாமவர்கள்
நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோர்
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடுங்குபவர்கள்
அல்லாஹ்வுக்காகவே உண்மை பேசுபவர்கள்
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, கொண்ட தவறான கொள்கையை துச்சமாக மதித்து தூக்கி எறிந்தவர்கள்
தவறான தலைமைக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு உண்மையை நிலைநாட்ட பாடபடுபவர்கள் ஆகியோர் அடங்குவார்கள்! இத்தகைய சிறப்பு பெற்றிருந்தாலும் இவர்கள் வணங்கத்தகுதி யானவர்கள் அல்ல!


அவ்லியாவுக்கான இலக்கணம்

ஒருவர் அல்லாஹ்வினால் நேசிக்கப்பட்டு, ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மலக்குமார்களுக்கு முறையான அறிவிப்பு அறிவிக்கப்பட்டு, பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்படுகிறதோ அவர்தான் அவ்லியா! ஆனால் நீங்கள் யார் யாரையெல்லாம் அவ்லியா என்று கருதுகிறீரோ அவரை அவ்லியாவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் கீழ்கண்ட ஆதாரங்களை முன்வையுங்கள்!
  • அல்லாஹ் நேசிக்கிறான் என்பதற்கு ஆதாரம்
  • ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட ஆதாரம்
  • மலக்குமார்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆதாரம்
  • பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்பட்ட தற்கான ஆதாரம்
ஒருக்கால் நீங்கள் அல்லாஹ்விடமும், ஜிப்ரயீல் (அலை), மலக்குமார்கள் மற்றும் மக்களின் உள்ளங்களின் ஆதாரங்களை திரட்டி நம் முன்னால் வைத்து இந்த தர்காஹ்வில் அடைபட்டு கிடக்கும் மனிதர் அவ்லியா என்று சான்றுரைத்தாலும் நாம் அல்லாஹ்வைத்தான் வணங்குவோமே தவிர அவ்லியாவை வணங்கமாட்டோம்! அல்லாஹ் அவனே வணங்குதவதற்கு தகுதியானவன் நாம் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக இருப்போம்! என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

لا اله الا الله محمد رسول الله

(There is none worthy of worship but Allah, and Muhammad is the messenger of Allah)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.

குறிப்பு

பல்வேறு இணையதளங்களில் குர்ஆன் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்துத்தான் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது! இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்த இணையதள, பிளாக் சகோதரர்களுக்கு நன்றி! ஜஜாகல்லாஹ் கைரன்!
நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் உற்றுநோக்குபவனாக இருக்கிறான்! அவன் நம் அனைவருக்கும் நிரப்பமாக நற்கூலி வழங்கி நம் பாவங்களை மன்னிப்பானாக!
அறிவைக்கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்

நன்றி : islamicparadise

0 கருத்துகள்:

கருத்துரையிடுக