அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 8 ஜனவரி, 2013

ஹைஹீல்ஸ் செருப்பு அணிவதால் ஏற்படும் பாதிப்புகள்

பெண்களுக்கு அழகான தோற்றத்தை தருவதாக நம்பப்படுவதால் ஹைஹீல்ஸ் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் 50 சதவீத ஹைஹீல்ஸ் பெண்களுக்கு பாதவலி, சுளுக்கு, மனஇறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீண்ட காலத்துக்கு ஹைகீல்ஸ்அணிவதால் சுளுக்கு, கால் ஆணிகள், கொப்புளங்கள் தவிர குதிகாலின் பின் பகுதி பெரிதாகி துருத்திக் கொண்டு சிவப்பாகவோ அல்லது வீங்கியோ இருக்கலாம்.

எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து,விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்ச வலி ஏற்படலாம். காலை உயர்த்திய நிலையில் வைத்திருப்பது குறுகிய கால தசை நார் வலியை உருவாக்கலாம். இதனால் தட்டையாக காலணிகளை அணிய முடியாமல் போகலாம்.முதுகெலும்பு நகர்வு, அதன் மீது அதிகபட்ச அழுத்தம் அல்லது முட்டியைப்பு இடம் நகர்வு போன்ற உடல் தோற்ற பிரச்சனைகளுக்கு ஹைஹீல்ஸ் காரணமாக அமையலாம். தொடர்ந்து ஹைஹீல்ஸ் அணிவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஹைஹீல்சுகுள் காலைத் திணிப்பதால் ஒரு நாளில் பாதம் சுமார் 455 கிலோ சக்தியை உள்வாங்குகிறது.

பாதத்திலிருந்த அதிகப்படி ரத்தம் வெளியேறி, வீக்கம் உருவாகிறது. இந்த வீக்கத்தை குறைக்க ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீரையும், சுடுதண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றவும். கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி காய வைத்து மாய்ஸ்சுரைஸ் செய்யவும். சில  பயிற்சிகளையும் செய்தால் கால்வலியில் இருந்து மீளலாம். காலில் வலி, வீக்கம், அதிகமானால் , காலணிகளை கழற்றிவிட்டு அமருங்கள். சிறிய பந்தின் மீது காலை வைத்து உருட்ட வேண்டும். அடுத்த காலுக்கு மாற்றி அதையே செய்யவும்.
கோலிக்குண்டுகளை தரையில் சிதறச் செய்து கால் விரல்களால் ஒவ்வொன்றாக ஒற்றியெடுக்கவும். கால்விரல்களை கீழ் நோக்கி நீட்டவும், பின்னர் அமல் நோக்கி வளையுங்கள்.

இதை தலா 6 முறை செய்தால் நல்லது. அதே போல் ஹீல்ஸ் அணிந்து படிகளில் ஏறும் போது பாதத்தின் முன் பகுதியும் குதிகாலும் ஒரே நேரத்தில் நன்றாக வைக்கப்படுவதை உறுதிப்படுத்தவும், படிகளில் இறங்கும் போது பாதத்தில் முன்பகுதி முதலில் வைக்கப்பட வேண்டும். ஹீல்ஸ் அணிந்து வாகனம் ஓட்டக்கூடாது. முழு கட்டுப்பாடு கிடைக்காது. காலணியின் பின்புறமும் சேதமாகும்.

கூடியவரை ஹீல்ஸ் உபயோகிக்காமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மீறி உபயோகிக்க வேண்டும் என்றால் மேற்சொன்ன பயிற்சி முறைகளை தவறாது செய்ய வேண்டும்.

நன்றி: மாலைமலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக