அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 27 மார்ச், 2011

மேற்குலகின் சிந்தனை ரீதியான படையெடுப்பு - 1

கத்தியின்றி, இரத்தமின்றி,  துப்பாக்கியின்றி,  ரவைகளின்றி,  இலை மறைகாயாய்  இன்றொரு யுத்தம் நடைபெறுகின்றது. இலகுவில் எவரும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் கனகச்சிதமாய் இப்போரை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.  இதில் எதிர்பார்க்கப்படும் பரப்பு மிக விசாலமாயினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவிர அங்கே அவர்கள் பெரியளவில் எதனையும் தடைக்கற்களாகக் காணவில்லை. எனவே அவர்களின் முதல் எதிரி இஸ்லாம். முதல் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுப்பதே!
மேலே குறிப்பிட்டயுத்தம்அதனை வழிநடத்தும்அவர்கள்இந்த இரண்டு அறியாக்கணியங்கள் குறித்தும் அவர்களின் சதிமுயற்சிகள் குறித்தும் இக்கட்டுரையில் ஆராயவிருக்கின்றோம்.
18ம் , 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மேற்கொண்ட காலணித்துவ ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே இதனையும் நோக்க வேண்டும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகமகா யுத்தமாகக் கருதப்படும் மூன்றாம் மண்டல நாடுகள் மீதான மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பாகும். உலகளாவிய ரீதியில் தங்களது தலைமை கை நழுவி விடக்கூடாதென்ற நப்பாசையும், என்ற நாம மந்திரம் கை விட்டுப் போகக் கூடாதென்ற பேராசையுமே இவ்வாறானதொரு யுத்தத்திற்குத் திருப்பு முனையாக அமைந்துள்ளது. 2ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வளர்முக நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக மேற்குலகு அடிமைப்படுத்தி வந்தது. எனினும் உலகம் விழித்துக் கொண்டதனால் அதன் தொடர்ச்சியை இன்று சிந்தனைப் படையெடுப்பினூடாக மறைமுகமாக மேற்கொள்கின்றது.
வல்லரசு
இஸ்லாத்தைத் துடைத்தொழிப்பதில் யூத சியனிஸ்டுகளினது செயற்பாடு இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. வரலாற்றுத் தொடராக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. மக்காவிலிருந்து நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்றது முதல் பிற்பட்ட கலீபாக்கள், உமையாக்கள், அப்பாஸியர்கள்,  உஸ்மானியர் காலம் தொடக்கம் இன்றுவரை இந்த செயற்பாடுகள் தொடர்வதனை வரலாற்றினூடாகக் காணலாம்.
முஸ்லிம்களிடம் அன்று காணப்பட்ட ஐக்கியமும் கொள்கைப் பலமும் நெஞ்சுறுதியும் மேற்குலகம் மேற்கொண்ட பல வரலாற்றுப் போர்களில் அவர்களை மண் கௌவ்வ வைத்தது. எனவே இராணுவ ரீதியான படைநகர்த்தல்களால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான தொடர்பைக் கருவறுப்பது (Alienation) தங்களால் அசாத்தியமெனக் கண்டமையே, புதியதொரு வழியின்பால் அவர்களை சிந்திக்கத் தூண்டியது.
ஒவ்வொரு முஸ்லிம் நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் அங்குள்ள வளங்களைச் சுரண்ட வேண்டுமானால் முஸ்லிம்களை சத்திய மார்க்கமான இஸ்லாத்தை விட்டும் தூரமாக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.  இதற்காக மேற்குலகம் பல நுனுக்கமான திட்டமிடல்களை வரைந்து படிப்படியாக அதனை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அமுலாக்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை.
1.       மேற்கின் கலாசார நாகரீகங்களின்பால் முஸ்லிம் இளைஞர்களின் கவனத்தை
2.       வரையறைகளின்றி அவர்கள் மத்தியில் ஆபாசக் குப்பைகளைக் குவித்தல்
3.       இஸ்லாம் பற்றிய சந்தேகங்களைக் கிளப்பி தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தி மேற்கு அறிஞர்களின் கொள்கைக் கோற்பாடுகளை விதைத்தல்
4.       இஸ்லாத்தை வரைமுறையின்றிக் கொச்சைப் படுத்தல்
5.       தம்மைப் பலசாலிகளாகக் காட்டி, ஏனையோர் தம்மை நம்பியே வாழ வேண்டும் என்ற பிரக்ஞையை ஏற்படுத்தல்
பிற்பட்ட காலங்களில் உருவெடுத்த சியாக்கள், கவாரிஜ்கள், போராக்கள், காதியானிகள், அத்வைதிகள், போன்ற இஸ்லாத்தின் அகீதா-அடிப்படைக் கொள்கையிலிருந்தும் பிளவு பட்ட சிந்தனைகளின் உருவாக்கத்திற்கும் இச்செயற்பாடுகளே காரணமாயிருந்தன.
மேற்கின் சித்தாந்தங்களை விதைத்தல்
மேற்கின் சிந்தனைப் படையெடுப்பில் முதல் கட்டமாக அவர்கள் முஸ்லிம்களிடத்தில் இஸ்லாம் குறித்து சிந்தனைச் சிக்கல்களையும் தப்பபிப்பிராயங்களையும் ஏற்படுத்தி அவர்களின் நவீன அறிஞர்களின் கோட்பாடுளையும் சிந்தனைகளையும் அலங்காரமாக முன்வைக்கின்றனர். இதனால் ஒரு முஸ்லிம் மூளைச் சலவை செய்யப்படுகின்றான். அதிக சம்பளங்களை வழங்கி முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதும், உயர் படிப்புக்களுக்காக அதிக வாய்ப்புக்களை முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கி அங்கு அவர்களின் சிந்தனை மாற்றத்தை உண்டு பண்ணுவதும் இதன் படிக்கட்களாகும்.
இதனைக் கீழைத்தேய ஆய்வுகள் (Orientalism) என்ற பெயரில் மேற்கு லாவகமாக செய்து வருகின்றது. அத்தோடு  இத்துறையில்  உயர்படிப்பை முடித்தவர்களுக்கு உயர் பதவிகளும் தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றது. இந்தக் கீழைத்தேய வாதம் இஸ்லாத்தின் வரலாற்றைத் திரிபு படுத்துவதோடு அதன் அடிப்படைக் கொள்கைகளிலும் நோக்கங்களிலும் இலட்சியங்களிலும் களங்கத்தை ஏற்படுத்தி அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வழிவகைகளையும் செய்கின்றது.
அதேபோன்று பெண்ணிலைவாதத்தை முஸ்லிம் சமூகத்தில் விதைப்பதற்கான செயற்பாடுகளை இன்றைய தொலைக்காட்சித் தொடர் நாடகங்களினூடாக புரிந்து கொள்ளலாம். இந்தியத் தயாரிப்புகளை உள்வாங்கிய இலங்கையும் இதல் மும்முரமாக கவனத்திற்கொள்ளத் தக்கது. முழுக்க முழுக்க பெண்களைக் கதாநாயகிகளாகவும் வில்லர்களாகவும் அவ்வாறே குடும்பத்தையும் தொழில் நிறுவனங்களையும் வழிநடத்துபவர்களாகவும் கணவன்மாரை அடக்கி ஆள்பர்களாகவும் கொலைகளைத் திட்டமிடுபவர்களாகவும் இறுதியில் வாழ்க்கையின் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுபவர்களாகவும் பெண்களின் பாத்திரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இது எமது குடும்பப் பெண்களின் மீது பெண்ணிலைவாதத்தின்பால் தூண்டுதலளிக்கும் விதம் என்பதை அனேகம்பேர் அறியாமல் இருக்கின்றனர். இதனால் தஸ்லீமா நஸ்ரின்கள் எமது வீடுகளிலிருந்தும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பாவில்  16ம்  17ம்  நூற்றாண்டுகளின் பின் கிறிஸ்தவத் திருச்சபைக்கு எதிராகத் தோற்றம் பெற்ற சடவாதம் (Materialisim)>மதச்சார்பின்மை (Secularism)> உலோகாயுதவாதம், நாத்திகம் போன்ற படையெடுப்புக்களை முஸ்லிம் சமூகத்தில் மேற்கொண்டு அவற்றைச் சரிகண்டு அவற்றின்படி வாழும் ஒரு சிந்தனையை திணித்து வருகின்றனர். இவற்றின் வலையில் தமது சிந்தனைகளைச் சிக்கவைத்து மாட்டிக்கொண்ட எத்தனையோ பெயரளவிலான முஸ்லிம்களைக் காணலாம். அவர்களுல்அல் அய்யாம்என்ற நாவலின் ஆசிரியர் தாஹா ஹுஸைன், சாத்தானிய வசனங்கள் என்ற நாவலின் ஆசிரியர் ஸல்மான் ருஷ்தி போன்றோரை உதாரணமாகக் கூறலாம்.
அவ்வாறே சிக்மன்ட் பிரைடின் பாலியல் கோட்பாட்டைச் சரிகண்டு கட்டற்ற ஆண்,பெண் தொடர்பைத் தூண்டுவதும், பாலியல் உணர்ச்சிகளைப் பெருக்கெடுக்கச் செய்யும் உணர்வுகளை முஸ்லிம் நாடுகளுக்கு சந்தைப் படுத்துவதும் தொலைக்காட்சி இணைய வாயிலாக மேற்குலகின் ஆபாசக் குப்பைகளை அந்நாடுகளில் குவிப்பதும் போதைப் பொருட்களைக் கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்வதும், சுகபோக வாழ்வை வாழ வழி காட்டுவதும், முஸ்லிம்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளாக உள்ளன.
அதேபோன்று எதனையும் அறிவியலின் துணைகொண்டு நோக்கவும் ஏற்கவும் கூறும் நவீன தத்துவத்தின் தந்தை என மேற்குலகம் வர்ணிக்கும் பேர்டன் ரஸலின் இக்கோட்பாடும் முஸ்லிம் சமூகத்தின்பால் நகர்த்தப்பட்டு வருகின்றது. “புலனுக்கு அப்பாற்பட்டதை விஞ்ஞானம் நிரூபித்தாலே நம்பவேண்டும்என்ற இக்கோட்பாடு இஸ்லாத்தில் நம்ப வேண்டிய பல்வேறு அடிப்படைக்கோட்பாடுகளை மறுக்கிறது. ஏனெனில் விஞ்ஞானம் இன்னும் முழுமை பெறாத நிலையில் அது நிரூபிக்க வேண்டியவை பல. அவற்றைக் கூட சிலபொழுது இறைவழிகாட்டலின்றி விஞ்ஞானத்தினால் அடைந்துகொள்ள முடியாது. விஞ்ஞானத்தைக் கடவுளாகக்கொண்ட பலர் இந்த முடிவின்பால் திரும்பியுள்ளார்கள்.
முஸ்லிம்களின் சொத்துக்களளை அபகரிப்பதற்கு அவர்கள் தொடுத்த அடுத்த கட்ட நடவடிக்கைதான் வட்டி. பல்வேறுபட்ட பெயர்களில் வட்டியை அறிமுகஞ்செய்து அதற்கு மனிதனை அடிமையாக்கி அதனைத்திருப்பிச் செலுத்த முடியாதபோது அவனை முழுமையாக உறுவி எடுக்கும் மனிதாபிமானமற்ற செயலை இந்த வட்டியின் மூலம் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆரம்பத்தில் யூதர்கள் பலஸ்தீனத்தில் படிப்படியாக குடியேற ஆரம்பித்ததும் அம்முஸ்லிம்களின் சூழ்நிலவரங்களை அறிந்து வட்டிக்கு அடிமையாக்கி அவர்களது சொத்துக்களை சூறையாடியதை இதற்கு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். முதாலாம் உலகப்போரின் பின்பு முஸ்லிம்கள் மத்தியில் பிரிவிணையை உண்டுபன்னி அவர்கள் மத்தியில் இவ்வாறான கோட்பாடுகளின் அடிப்படையில் வாழும் சிந்தனைப் பாங்கை உண்டுபன்னியது மேற்குலகம்.
தேசிய வாதத்தைத் தூண்டுதல்
முஸ்லிம்களைக்  கூறுபோடுவதற்கு மேற்குலகம் பயன்படுத்திய இன்னுமொரு கூறிய ஆயுதம்தான் தேசியவாதமாகும்  (Nationalisim). ஐரோப்பிய காலனித்துவ சிந்தனைகளால் முஸ்லிம்களையும் முஸ்லிம் நாடுகளையும் துண்டாக்கும் நோக்கிலேயே இது முன்வைக்கப்பட்டது. உஸ்மானியக் கிலாபத்தின் வீழ்ச்சிக்கும் இதுவே முதற்காரணியாய் அமைந்தது. தவ்னிமா என்ற யூதக்கோத்திரத்தில் பிறந்த கமால் அதாதுர்க் என்ற இவனே தேசியவாதத்தின் தந்தையாவான். தேசிய வாதத்தின் வேர் முஸ்லிம்களிடம் ஆழமாக ஊடுறுவிய போது பல தேசியவாதங்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் அரபு தேசியவாதம், துருக்கியத் தேசியவாதம், சிரியத் தேசியவாதம், குர்திஷ் தேசியவாதம் என்பன குறிப்பிடத்தக்கவை. இக்கொடிய நோய் இன்று பிரதேசவாதமாக, கட்சிவாதமாக மாறி எம்மத்தியிலும் புறையோடியிருப்பதைக் காணக்கூயதாயுள்ளது.
முஸ்லிம்களிடத்தில் வெளிப்படையாக தேசிய வாதம் என்ற பெயரில் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தாலும் இஸ்லாம் என்ற வகையில் முஸ்லிம்களைக் கூறு போட முடியவில்லை.காரணம் இஸ்லாம் அதன் அங்கத்தவர்களை அப்படித்தான் வைத்திருக்கின்றது. முஸ்லிம்கள் எதிலும் தமது தனித்துவத்ததைப் பிரதிபலிக்கின்றனர். உலகலாவிய ரீதியில் அனைத்து முஸ்லிம்களும் அகீதாவில் ஒன்றினைந்துள்ளனர். பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் என்பன அகீதாவின் ஊற்றாக விளங்குகின்றன.
அஜமியைவிட அரபி சிறந்தவனல்லன், அவ்வாறே அரபியைவிட அஜமி சிறந்தவனுமல்லன், கருப்பனை விட வெள்ளையன் சிறந்தவனுமல்லன், வெள்ளையனைவிடக் கருப்பன் சிறந்தவனுமல்லன், அவர்களது தக்வாவைப் பொருத்தே தவிரஎன்ற நபியவர்களின் பொன்மொழிக்கிணங்க நிற,தர,இன பேதமின்றி ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமிற்கு சகோதரனாகக் கொள்ளப்படுகிறான். உலகளவிலிருந்தும் சாரைசாரையாக ஹஜ் கிரியையை நிறைவேற்ற வந்துசேரும் மக்கள்தொகை இதனைப் பரைசாட்டுகிறது.இந்தத்தனித்துவம்தான் மேற்குலகைப் பீதியடையச் செய்கிறது என்று ரஷ்யாவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியை பாத்திமா அப்துல் ரஷீத் கூறுகிறார். உலகளாவிய அனைத்துப் பிரச்சினைகளிற்கும் இஸ்லாம் ஒன்றே தீர்வாக இருப்பது மேற்கின் ஊழியர்களுக்கும், கலாசாரத்தைக் கட்டியெழுப்புபவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாத்தின்பால் மக்கள் கவர்தலைத் தடுத்தல்
பக்கச் சார்பின்றி நடுநிலையாக இஸ்லாத்தை ஆராயும் மேற்கின் நூற்றுக்குமதிகமானோர் இன்று இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு வருகின்றனர். அவ்வாறே செப்டம்பர் 11 தாக்குதிலின் பின்னர் அமெரிக்காவில் இஸ்லாத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேநிலைதான் டென்மார்க்கிலும். நபியவர்களை ஏளனம் செய்வதாக நினைத்துக்கொண்டு அவர்கள் செய்த செயலால் அங்கும் இஸ்லாத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே இதுபொறுக்க முடியாமல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சர்வதேச ரீதியில் கொச்சைப்படுத்தும் செயல்களை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்குப் பல்லூடகங்களையும் பயன்படுத்தி ஆங்காங்கே நடந்தேறும் சில சம்பங்களைக் குறிப்பிடலாம். சர்வதேச ரீதியில் இஸ்லாத்தை ஓர் அடிப்படைவாதமாகவும், தீவிரவாதமாகவும், பெண்ணுரிமையை மறுக்கும் மதமாகவும், யதார்த்தத்திற்குப் புறம்பானதாகவும் காட்டி முஸ்லிம்களைச் சமாதானத்தைச் சீர்குலைப்பவர்களாகவும் காட்டி வருகின்றனர்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
நன்றி : ஆலிஃப் அலி

இதையும் படியுங்கள்



                                                    மேற்க்குலகின் யுத்தம்-பகுதி 2

1 கருத்துகள்:

Aalif Ali சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரரே!

எனது ஆக்கத்தை எனது பெயருடன் நன்றி கூறி உங்கள் தளத்தில் இட்டுள்ளமைக்கு மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது பெயருடன் எனது தளத்துக்கான லின்க் ஐயும் கொடுத்திருந்தால் வாசகர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
எனது இந்த ஆக்கத்தை எனது தளத்திலிருந்தும் வாசிக்க முடியும். http://aliaalifali.blogspot.com/2011/07/blog-post_10.html

இவன் என்றும் அன்புடன் ஆலிப் அலி (இஸ்லாஹி)

கருத்துரையிடுக