அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

பற்பசை(thooth paste)...! அபாயம்...!!

அன்றாடம் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் ப்ளோரைடு இருப்பதாக விளம்பரங்கள் வரிசை கட்டுது. அதுவும் தெரியும். ஆனால், தெரியாதது....
புகையிலையில் புதைந்து கிடக்கும் நிக்கோட்டின் என்கிற கொடிய ரசாயனத்தை டூத் பேஸ்ட் டூத் பவுடர்களில் சேர்க்கிறார்கள் என்பது. புதுதில்லியை சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாசூட்டிகல்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம் இதனை உறுதி செய்திருக்கிறது. இதில் அதிர்ச்சியான விஷயம் நாட்டில் பிரபலமான பத்தில் ஆறு நிறுவனத் தயாரிப்புகளில் இந்த ரசாயனம் சேர்க்கப்படுவதாக வரும் தகவல்களால் மக்களிடையே பீதி, பயம்.

சிகரெட் தயாரிப்புக்கு அடிப்படை புகையிலை புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்துக்கு தொடர்ந்து அடிமையாக முழுமுதற் காரணமான நிக்கோட்டின் ஒரு கொடிய விஷம். அதனால் உதடு, வாய், நுரையீரலில் கேன்சர் ஏற்படுவது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கு. பொதுவாக பற்களில் வரும் பாதிப்புகளை தடுக்க டூத் பேஸ்ட் பவுடர்களில் அவ்வப்போது புதிய ரசாயனங்கள் சேர்க்கப்படுவது உண்டு. அதனடிப்படையில் ப்ளோரைடு இருக்கும் டூத் பேஸ்ட், பவுடரை தொடர்ந்து பயன்படுத்தியபோது பல்லின் மேல்பூச்சு (எனாமல்) கரைந்து, பற்களில் கூச்சம் வருவதாக புகார்கள் வந்தன. அதானல் பேஸ்ட், பவுடர்களில் ப்ளோரைடின் அளவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அந்த வரிசையில் புதிதாக நிக்கோட்டின் சேர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.

இது குறித்து பிரபல டென்டிஸ்ட் ஒருவரிடம் பேசினோம். நிக்கோட்டின் மணமில்லாத போதைதரும் ரசாயன பொருள், நிறம் கறுப்பு, ஒருவர் பிரெஷ் பண்ணும்போது பேஸ்ட், பவுடரில் இருக்கும் நிக்கோட்டின் உதடு, வாய், பற்களில் படியும். விழுங்கும்போது குடலுக்குள் போய்விடும் ஈறுகளில் ரத்தம், பற்குழி சொத்தை என்பதையெல்லாம் ஒப்பிடும் போது நிக்கோட்டின் ஏற்படுத்தும் பாதிப்பின் வீரியம் கொடூரமானது என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார். சற்றே திகில் ரகமான இந்த ரசாயனம் அல்கலாய்ட் வகையை சேர்ந்தது. தேயிலை, காபியில் அதிகமிருக்கும். இதனை டூத் பேஸ்ட்டில் பயன்படுத்துவதாக சொல்வது தான் அதிர்ச்சி. காரணம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க முடியாத பொருள் பேஸ்ட், பவுடர், ஒரு முறை முறை நிக்கோட்டின் சுவையை நாக்கு உணர்ந்து கொண்டால் தொடர்ந்து அதற்கு அடிமையாகும் ஆபத்து இருக்கு. உதாரணமாக சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் இருக்க நிக்கோட்டின் தான் காரணம் என்கிறார்கள். இது உண்மைதான் நிக்கோட்டின் தொடர்ந்து உடலுக்குள் போனால் ரத்த அழுத்தம் முதல் நரம்பு மண்டலம் வரை பாதிக்கும் ஆபத்து உண்டு என எச்சரிக்கிறார் பிரபல டயட்டீஷியன் கௌசல்யா.

டூத் பேஸ்ட், பவுடர்களில் நிக்கோட்டின் சேர்ப்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆய்வக சோதனைகள் அதனை உறுதி செய்த பின்வரும் நிறுவனங்கள் தவிர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகிறது.ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே நிக்கோட்டினை பயன்படுத்துவதாக சொல்லி நிறுவனங்கள் தப்பிக்க பார்ப்பது தான் வேடிக்கை.

இது குறித்து கான்சர்ட் நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சந்தான ராஜன். பொதுவாக ரசாயன சேர்மங்களை மக்களின் அன்றாட உணவுப்பொருட்களில் சேர்க்க கூடாது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவு என்று சொல்லி நிறுவனங்கள் தப்பித்துவிடும். ஆனால் டூத் பேஸ், பவுடர் குழந்தைகளும் பயன்படுத்தும் பொருள் அப்படியிருக்க அதில் நிக்கோட்டின் சேர்ப்பது எதற்காக என்பது புரியவில்லை. போட்டியை சமாளிக்க இப்படி செய்தால் அது தவறுதான் என்கிறார்
நன்றி - குமுதம்

நன்றி : செந்தில்வயல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக