அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 23 மே, 2013

பிளாஸ்டிக் பாட்டில்

நீங்களும்  குடிநீர் குப்பி (mineral water bottle ) பயன் படுத்துபவராகத்தான் இருக்க வேண்டும்! இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடைகளில் 
வாங்கிப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர்ப் பாட்டில்களில் ஒட்டியுள்ள லேபிளில் ''பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் " (Crush the bottle after use) என்று எழுதியிருக்கும் வாசகத்தைப் பார்த்துக்கூட இருக்க மாட்டோம்.அவ்வளவு அஜாக்கிரதை! அப்புறம் எங்கே படித்திருக்க முடியும்.அவ்வாறு  படித்ததைச் செயல்படுத்தி இருக்கமுடியும். பிரிட்ஜ்ஜில் வைக்க பலவண்ணங்களில் அழகாக பலவகை வடிவங்களில்  பாட்டில்களை வாங்கி சேமித்து வைத்திருப்போம்.ஆனால் அது பற்றிய எச்சரிக்கை விழிப்புணர்வு இருக்க வாய்ப்பில்லை. இதோ படியுங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.


இன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கு கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தும் வழக்கம்தான் நாகரிகமாக கருதப்பட்டு அதனை பின்பற்றியும் வருகிறோம்.பாட்டில் நாகரிகத்தைப் பின்பற்றும் எவரும் அந்தப் பாட்டிலில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் படிப்பதும் இல்லை. படித்தாலும் பின்பற்றுவதும் இல்லை. 
இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை  சேகரித்து வைத்து சிறுவர் முதல் பெரியவர் வரை பள்ளிக்கும, அலுவலகத்துக்கும் குடிநீர் கொண்டு செல்லப் பயன்படுத்துகின்றோம். ஏன் பிரிட்ஜில் குளிர் நீர் சேமிப்பதற்கும் இவற்றைப் பயன் படுத்துகின்றோம். இன்னும் கூறப்போனால்  வீடுகள் உட்பட - விசேசங்கள் மற்றும் திருவிழாக்காலங்களில் பல இடங்களில்   தண்ணீர் அருந்த பிளாஸ்டிக் டம்ளர்களையே பயன்படுத்துகிறோம்.எல்லா பிளாஸ்டிக் (நெகிழியினால்) ஆனபாட்டில்களையும் பெட் (pet ) என்பர். 
 
 
பெட்(pet ) என்பது பாலி எத்திலின் டேரப்தலேட் (Polyethylene terephthalate) என்பதின் பெயர் சுருக்கம் ஆகும். இந்த PET என்னும் ரசாயனப் பொருளில் டை- எத்தில் ஹைட்ரக்சின் அமைன் (diethyl hydraxylamine or DEHA) என்ற ரசாயனப் பொருளும் கலந்துள்ளது. இந்த டெகாவில் (DEHA ) தான் ஒளிந்து இருக்கிறது புற்று நோய்க்கு வித்திடும் பேராபத்து .ஆமாங்க பாட்டில்களை  மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பாட்டிலின் மூலப்பொருளான DEHA பிரிந்து தண்ணீரில் கலக்கிறது. அதிலும் வெந்நீரை ஊற்றி வைக்கும் போது இந்த ரசாயனப்பொருள் அதி தீவிரமாகப் பிரிந்து தண்ணீரீல் கலந்து நமது  உடலினுள் சென்றடைகிறது. இந்தப் பாட்டில்களை ஒருமுறைக்கு மேல் பயன் படுத்துவது ஆபத்தை விளைவிப்பதாகும்.உதாரணமாக நம்ம ஏரியா கால்நடை மேய்ப்பவர்கள், கூலித்தொழிலாளர்கள், வாகனங்களில், பேருந்துகளில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அதிக அளவு இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அதிக நாட்கள் பயன்படுத்துகின்றனர்.

நாம் கவனிக்க வேண்டியது:

நாம் கடைகளில் தண்ணீர்ப்பாட்டில்கள் உட்பட பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கும் போது அந்தப்பாட்டில்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கோணமும் அதனுள் ஒரு எண்ணும் பொறிக்கப் பட்டிருக்கும் அடையாள சின்னத்தை கண்டிப்பாக  கவனிக்க வேண்டும். இந்த முக்கோணத்தினுள் பொறிக்கப்பட்டுள்ள எண்  ஐந்துக்கு மேல் இருந்தால் மட்டுமே பாட்டில்கள் தொடர்ந்து பயன் படுத்துவதற்குப் பாதுகாப்பானது. எண் ஐந்திற்கு குறைவாக
இருந்தால்  கண்டிப்பாக ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய (use and throw) பாட்டில்களில்  எண் ஐந்திற்குக் குறைவாகத்தான் இருக்கும். அதிலும் பெரும்பாலான எண் ஒன்று தான் இருக்கும்.
இந்தப்பாட்டில்களில் அடைக்கப்படும் தண்ணீருடன் பிளாஸ்டிக் ரசாயனம் புற்றுநோயை உருவாக்கக்கூடிய  டை- எத்தில் ஹைட்ரக்சின் அமைன் (diethyl hydraxylamine or DEHA) என்ற ரசாயனப்பொருள், தண்ணீரில் எளிதாக கலந்துவிடும். பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆபத்து அதில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீருக்கு இல்லை! அந்தப்பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நமக்குத்தான். எனவே அலட்சியம் வேண்டாம்! எச்சரிக்கையா இருங்கள்
நன்றி:mykolappalur.blogspot.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக