அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 16 மே, 2013

சவுதியில் 2 மாதங்களுக்கு முன் இறந்த கடலூர் வாலிபர் உடல் சென்னை வந்தது

ஆலந்தூர், மே.15-

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை சேர்ந்தவர் கந்தசாமி செல்வராஜ் (34). இவருக்கு குருலட்சுமி என்ற மனைவியும், செல்வபாரத், செல்வநாயகி, செல்வி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகருக்கு கட்டிட தொழிலாளியாக சென்றார்.

இந்நிலையில் அங்கு கடந்த மார்ச் 17-ந்தேதி மாரடைப்பால் இறந்தார். எனவே அவரது உடலை இந்தியா கொண்டுவர சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் குடும்பத்தினர் முறையிட்டனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ரியாத்தில் உள்ள வளைகுடா வெளிநாட்டு வாழ் இந்தியர் தமிழர் நல அமைப்பிடம் முறையிட்டனர். இவர்கள் அதற்குரிய நடவடிக்கை எடுத்து உடலை மீட்க சவுதி அரேபியாவில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

இந்த விமானம் நேற்று(15.05.13)  காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் இருந்து இறக்கப்பட்ட உடல் உறவினர் சேரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேத்தியாதோப்பு எடுத்து சென்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக