அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 6 டிசம்பர், 2011

தபால் நிலையங்களில் வி.ஐ.டி. பிடெக் நுழைவுத்தேர்வு விண்ணப்பம் விற்பனை: வேந்தர் விசுவநாதன் தொடங்கிவைத்தார்

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது இந்நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பங்கள் விற்பனையை வேலூர் தலைமை தபால் நிலையத்தில் வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன். ஜிவி. சம்பத், சேகர் விசுவநாதன், வேலூர் கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் சந்தானராமன் தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அலுவலர் ஏ.என். பிரகாசம், உதவி கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார், வி.ஐ.டி. சேர்க்கை அலுவலர் முனைவர் ஜேம்ஸ் ஜெபசீலன் சாமுவேல் ஆகியோர் பங்கேற்றனர். 
வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பி.டெக். பயோ டெக்னாலஜி பயோ இண்பர்மேடிக்ஸ், பயோ மெடிக்கல். சிவில் மெக்கானிக்கல், கணிணி அறிவியல் எலக்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன். இன்பர்மேஷன் டெக்னாலஜி, உள்ளிட்ட 13 பொறியியல் பட்டப் படிப்புகளில் (2012-13)ம் கல்வியாண்டில் சேருவதற்கும்.
வி.ஐ.டி சென்னை வளாகத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 5 பி.டெக் பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.   நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள 248 தபால் நலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் ரூ. 950 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அல்லது ரூ. 950க்கு வி.ஐ.டி. யுனிவர்சிட்டி - வேலூர் என்ற பெயரில் கேட்பு வரைவோலை டிமாண்டு டிராப்ட் மூலம் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பெறலாம்.
வி.ஐ.டி சென்னை வளாகத்திலும் சென்னை அண்ணாநகரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் செய்ய அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி கடைசி நாளாகும்.

நன்றி : மாலைமலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக