அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 8 டிசம்பர், 2011

இ.எஸ்.ஐ.சி.,யில் மருத்துவ அதிகாரி பணியிடங்கள்

இ.எஸ்.ஐ.சி., எனப்படும் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் அரசுத்துறை சார்ந்த காப்பீடு மருத்துவ நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் புதுடில்லி மற்றும் நொய்டா, குர்கான் மற்றும் மனேசர், கேரளா ஆகிய மையங்களில் 227 மருத்துவ அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவைகள்:
இ.எஸ்.ஐ.சி., நிறுவனத்தின் மருத்துவ அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12.12.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மருத்துவக் கவுன்சிலின் சட்ட விதிகளுக்குட்பட்ட மருத்துவப் பட்டப்படிப்பை இவர்கள் முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

இதர விபரங்கள்:
எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனின் மருத்துவ அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.225/க்கான டி.டி.,யை E.S.I., Fund Account No.1 என்ற பெயரில் ஏதாவது ஒரு ஷெட்யூல்டு வங்கியில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும்.

இந்த டி.டி., எடுக்கும் போது கம்ப்யூட்டரில் இருந்து எடுக்கப்பட்ட பிரின்ட் அவுட்டுடன் கொடுக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் கல்வி மற்றும் வயதுக்கான ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கவரின் மீது தவறாமல் Application for the Post of Insurance Medical Officer Grade & II in ESI Hospitals in_____ என்று குறிப்பிட வேண்டும். முழுமையான இணைப்புகளுடன் கூடிய விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 12/12/2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி:
Post Bag No.29,
Okhla Industrial Estate Post Office,
New Delhi - 110 020.

முழுமையான தகவல்களைப் பெற www.esic.nic.in/recruitment.htm இணையதளத்தைப் பார்க்கவும்.

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 30.11.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 12.12.2011

நன்றி : தாளம்நியூஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக