அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 12 டிசம்பர், 2011

பாக்கெட் டி.வி விரைவில் அறிமுகம்

சுருட்டி எடுத்து செல்லும் வகையில் பாக்கெட் டி.வி. தயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அறிமுகம் ஆகிறது. தற்போது அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட டி.வி.க்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக 3டி முப்பரிமாண டி.வி.க்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றை ஒரே இடத்தில் வைத்து தான் பார்க்க முடியும். ஆனால் சுருட்டி மடக்கி பாக்கெட்டில் எடுத்து செல்லும் மிக அதிநவீன டி.வி.க்களை இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளனர்.
மனித ரோமத்தை விட 1 லட்சம் மடங்கு மெல்லிய சின்னஞ் சிறிய ஒளிப்பான் களை உருவாக்கியுள்ளனர். அதற்கு “குவாண்டம் டாட்ஸ்” என பெயரிட்டுள்ளனர். அதன் மூலம் மிக மெல்லிய டி.வி. திரைகளை உருவாக்க முடியும். அவற்றை பிளக்சிபில் பிளாஸ்டின் சீட்டில் ஒட்டி அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும்.
அவை அடுத்த ஆண்டு இறுதியில் கடைகளில் விற்பனைக்கு வரும். ஆசிய எலக்ட்ரானிக் கம்பெனிகளின் உதவியுடன் இவற்றை தயாரித்ததாக மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானி மைக்கேல் டெல்டான் தெரிவித்துள்ளார்.
நன்றி : மாலை மலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக