அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 11 மே, 2011

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க K9 Web Protection


இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில்

பல ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச

இணையதளங்கள் நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து

நம் குழந்தைகளை மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில்

புகுந்து விளையாடுகிறான் ன்று சொல்லும் பெற்றோர்கள் முதலில்

புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை

மட்டும் வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல,
 அவர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான்

இணையதளம். இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும்

அனைத்தையும் நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில

உண்மை புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது

பாடம் அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும்

முடிவில் சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான்

நிதர்சனமான உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல

நம் குழந்தைகளையும்  பாதுகாக்க வேண்டிய நிலையில் தான்

நாம் இப்போது இருக்கிறோம்.K9 மென்பொருள் துணையுடன்  எளிதாக

நாமாகவே ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை

செய்யலாம் இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றி

காண்போம்.கண்டிப்பாக இந்தப் பதிவு நம் அனைவருக்கும்

பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.


முதலில் http://www1.k9webprotection.com தளத்திற்கு செல்லுங்கள். அதில் உள்ள

Free Download என்ற பட்டனை அழுத்துங்கள்.கீழே படத்தில் உள்ள பக்கம்

திறக்கும்.


அதில் பெயர் சரியான இமெயில் முகவரியிவும். பிறகு Request Licence button ஐ

அழுத்தவும். பிறகு உங்கள் இமெயிலுக்கு Download link மற்றும் Licence code

அனுப்புவார்கள்.  Download link மூலம் மென்பொருளை பதிவிறக்கம் செய்து

மென்பொருளை கணினியில் நிறுவவும். நிறுவும் பொழுது Licence code ஐ

நிரப்பி உங்கள் ஞாபகமுள்ள பாஸ்வோர்டையும் பூர்த்தி செய்யவும். பிற்கு

கணினியில் Start-Programmes-Blue coat k9 web protection-Blue coat k9 web protection admin ஐ

அழுத்தவும். பிறகு உங்கள் பிரவுசர் திறந்து கீழுள்ள பக்கம் திறக்கும்.


அதில் Setup பகுதியை அழுத்தவும். உங்கள் பாஸ்வோர்டை இட்டால் setup

பகுதி திறக்கும்.  அதில் உங்களுக்கு தேவையான மதிப்புகளை

தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அல்லதுபடத்தில் உள்ள custom மதிப்பை தேர்ந்தெடுத்து அதில் Open Image/Media Search

பகுதியை unselect செய்தால் ஆபாச தளங்கள் முடக்கப்பட்டு பிற தளங்களில்

உள்ள வீடியோ,இமேஜ் திறக்கும்படி செய்து கொள்ளலாம்.

நன்றி : ஆயங்குடிTNTJ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக