அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 21 ஜூன், 2011

சிறுநீர், மலம் கழிப்பதின் ஒழுங்குகள்.

மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை. மற்றொருவர் கோள் சொல்லி­த்திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி­) , நூல் : புகாரி (218)

கிப்லாவை முன்னோக்கி உட்காருதல் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். '' உங்களில் ஒருவர் மலம், சிறுநீர் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கக் கூடாது . தமது முதுகுப் புறத்தால் பின்னோக்கவும் கூடாது, .

அறிவிப்பவர் : அபு அய்யூப் (ரலி­) , நூல் : புகாரி (144)

கழிப்பறையாகவோ அல்லது சுற்றிலும் மறைப்புள்ள இடமாகவோ இருந்தால் கிப்லாவை முன்னோக்கி உட்காருவதில் தவறில்லை

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி­) அறிவிக்கிறார்கள். நீர் (மலம் கழிக்கும் போது) உமது தேவைக்காக உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தயோ முன்னோக்கி விடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒரு நாள் எங்கள் வீட்டுக் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்.

நூல் : புகாரி (145)
கழிப்பிடத்திற்கு செல்லும் போது ஓதவேண்டிய துஆ.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது
'' அல்லாஹ‎ம்ம இன்னீ அவூது பிக மினல் குபுஸி வல் கபாயிஸி '' என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ர­லி) , நூல் :   புகாரி (142)

பொருள் : இறைவா அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள், ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

மலம், சிறுநீர் கழிக்கும் போது பேசுவதோ , ஸலாத்திற்குப் பதில் கூறுவதோ கூடாது.

நபி (ஸல் ) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபியவர்கள் அவருக்கு பதிலளிக்கவில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ர­லி) , நூல் : முஸ்லி­ம்(555)

கழிப்பறையி­ருந்து வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையி­ருந்து வெளியேறும் போது
'' குஃப்ரானக'' என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல் : திர்மிதி (7)

சிறுநீர் கழிக்கும் போது பேணவேண்டியவை

உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்.

'' நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக உங்களுக்கு எவர் சொன்னாலும் அதனை நீங்கள் நம்பாதீர்கள்.அவர்கள் உட்கார்ந்தவர்களாகவே தவிர சிறுநீர் கழித்ததில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி­)நூல் : திர்மிதி (12)

அசுத்தமாக உள்ள இடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்..

ஹுதைஃபா (ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள்.

நூல் : புகாரி (224)

குழந்தைகளின் சிறுநீர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''பெண் குழந்தையின் சிறுநீர் ( ஆடையில் பட்டால் அது) கழுவப்படவேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் நீர் தெளிக்கப்பட்டால் (போதும்).

அறிவிப்பவர் : அபூ ஸம்ஹ் (ரலி­) , நூல் : நஸயீ ( 302)

மலம் சிறுநீர் கழிக்கும் போது செய்யக்கூடாதவை

தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''ஓடாமல் தேங்கிக் நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டு பின்னர் அதில் குளிக்க வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூ ஹ‎ரைரா (ர­லி), நூல் : புகாரி (239)

பொந்துகளுக்குள் சிறுநீர் கழிக்கக் கூடாது.

'' உங்களில் எவரும் பொந்துகளுக்குள் சிறுநீர் கழிக்க வேண்டாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் (ரலி­)

நூல் : நஸயீ ( 34)

மறைவுறுப்பை வலது கையால் தொடுவது கூடாது.

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ''மலம் ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்குவதையும் வலக்கரத்தால் தூய்மை செய்வதையும் மூன்று கற்களுக்கு குறைந்த அளவைக் கொண்டு நாங்கள் தூய்மை செய்வதையும், விட்டை, எலும்பு ஆகியவற்றால் சுத்தம் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடைசெய்தார்கள்.

நூல் : திர்மிதி (16)
 
நன்றி : சகோதரர் அப்துன் நாஸர் M.I.S.c  & http://rasminmisc.blogspot.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக