அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 13 ஜூன், 2011

அல்லாஹ் என்றால் யாருங்க? (பகுதி - 1)

அல்லான்னா யாருங்க! (சகோ. ஜெகதீஸ்வரன்)

பதில்

بسم الله الرحمن الرحيم

(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்

  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
  • சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமி உட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும், இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
  • பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம், மழைக்காலம், வெயில்காலம் ஆகியன ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
  • நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?

  • நிலப்பரப்பில் உள்ள ஈர்ப்பு சக்தியால் நாம் நடக்கிறோம், அமர்கிறோம், ஓடுகிறோம் இந்த ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன் யார் மனிதனா?
  • நிலத்தில் மனிதன் உழுகிறான் அவனுக்கு விதையை அறிமுகப்படுத்தியவன் யார் மனிதனா?
  • கடல் நீரை மழை நீராக்கி பருகுவதற்கும் நிலத்தை உழுவதற்கும் வானிலிருந்து கொட்டச் செய்பவன் யார் மனிதனா?
  • ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கு பாதையாக வானத்தை கொடுத்தவன் யார் மனிதனா?
  • குடும்ப உறவு கொள்ள மனிதர்களின் உடலில் விந்துத்துளிகளை செலுத்தியவன் யார் மனிதனா?
  • வயிற்றுப் பசியை தனிக்க மலம் சாப்பிடுவதில்லை மாறாக உணவு உட்கொள்கிறோம், தாகத்தை தனிக்க சிறுநீரை குடிப்பதில்லை மாறாக சுத்தமான நீரை பருகுகிறோம் மனிதனுக்கு இந்த பகுத்தறிவை கொடுத்தவன் யாரோ அவனே இறைவன்!
இறைவன் இல்லை என்று சொல்பவன் நாத்திகன் இவன் மாபெரும் பொய்யன் இவனுடைய கழுத்தில் கத்தியை வைத்தால் கடவுளே என்பான் காப்பாற்றப்பட்டவுடன் கடவுள் யார் என்பான்!

அல்லாஹ்வுக்கு பிறப்பு உள்ளதா?

ஒவ்வொரு மனிதனும் படைத்த இறைவனை தன்னுடைய பலவீனமான ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறான் படைத்த இறைவனை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதில்லை.

சிந்தித்துப்பாருங்கள்! உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் 3 மாத கருவாக இருந்தீர்கள் அந்த குறிப்பிட்ட 3 மாதங்களுக்கு முன்பு நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதை கூற முடியுமா?

ஒரு மனிதன் தன் தாயின் வயிற்றில் 3 மாத கருவாக இருப்பதற்கு முன் அற்பத்திலும் அற்பமான ஒரு ஆட்டின் புளுக்கையாக கூட இருந்திருக்கவில்லை அப்படிப்பட்ட மனிதனை இறைவன் கருவாக உருவாக்கி, அதனுள் உயிர் கொடுத்து, பெயர் கொடுத்து, பெற்றோரை கொடுத்து கல்வி அறிவைக் கொடுத்து உலகில் வாழவைத்து மனிதனாக்கி சிந்திக்க மூளையை கொடுத்தால் இவன் படைத்த இறைவனின் பிறப்பை பற்றி சிந்தித்து கேள்வி எழுப்புகிறான். இந்த மனிதன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருப்பதை காட்டிலும் நன்றிகெட்டவனாகத்தான் வாழ்ந்து மடிகிறான்!

இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 22:66)

அல்லாஹ்வுக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனரா?


ஒரு மனிதனுக்கு மனைவியும், பிள்ளைகளும் இருப்பது அவனுடைய வம்சத்தை பல்கிப் பெருகுவதற்காகவே தவிர வேறு எதற்கும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் ஒன்று சேருவதன் மூலமாக தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று வம்சம் அபிவிருத்தியாகும் அதே நேரம் குடும்பத்தில் மரணங்கள் சம்பவிக்கும் காரணம் மனிதன் மரணிக்க பிறந்தவன்! இதோ மனித இனமும் அவனது குடும்ப அபிவிருத்தி பற்றிய விழிப்புணர்வு படம்.

மனிதனுக்கு அவனுடைய குடும்பம் சோதனைக் களமாக இருக்கிறது அவன் தன் தாயை, தந்தையை, சகோதர உறவை, மனைவியை, மக்களை என்று அனைவரையும் முறையாக கவனிக்கிறானா? இவர்களுக்காக உழைக்கிறானா? திருடுகிறானா? அல்லது இவன் குடும்பத்தை மறந்து தவறான பாதையில் செல்கிறானா? என்பதுதான் அந்த சோதனை! இந்த சோதனைகளை கொடுப்பவன் இறைவன் எனவே இறைவனை எவனும் சோதிக்க இயலாது மேலும் அவனுக்கு குடும்பமும் கிடையாது!

அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மத்) நீர் கூறுவீராக!. அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை.(அல்குர்ஆன்- 112)

நன்றி : islamicparadise

தொடரும் இன்ஷா அல்லாஹ்........

0 கருத்துகள்:

கருத்துரையிடுக