அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 5 ஜூன், 2011

நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை: நெல்லை மாவட்ட காற்றாலைகளில மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் மின்வெட்டு குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலகிலேயே காற்றாலை அமைப்பதற்கு சிறந்த இடமாக கலிபோர்னியாவுக்கு அடுத்த நெல்லை, குமரி எல்லை பகுதியில் உள்ள முப்பந்தலைதான் சொல்வார்கள். தற்போது உலகளவில் காற்றாலை மூலம் மின்உற்பத்தியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் காற்றாலை மூலம் மின் உற்பத்தியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதில் 216 இடங்களில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ஆயிரத்து 242 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம் எனவும், தமிழ்நாட்டில் 41 இடங்கள் காற்றாலை அமைக்க சாதகமான இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தற்போது 17 இடங்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காற்றாலை மூலம் இந்திய மின்உற்பத்தியில் 3 சதவீதம் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரி நெல்லை மாவட்ட எல்லையில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. முப்பந்தல் ப குதியில் இருந்து மட்டும் சுமார் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் ஏறத்தாழ 45 சதவீதமாகும்.

கடந்த 10 நாட்களாக காற்றின் வேகம் சீராக அதிகரித்து வருகிறது. வினாடிக்கு 14 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் காற்றாலை அதிகபட்ச மின் உற்பத்தியை அளிக்கும். தற்போது இந்த பகுதியில் வினாடிக்கு 15 முதல் 20 மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு அமுலில் இருப்பதால் காற்றாலைகளில் மின்உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் உள்ளனர் என்பதுதான் வேதனையாக விஷயம். இந்த மின் உற்பத்தியை மின்வாரியம் பெற்று கொண்டால் மின்வெட்டை முழுமையாக தவிர்க்கலாம் என்பது காற்றாலை மின் உற்பத்தியாளர்களின் கருத்தாகும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக