அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 20 ஜூன், 2011

அல்லாஹ் என்றால் யாருங்க? (பகுதி - 2)

அல்லாஹ் ஒருவன், அவனுக்கு இணை துணை கிடையாது!

இஸ்லாம் போதிக்கும் கடவுள் கொள்கை உலகில் உள்ள மற்ற மதங்களின் இறைக் கொள்கைகளை விட சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம் இஸ்லாம் ஓரிரைக் கொள்கையை போதிக்கிறது மற்ற மதங்கள் அனைத்தும் பல கடவுள் கொள்கையை போதிக்கிறது!
ஒரு இறைவன் என்ற ஓரிரைக் கொள்கைதான் உண்மை என்பதற்கு கீழ்கண்ட காரணங்கள் தெளிவாக விளக்கும்

நீதி செலுத்த ஒரு இறைவன்தான் இருக்க வேண்டும்!

ஒருவனுக்கு அநீதி இழைக்கப்படும் போது அநீதி இழைக்கப் பட்டவனுக்கு உரிய நீதியை முறையாக செலுத்த வேண்டும் உதாரணமாக மூன்று கடவுள்கள் இருந்தால்

படைக்கும் கடவுள்இந்த மனிதனை நான் படைத்தேன் இவன் பாவியாகிவிட்டான் இவன் என்னை வழிபட்டான் எனவே படைத்த நானே இவனை மன்னிக்கிறேன் என்று கூறும்
கண்காணிக்கும் கடவுள்இந்த பாவியை நான் கண்காணித்து வந்தேன் என் கண்ணால் கண்ட நான் இவனை எவ்வாறு மன்னிக்க இயலும் என்று கூறும்
அழிக்கும் கடவுள்படைக்கும் கடவுள் மனிதனை படைத்துவிட்டது, கண்காணிக்கும் கடவுள் பாவியை கண்காணித்துவிட்டது எனவே அழிக்கும் கடவுளாகிய நான்தான் இவனை தண்டிப்பதா? மன்னிப்பதா என்று தீர்மானிக்கும் உரிமை படைத்தவன் என்று கூறும்


ஒன்றுக்கு மேமற்பட்ட அல்லது மூன்று கடவுள்களாகவோ இருந்தால் தங்களுக்குள் பிரச்சினையை தீர்க்க முடியாமல் வெவ்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டு தங்களுக்குள் உட்பூசல்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஆனால் ஓரிரைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாம் அல்லாஹ் ஒருவனை மட்டும் கடவுளாக முன் நிறுத்துகிறது அந்த ஒரு இறைவனாகிய அல்லாஹ் தான் நாடினால் தனக்கு இணை கற்பித்த பாவத்தை தவிர மற்ற பாவங்களை செய்த பாவியைக் கூட மன்னிப்பதாகவும் தான் நாடினால் தனக்கு இணை கற்பிக்காமல் தான் வகுத்த சட்டத்தை மீறிய நல்ல அடியானைக் கூட தண்டிப்பதாகவும் கூறுகிறது.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.’ (அல்குர்ஆன் 4:48)

ஒரு இறைவனாக இருந்தால் எதற்கும் அடிமையாக முடியாது!

பல கடவுள்கள் இருந்தால் அத்தனை கடவுள்களும் கருத்து வேறுபாடுகள் தோன்றும் இறுதியாக ஏதாவது ஒரு கருத்தின் பக்கம் தலைசாய்க்க ஒரு வஸ்துவிடம் அனைத்து கடவுள்களும் கை கட்டி நின்று கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இப்படிப்பட்ட நிலையில் அந்த ஒரு வஸ்து அனைத்து கடவுள்களுக்கும் அறிவுரை கூறி அவர்களை கட்டுப்படுத்தி விட்டால் அந்த வஸ்து கடவுளாகவும் அந்த வஸ்துவுக்கு முன் குழுமி நின்று கைகட்டி நிற்பவை அனைத்தும் அந்த வஸ்துவின் அடிமையாகத்தான் இருக்கும் எனவே கட்டுப்படும் கடவுள்கள் என்று எதுவும் கிடையாது.

அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன் அவன் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவன் தவிர தான் படைத்த வஸ்துக்களிடம் கட்டுப்பட வேண்டிய இழிவான சூழ்நிலை அவனுக்கு இல்லை எனவேதான் அல்லாஹ் உங்கள் இறைவனாக இருக்கிறான் இந்த இறைவனுக்கு நீங்கள் அடிமையாக இருக்க சந்தோஷப்பட வேண்டும்!

அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:111)


ஒரு இறைவனால் அனைத்தையும் நிர்வகிக்க இயலும்!உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான இரத்த அணுக்கள் காணப்படுகின்றன, நூற்றுக்கணக்கான உறுப்புகள் இயங்குகின்றன அத்தனை உறுப்புக்களையும், கோடானு கோடி இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அணுக்களையும் நிர்வகிப்பதற்கு உங்கள் உடம்பில் உங்கள் உயிரை அல்லாஹ் படைத்துள்ளான் நீங்கள் உங்களை அறியாமலேயே உங்கள் உடலை நிர்வகிக்கிறீர்கள் இப்படிப்பட்ட உங்களுக்கே இப்படியொரு ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கும் போது கடவுளாகிய அல்லாஹ்வுக்கு அண்டசராசரங்களையும் ஒருவனாக இருந்து நிர்வகிக்க ஆற்றல் இருக்காதா? என்ன!

உங்கள் உடம்பில் உங்களுடைய ஒரு உயிர் இருப்பதால்தான் உங்கள் உடம்பிற்கான கட்டளைகளை உங்களால் சீராக செலுத்த முடிகிறது அதுவே இரண்டு ஆதம்மாக்கள் உங்கள் உடம்பில் இருந்தால் கட்டளைகளில் முரண்பாடு ஏற்பட்டு மூளை பலவீன மடைந்துவிடும்! இதே போலத்தான் ஒரு இறைவன் (அதாவது அல்லாஹ்) இந்த அண்டசராசரங்களுக்குத் தேவையான கட்டளைகளை பிரப்பித்து நிர்வகித்து வருகிறான் மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் கட்டளைகள் ஒழுங்காக சென்று சேராது! அல்லாஹ் அவன் மிக்க அறிவாளியாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ளான் இதைப் பற்றி அருள்மறை குர்ஆன் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறது!

உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.(அல்குர்ஆன் 20:98)

உங்கள் இறைவன் அல்லாஹ் குற்றம் இல்லாதவன்!

பாவம் செய்வது மனித இயல்பு பாவமற்றவன் இறைவன் எனவேதான் கடவுள் என்று எண்ணி ஒரு வஸ்துவுக்கு கை, கால்கள் கொடுத்து நெற்றியில் கண்ணை பதித்து மனித ரூபத்தில் ஒரு சாரார் ரசித்தனர் இறுதியல் அந்த வணங்கப்படும் வஸ்துவை நோக்கி நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறி தங்கள் கடவுள் கூட பாவம் செய்யும் என்ற கண்ணோட்டத்தில் கண்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட இழிவு அல்லாஹ்வுக்கு கிடையாது அவன் குற்றம் குறையற்றவன்.

இரண்டு கடவுள்கள் இருந்தால்தானே நம்மை போன்று குற்றம் குறை கண்டுபிடித்து சண்டை போடவோ அல்லது பொய் சொல்லவோ முடியும் ஆனால் படைத்த இறைவன் ஒருவனாக இருக்கும்போது குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை அந்த ஓரிறைவன் எதை செய்தாலும் நிறையாகவே காணப்படும்!

உங்கள் இறைவன் அல்லாஹ் குறை இல்லாதவன்!

இரண்டு கடவுள்கள் இருந்தால்தான் இந்த கடவுளுக்கு இந்த குறை உள்ளது அந்த கடவுளுக்கு அந்த நிறை உள்ளது என்று கூறமுடியும் மாறாக ஒரே கடவுள் இருந்தால் அதனிடம் எந்த குறையும் தென்படாது அதனிடம் உள்ள அனைத்தும் நிறை வாகத்தான் இருக்கும்! எனவேதான் அல்லாஹ் குறையில்லா தவனாக இருக்கிறான் காரணம் அவன் தனித்தவனாக இணை துணையில்லாதவனாக இருப்பதே அவனுடைய சிறப்பு!

நன்றி : islamicparadise

தொடரும் இன்ஷா அல்லாஹ்........

0 கருத்துகள்:

கருத்துரையிடுக