அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 18 ஏப்ரல், 2011

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் - ஓர் ஆய்வு

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச் சுருங்குகிறது என்பதை கற்றுத்தருகிறான்.இவ்வாறு கூறுவதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

விண்வெளி பயணத்தில் எற்படும் உடல் குறைபாடுகள்
விண்வெளியை நோக்கி பயணம் செய்யும் போது அங்கு புவி ஈர்ப்பு சக்தி இருக்காது மேலும் இந்த புவி ஈர்ப்பு விசையானது பூஜ்ஜியமாக (0) ஆக காணப்படுகிறது.விண்வெளிப் பயணத்தின் போது புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக காணப்படுவதால் அதில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துக் கொள்ளுங்கள்!
  • இரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஒரே சீராக இருக்காது!
  • இரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்படுவதால் மன உளைச்சல் ஏற்படுகிறது
  • மன உளைச்சல் அதிகரிப்பதால் ஒரு விதமான பயம் உள்ளத்தை வாட்டுகிறது
  • இந்த பயத்தின் காரணமாக குழப்பமான சூழல் ஏற்பட்டு மன இறுக்கம், எரிச்சல் ஆகியன ஏற்பட்டுவிடுகிறது
  • ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தலைப்பகுதியை நோக்கி தள்ளப்படுகிறது இதனால் இடைவிடாது தலைவலி ஏற்படுகிறது
  • இரத்த ஓட்ட தொய்வின் காரணமாக உடலில் உள்ள எலும்புகளும் தசைகளும் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு முடங்கிவிடுகின்றன இதற்காக இந்த விண்வெளி வீரர்கள் தினமும் 2 மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். இவர்கள் இந்த உடற்பயிற்சியை தவிர்த்துவிட்டால் பூமியில் தரையிரங்கியவுடன் இவர்களுடைய எலும்புகள் ஒரேடியாக முடங்கி உடல் முழுவதும் எந்த அசைவும் இல்லாத ஒருவகை ஊணம் எற்படும் அபாயம் உள்ளது!
  • விண்வெளியில் பயணிக்கும் போது அங்கு ஈர்ப்பு சக்தியின்மையால் கடுமையான மலச்சிக்கலும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலும் ஏற்படுகிறது.

விண்வெளி பயணத்தில் எவ்வாறு தூக்கம் ஏற்படுகிறது
உறங்கும் போது கண்களை பாதுகாக்க வேண்டும்
பூமியில் வசிக்கும் போது இரவு பகல் என்று மாறி மாறி ஏற்படுவதால் இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு உறக்கம் ஏற்படுகிறது ஆனால் இதுபோன்ற இயற்கை உறக்கம் விண்வெளிப் பயணத்தின் போது கிடையாது.அங்கு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சூரிய உதயம் ஏற்பட்டு நாள் முழுவதும் பகலாகவே காணப்படுகிறது. மேலும் விண்வெளிப் பயணத்தின் போது சூரிய வெளிச்சம் நான்கு புறங்களிலிருந்தும் வெளிப்படுவதால் அந்த இடம் முழுவதும் எப்பொழுதுமே பிரகாசமாக காணப்படுகிறது எனவே இந்த விண்வெளி வீரர்கள் உறங்கும் போது தங்களுடைய இரு கண்களையும் கருப்பு பெல்டு போன்ற துணியால் இருக்கி மூடிக்கொள்ள வேண்டும்.

உறங்கும் போது காதுகளை பாதுகாக்க வேண்டும்
விண்வெளி வீரர்கள் பயணிக்கும் ஓடம் தொடர்ந்து 24 மணிநேரமும் இயங்க வேண்டும் மேலும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தயாரிக்க ஒரு இயந்திரமும், கழிவரை அசுத்தம், சுவாசிக்கும் காற்றில் கலந்துவிடாமல் கட்டுப்படுத்த ஒரு இயந்திரமும் தொடர்ந்து இடைவிடாது இயங்குவதால் விண்வெளி ஓடம் முழுவதும் எப்போதும் பேரிரைச்சலுடன் காணப்படும் இப்படிப்பட்ட சூழலில் விண்வெளி வீரர்களுக்கு உறக்கம் வராது எனவே இவர்கள் காதுகளை EARPLUGS என்ற ஒரு பொருளினால் மூடிக்கொள்கிறார்கள்.நம் வழக்கப்படி சொல்வதென்றால் காதை பஞ்சுகளால் அடைத்துக் கொள்கிறார்கள்.

உடல் கவசம் அணிந்து உறங்க வேண்டும்
புவி ஈர்ப்பு சக்தியின்மையால் உறங்கும் போது இவர்களுடைய உடல்கள் காற்றில் மிதந்து விண்வெளி ஓடத்தில் முட்டி சேதத்தை ஏற்படுத்திவிடும் இதனால் தூக்கத்தை கலைந்து விடுகிறது. எனவே இந்த நிலையை போக்கிக்கொள்ள விண்வெளி வீரர்கள் ஒருவிதமான படுக்கையை உபயோகிக்கிறார்கள் அந்த படுக்கையில் சில கயிறுகள் இருக்கும் அதை தங்களுடைய உடலில் கட்டிக்கொண்டு சீட் பெல்டுகளையும் பயன்படுத்த வேண்டும். விண்வெளி பைலட் உறங்க வேண்டுமெனில் அந்த மனிதருக்கென்று பிரத்தியோகமாக சுவரில் வடிவமைக்கப்பட்ட படுக்கை காணப்படும் அதில் அவர் தன்னை கயிறுகளால் இறுகக்கட்டிக் கொண்டு வாகனத்தை இயக்கியபடியே சுவற்றில் உறங்க வேண்டும்.

விண்வெளி பயணத்தில் எவ்வாறு உடல் சுத்தம் பேணுவது
பல் துலக்குது எப்படி?
புவி ஈர்ப்பு சக்தியின்மையால் தண்ணீர் மேலிருந்து கீழே விழுவதற்கு பதிலாக கீழிருந்து மேல்நோக்கி செல்கிறது. எனவே விண்வெளி பயணத்தின் போது வாய் கொப்பளிக்க இயலாது! மேலும் இவர்கள் பல் துலக்க பவுடர் (போன்ற ஒருவகையான டூத்பேஸ்டு-ஐ) உபயோகிக்கிறார்கள் பல் துலக்கியவுடன் அந்த பேஸ்டை முழுங்கிக்கொள்ள வேண்டும் அல்லது வாயினுள் துணியைக் செலுத்தி பற்களை துடைத்துக்கொள்ள வேண்டும்.

குளிப்பது முடிவெட்டுவது எப்படி?
விண்வெளி பயணத்தில் குளிக்க இயலாது!  SPONGE BATHS முறைப்படித்தான் உடலை சுத்தப்படுத்த இயலும் அதாவது இரண்டு டவல்களை எடுத்துக்கொண்டு ஒன்றை தண்ணீரில் நனைத்து உடலில் தடவுதல் மற்றொரு டவலைக் கொண்டு உடலின் அழுக்கை சுத்தப்படுத்துதல். முடிகளை சுத்தப்படுத்த நுரையில்லாத ஷாம்பு உபயோகிக்கிறார்கள். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கக்கூடிய வீரர்களின் தலைமுடிகளை சவரம் செய்யும் போது அந்த முடியைக் கூட காற்றை உறிஞ்சும் வாக்யும் கிளீனர்(vacuum cleaner)போன்ற இயந்திரத்தால் சேகரிக்கிறார்கள்.இல்லையெனில் அந்த வெட்டப்பட்ட தலை முடிகள் காற்றில் மிதந்துக்கொண்டே இருக்கும்!

மலஜலம் சுத்தம் செய்வது எப்படி?
விண்வெளி ஓடத்தில் மலஜலங்களை சுத்தம் செய்யும் அறை உள்ளது அந்த அறையில் கழிவறைக் கின்னம்(TOILET BOWL) மற்றும் சிறுநீர் புனல் (URINE FUNNEL) ஆகியன ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக உள்ளது.

விண்வெளி வீரர்கள் சிறுநீர் கழிப்பது சிக்கலானது!
நிலப்பரப்பில் சிறுநீர் கழிக்கும் போது அந்த நீர் கீழ்நோக்கி விழுகிறது ஆனால் விண்வெளி ஓடத்தில் ஈர்ப்பு சக்தி இல்லாததால் அந்த சிறுநீர் கீழிலிருந்து மேல்நோக்கி பரவிவிடும் எனவே விண்வெளி வீரர்கள் (URINE FUNNEL)ஒரு நீளமான குழாயை சிறுநீர் கழிக்க பயன்படுத்துகிறார்கள். சிறுநீர் கழிக்க நாடினால் சிறுநீரக உறுப்பின் மீது URINE FUNNEL என்ற குழாயின் வாய்ப்பகுதியை செலுத்த வேண்டும் பின்னர் கழிக்கப்படும் சிறுநீரை URINE FUNNEL-ல் உள்ள காற்று உறுஞ்சும் இயந்திரம் வெளியேறும் சிறுநீரை கசியவிடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டு கழிவரை தொட்டியில் சேமித்துவிடும்.

விண்வெளி ஓடத்திற்கு வெளியே எவ்வாறு நடப்பது! (சுய பயிற்சி)
விண்வெளி ஓடத்தின் உட்பகுதியில் இருக்கும் போது விண்வெளி வீரர்கள் சாதாரண உடையை அணியலாம் மாறாக விண்வெளி ஓடத்தை பழுதுபார்க்க அந்த ஓடத்திற்கு வெளியே நடக்க வேண்டியிருந்தால் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட SPACESUITS(விண்வெளி ஆடை)  என்ற உடையை அணியவேண்டும்!


இந்த SPACESUITS-ஐ அணியும் முன் கவனிக்க வேண்டியது என்ன!
இப்போது நீங்கள் விண்வெளி ஓடத்திற்கு வெளியே நடந்து ஓடத்தின் மேல் கூரைகளை பழுது பார்க்க ஆயத்தமாகி விட்டீர்கள். ஆனால் நீங்கள் விண்வெளி ஓடத்திற்கு உள்ளே சுவாசித்த ஆக்ஸிஜன் ஓடத்திற்கு வெளியே உள்ள விண்வெளியில் இருக்காது, எனவே விண்வெளி வீரர்கள் அணியக்கூடிய SPACESUITS  என்ற உடையிலிருந்துதான் ஆக்ஸிஜனை சுவாசிக்க வேண்டும்.

இந்த உடையை அணிவதற்கு முன் விண்வெளி வீரர்கள் ஒருவகையான சுவாச உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் உடலில் உள்ள நைட்ரஜன் குமிழிகள் இரத்தில் கலந்து மரணத்தை ஏற்படுத்திவிடும்.ஆம்! நாம் சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது பொதுவாக நாம் நன்றாக காற்றை சுவாசிக்கும் போது இந்த தனிமம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை மாறாக காற்றோட்டம் இல்லாத இடங்களில் நீங்கள் பயணித்தால் உங்களுக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டு அதன் மூலம் சுவாசித்த காற்றில் இருக்கும் நைட்ரஜன் நீர்க்குமிழிகள் போன்று வெளிப்பட்டு இரத்தத்தில் கலந்து மரணத்தை ஏற்படுத்திவிடும் எனவே விண்வெளியில் SPACESUITS  அணிவதற்கு முன் 2-20 நிமிட சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பின்னர் 10 நிமிடம் ஆக்ஸிஜன் குழாய்களில் சுத்தமான காற்றை நுகர வேண்டும், பின்னர் 10 நிமிட பயிற்சி மற்றும் 50 நிமிடங்கள் ஆக்ஸிஜன் குழாய்களில் சுத்தமான காற்றை நுகர வேண்டும் இதுபோன்ற இடைவிடாமல் சுவாசப் பயிற்சியும் சுத்தமான காற்றை நுகர்வதாலும் உடலில்  அணியக்கூடிய பாதுகாப்பு கவசமாகிய SPACESUITS விண்வெளியில் பத்திரமாக பாதுகாக்கும்.

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

வானத்தில் ஏறுபவன் நெஞ்சம் இறுகிச் சுருங்கும்படிச் செய்படுகிறது என்ற செய்தியை அல்லாஹ் நமக்கு கூறுவதன் மூலம் அவன்தான் உண்மையான இறைவன் மற்றவைகள் எல்லாம் கற்பனை என்றே தெளிவாக விளங்குகிறது.

அன்புச் சகோதரர்களே! இங்கு அல்லாஹ் கூறக்கூடிய செய்தி என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்

அல்லாஹ் சிலருக்கு நேர்வழி காட்ட நாடுகிறான் என்றும் அவ்வாறு அருள்பெற்ற அந்த மனிதருக்கு உண்மையை உள்ளவாறு உணர்ந்து பாவத்தை கைகழுவி இஸ்லாத்தில் முழுமையாக நுழையக்கூடிய மனப்பக்குவத்தை அல்லாஹ் அளிக்கிறான் என்று முதல் பகுதி கூறுகிறது இந்த பாக்கியம் பெற வேண்டுமெனில் நாம் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்ச வேண்டும்.

அதே நேரத்தில் அல்லாஹ் யாரை வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் என்று கூறப்பட்டுள்ளது எனவே அல்லாஹ்வை நாம் அஞ்சிக்கொள்வோமாக!

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் மீது பயம் இல்லாமல் ஒருவரையொருவர் குறை கூறி, புறம்பேசித் திரிகிறோம்  இப்படிப்பட்ட நம்மை அல்லாஹ் வழிகெடுக்க நாடி வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்துவிட்டால் நாம் மீண்டும் பழைய நிலைக்கு மீள இயலுமா? என்பதை சிந்திப்பீராக!

அல்லாஹ்வுக்கு பயந்துக்கொண்டு இனியாவது முஸ்லிம்களாகிய நாம் ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்து படைத்த இறைவனுக்காக சகோதரத்துவத்தை பேணுவோமாக!

சுதந்திர நாட்டில் ஒடுக்கப்பட்ட நம் சமுதாயத்தை நேர்வழியில் நடத்திச் செல்ல கடமைப்பட்டுள்ள நாம், ஷைத்தான் வகுத்துவைத்துள்ள மாயவலையில் சிக்கி தேவையற்ற வீண் தர்க்கங்களில் இனிமேலும் ஈடுபடாமல் நம்மை சுதாரித்துக் கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுப்போமாக!

அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுங்கள் அவனன்றி நமக்கு புகலிடம் கிடையாது முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம்களாக வாழுவோம், பிறமத கலாச்சாத்தை தவிர்த்து இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து முஸ்லிம்களாகவே மரணிப்போம்!

(இன்ஷா அல்லாஹ்)

குறிப்பு

மேற்கண்ட விண்வெளி பற்றிய அறிய தகவல்களை நாஸா விள்வெளி மையத்தின் இணையதளத்தை படித்து ஓரளவுக்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

     நன்றி :  http://gloriousquran.wordpress.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக