அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 2 ஏப்ரல், 2011

உலக வெப்பமயமாதல் (Global Warming)

இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். இங்கு உலக நாடுகள் என்பது எல்லா நாடுகளிலும் வசிக்கும் மக்களை.
"உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டும்...", "கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டுள்ளது...", "இந்த நூற்றாண்டிலோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ இந்த உலகம் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு விடும்!"
என்று இப்போது எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம், அதை எப்படி தடுப்பது என்று மாநாடுகளெல்லாம் போடுகிறோம். ஆனால் இந்த உலகம் வெப்பமயமாதல் நேற்று, இன்று தோன்றியதில்லை.இதன் வரலாறு 17,000 ஆண்டுகள் பழமையானது!
ஆம், 17,000 ஆண்டுகள் என்று சொல்லுவது சரியானதா? அல்லது அதற்க்கு முன்போ கூட உலக வெப்பநிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். முதன் முறையாக நிகழ்ந்த அந்த வெப்பநிலை உயர்வு இயற்கையானது. என்பது அறிவியலாளர்களின் கருத்து.

இதைப்பற்றி மேலும் அவர்கள் கூறும் பொது:

மனித நாகரிகம் தோன்ற இந்த வெப்ப நிலை உயர்வு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. முதன் முதலாக உலகின் வட மற்றும் தென் துருவங்களில் இருந்த பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகத்தொடங்கின. ஆங்காங்கே இருந்த ஏரிகளும், நீர்நிலைகளும், நதிகளாக மாறின.இதன் தொடர்ச்சியாக கோடான கோடி டன் பனிப்பாறைகளும் உருகி நதிகளாக ஓடி கடலில் கலந்து கடல் நீர்மட்டம் உயார்ந்தது.
கி.மு 10,000இல் அப்பிரிக்காவின் மத்தியிலுள்ள விக்டோரியா ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வழியத்தொடங்கியதில் பிரம்மாண்டமான நைல் நதி உருவானது.தென் அமெரிக்க வின் அமேசான் நதி தனக்குத்தானே வழி வகுத்துக்கொண்டது. தொடர்ந்து கிட்டத்தட்ட 3000௦௦ ஆண்டுகள் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகின. இதனால் பல பகுதிகள்
நீரினால் மூழ்கடிக்கப்பட்டன. அமெரிக்காவிற்கும் பிறநாடுகளுக்கும் இடையிலான தரை வழி தொடர்பு துண்டிக்கப்பட்டது இதனால்தான். அதே போல் கொரியவுடனும், சைபீரியவுடனும் ஒர்ட்டிக்கொண்டிருந்த ஜப்பான் இதனால் தான் தனித்து விடப்பட்டது. கி.மு 15000 ௦௦இல் தற்போதுள்ள மெரீனா கடற்க்கரை 600 கி.மீ கிழக்குப் புறமாக தள்ளி இருந்தது! என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? அண்மையில் குஜராத்தில் கடலுக்கடியில் 9 கி.மீ நீளத்தில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அன்றைய மனிதன் இதனையெல்லாம் கவனிக்கவில்லை. அப்படியே கவனித்திருந்தாலும் அதனால் ஏற்ப்படும் பாதிப்புகளை அவன் அனுமானித்திருக்க வாய்ப்பில்லை. இன்று நாம் ஏன் இப்படி இதைப்பற்றி அதிகமாக கவலைப்படுகிறோம் என்றால்?... அன்று 3000௦௦ ஆண்டுகள் தொடர்ந்து பனிக்கட்டி உருகியதால் ஏற்ப்பட்ட கடல் நீர் மட்ட உயர்வை விட இன்று ஒரு நூற்றாண்டில் ஏற்ப்படும் கடல் நீர் மட்ட உயர்வு அதிகம். தற்போது நாம் வெளியேற்றும்அதிகப்படியான கார்பன் மற்றும் அவற்றின் கூட்டுப்பொருள்களின் அளவினால் உலக வெப்பநிலை உயர்வு வேகமாகவும், அதிகமாகவும் நிகழ்ந்து வருகிறது.
ஆம்.20 ௦ம் நூற்றாண்டில் மட்டும் 17 செ.மீ கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 21 ம் நூற்றாண்டில் இது மேலும் 18-50 செ.மீ உயரும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. கடல் நீர் மட்டம் உயர்ந்த பொது ஏராளமான உயிரினங்கள் அழிந்து போயின. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து கடல் நீர் மட்ட உயர்வினால் அழிந்த உயிரினங்களில் மனித இனமும் ஒன்று. என்ற நிலை வரலாம். அல்லது மனிதன் தன் அசாத்தியமான அறிவுத்திறனால் புதிய உலகையே நிர்மாணிக்கலாம். ஆனால் அது வரையில் இப்போது இருக்கும் இடத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. அதற்கு அறிவியலாளர்கள் கூறும் வழிமுறைகளை நாம் பின்பற்றித்தானாகவேண்டும்.

புவியை காக்க இதோ சில வழிகள்:

தொழிற்சாலை, வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் கார்பன் மாசுக்களைக் கட்டுபடுத்த மரங்கள் அவசியம். எனவே, உலக அளவில் காடுகள் வளத்தைப் பெருக்குவதோடு 'வீட்டுக்கு 2 மரம் வளர்ப்போம்' என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் புங்கன், காட்டாமணக்கு, ஆமணக்கு போன்றவற்றின் மூலம் கிடைக்கும். பயோ டீசலை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.
நாம் அன்றாடம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். அவற்றை குறைக்க சூரிய மின் ஆலையை நிறுவுவதோடு ஒவ்வொரு தனி நபரும் சூரிய ஒளியை பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் பயன்படுத்தும் டியூப் லைட், பல்ப் இனிமேல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சி.எஃப்.எல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
வீடுகளிலும், ஆலைகளிலும் தேவைப்படும் எரிவாயுவிற்கு பதிலாக உயிரி எரிவாயுக்களைப்(Bio diesel) பயன்படுத்த வேண்டும். இவைகளில் மிகவும் முக்கியமானது நிலத்தடி நீர்வளத்தை காக்க வேண்டும். எனவே மழை நீர் சேகரிப்பு, கிணற்றின் ஊற்றுக் கண்களுக்கு போதிய நீர் வரும்படி செய்தல் போன்றவற்றால் எதிர்கால விவசாயத்தை காக்க முடியும் என்பதோடு எதிர்கால நீர்த் தேவையையும் சமாளிக்க முடியும்.
சிந்து சமவெளி நாகரிகத்தையும், இன்டஸ் பள்ளத்தாக்கு நாகரிகத்தையும் நாம் அறிய காரணம் அக்கால மனிதர்கள் விட்டு சென்ற அழகிய வேலைபாடுள்ள பானைகளும், ஆயுதங்களும் தான். ஆனால் நமக்கு பிறகு 3000 ஆண்டுகள் கழித்து யாராவது அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் கிடைப்பது வெறும் பாலித்தீன் பைகளாகத் தான் இருக்கும்.
ஏனெனில் மிகப்பெரும் கலைகளை போல பாலித்தீன் பைகளும் காலத்தால் அழியாதவை. அதோடு மழை நீரையும் மண்ணுக்குள் போக விடாமல் தடுப்பவை. இவைகளால் நீர், நிலம், காற்று என்ற 3 அடிப்படை கூறுகளுமே மாசுபடுகிறது. எனவே பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை விடுத்து சணல், துணி, காகித பைகளின் பயன்பாட்டைப் பெருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட வேளாண்மையை பாதுகாக்க போதுமான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வேளாண்மையில் இன்று நாம் அதிகளவில் பயன்படுத்தி வரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விட்டொழித்து இயற்கை உரங்களையும், மூலிகைச் சாறு பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். இதனால் நிலத்தின் வளம் பெருகுவதோடு எதிர்கால வேளாண்மையும் பிழைக்கும்.
அவ்வாறில்லாமல் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண்ணில் உயிர் வாழும் பல லட்சம், கோடி நுண்ணுயிர்கள் மடிகின்றன. மண்ணும் உயிரிழக்கிறது. இதனால் மண் வேளாண்மைக்கு சிறப்பாக உதவி செய்ய முடிவதில்லை.மேலும் வேளாண்மையில் உதவி செய்யும் புழு, பூச்சிகளின் ஆதிக்கமும், நோய்களின் ஆதிக்கமும் அதிகரிக்கிறது.
இதற்கு மேலும் மேலும் உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் வேளாண்மைச் செலவு அதிகரிப்பதோடு, விளைச்சலும் குறைகிறது. இதோடு நின்றுவிடாமல் விளைபொருட்களில் நச்சுக்கலந்தே இருக்கிறது. அதை உண்ணும் நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம். தேவைதானா இது?
புவி வெப்பமடைந்து வருவதற்கு இது மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொணடே போகலாம். ஆனால் இங்கே கூறியுள்ள அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாலே 90 சதவீதம் வரை புவி வெப்பமாதையும் கடல் மட்டம் உயருவதையும் தடுக்க முடியும்.
புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் பொறுப்பு அரசுகளுக்கு எந்தளவிற்கு உள்ளதோ அதே அளவு பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு.நாம் ஒன்று கூடி புவியை காத்தால், புவி நம்மை காக்கும்.

நன்றி : மணிகண்டன்பிரபு (gmp.info) &  சுகவி

கீழ்க்கண்டவைகளை வாசிக்க தலைப்புகளில் கிளிக் செய்யவும்

                                                      
                                                         
                          
  மழை






வானின் வர்ணம் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக