அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மணத்தக்காளி கீரை

தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தககாளியும் ஒன்று.
மணத்தக்காளியில் நிறைய உயிர்சத்துக்களும்,புரத சத்துக்களும், இரும்பு சத்தும் உண்டு. இந்த கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணிமணியாக காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் காயுடன் கீரையையும், பச்சை பருப்பயையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும், மூலச்சூட்டை தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
சித்த மருத்தவத்தில் குடல் புண்களை குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்து சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலேயே காமாலை நோய் குணமாகிவிடும்.
மணத்தக்காளி கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. ஆதலால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்டுத்துவது நல்லது.

பயன்கள் : அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
நன்றி : படுகை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக