அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-2

அஸ்ஸலாமு அலைக்கும், 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்
ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுடைய "The God Delusion" புத்தகத்தை பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். மிக பரபரப்பாய் விற்பனையான புத்தகம் அது. அதில், தன் புத்தகத்தின் முக்கிய புள்ளிகள் என்று சிலவற்றை 157-158 பக்கங்களில் குறிப்பிடுகிறார் அவர். அதில் என்னை ஆச்சர்யமூட்டியது பின்வரும் தகவல். 
"We should not give up the hope of a better explanation arising in physics, something as powerful as Darwinism is for biology"

அதாவது, அவர் என்ன சொல்லவருகிறாரென்றால், உயிரினங்கள் பூமியில் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்குவதற்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு இருக்கிறது (???), அதுபோல இந்த உலகம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியான விளக்கத்தை கண்டுபிடிப்பதில் நாம் சோர்ந்துவிடக்கூடாது என்பது.


சுருக்கமாக சொல்லப்போனால், இந்த பூமி எப்படி இவ்வளவு perfect ஆக வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியாக தெளிவான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அப்படி அது கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் அதிகமாக கடவுளை மறுக்கலாம் என்பது.             
             
இதை படித்தவுடன் மிகுந்த ஆச்சர்யம். நான் அவரிடம் (அதுமூலமாக நாத்திகர்களிடமும்) கேட்க விரும்புவது: 


"மிஸ்டர் டாகின்ஸ், 
  • இது உங்களுக்கு குருட்டு நம்பிக்கையாக (Blind Faith) தெரியவில்லை?
  • சரியான காரணங்கள் இல்லாமலேயே நீங்கள் கடவுளை மறுக்கிறீர்களா? 
  • உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவில்லாத போது அதை எப்படி நீங்கள் சரி என்று சொல்ல முடியும்? "       
புரியாதப் புதிர்தான்...

அதனால் தான் "டாகின்சுடைய இந்த புத்தகத்தால் ஒரு நாத்திகன் என்ற முறையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன்" என்று மைக்கல் ரூஸ் (Michael Ruse) கூறினார் போலும்...

"...unlike the new atheists, I take scholarship seriously. I have written that The God Delusion made me ashamed to be an atheist and I meant it. Trying to understand how God could need no cause, Christians claim that God exists necessarily. I have taken the effort to try to understand what that means. Dawkins and company are ignorant of such claims and positively contemptuous of those who even try to understand them, let alone believe them. Thus, like a first-year undergraduate, he can happily go around asking loudly, "What caused God?" as though he had made some momentous philosophical discovery.” --- Michael Ruse, Atheist Philosopher of Science. 

சும்மா சொல்லக்கூடாது, டாகின்சை நல்லா தான் கேட்டிருக்கிறார் ரூஸ்...

டாகின்ஸ் அவர்கள், நமக்கு பதில் சொல்லுவது இருக்கட்டும், ரூஸ் போன்ற அவரது சக தோழர்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்...       

இதையெல்லாம் விட, டாகின்ஸ், முடிவாக ஒரு பஞ்ச் வைத்திருக்கிறார் பாருங்கள்....

God Almost Certainly Does not Exist. 
கடவுள் ஏறக்குறைய நிச்சயமாக இல்லை

அடடா, கடவுள் இல்லை என்று உறுதியாக சொல்லாமல் ஏன் இப்படி மழுப்பலாக சொல்லியிருப்பார்?, ஒரு வேலை கடவுள் இருந்திட்டா என்ன பண்றது என்ற ஒரு safetyக்காக இருக்குமோ?.

என்னவென்று சொல்வது, இதைத் தான் தெளிவாக குழப்புவது என்று சொல்லுவார்களோ?  

புரியாதப் புதிர்தான்.   


இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் மேலும் பல புரியாதப் புதிர்களை எதிர்காலத்தில் எடுத்து வைக்க முயல்வோம். 

ஆக இந்த பதிவின் மூலம், நான் என் நாத்திக சகோதரர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்:

  • உங்களால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் (அது உண்மையாக இருந்தாலும் கூட) மூலம் கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாது. அல்லது டாகின்ஸ் சொன்னது போன்று இயற்பியல் ரீதியாகவும் கடவுளை மறுப்பதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது.
  • "கடவுள் இருந்தால் உலகில் அநியாயம் நடக்குமா?" என்பது போன்ற கேள்விகள் உளவியல்  (Psychological Question) ரீதியான கேள்விகள் தானே தவிர, அறிவியல் ரீதியாக இந்த கேள்விகள் ஒத்து வராது. இது போன்ற கேள்விகள் "கெட்ட கடவுள்" என்று சொல்லத்தான் வழி வகுக்குமே தவிர, கடவுள் இல்லை என்று மறுப்பதற்கு எந்த விதத்திலும் பயன்படாது.            

ஆக, கடவுளை மறுப்பதற்கு உங்களிடம் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் கிடையாது. அதே சமயம், ஒரு வேலை கடவுள் இருக்கலாமோ என்று ஒரு சதவிதம் சந்தேகம் வந்தாலும் அதைப் பற்றி ஆராய்வது தான் சிந்திப்பவர்களின் செயல். சொல்லவேண்டியது எங்கள் கடமை. மேற்கொண்டு ஆராய்வது உங்கள் கடமை,இஷ்டம். 

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளை பரவ விட்டிருப்பதிலும், காற்றுக்களை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன" --- குர்ஆன் 2:164.                       
   இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக