அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சுயமரியாதையும் யாசகமும்...!

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர் தனது சுய கவுரவத்தை இழந்து விடக்கூடாது.

ஆனால் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்யும் சிலர் அவர்களுடைய மானம் மரியாதைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அடுத்தவர்களிடம் கையேந்துகிறார்கள்.இஸ்லாம் இவர்களுடைய இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது.

இதே நேரம் அடுத்தவர்களுக்கு தர்மம் செய்பவர்களை தாராளமாக வழங்கும்படியும் சொல்கிறது.

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில் 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள்
நூல் புகாரி 1433.

நீ தர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக் கொள்ளாதே அவ்வாறு செய்தால் இறைவனின் கொடை உனக்கு வழங்கப் படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும் என்ற நபியவர்களின் வார்த்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் விஷயத்தில் நாம் கஞ்சத்தனம் படக்கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

அதே போல் அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் முடிந்து வைத்தால் ஏற்படும் பாவத்தையும் நபியவர்கள் எடுத்துரைத்தார்கள்.

கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் புகாரி1444 

ஆக கொடுப்பவர்கள் தாங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் விஷயத்தில் ஒருபோதும் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.

அதே போல் அதனை வாங்குபவர்களும் அதற்கு தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் உழைப்பிற்காக கையேந்துபவர்களாக இருக்கக் கூடாது.

இறைவன் ஸகாத் பெற தகுதியுள்ள கூட்டத்தாரைப் பற்றி தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

யாசிப்போருக்கும் ஏழைகளுக்கும் அதை வசூலிப்பவர்களுக்கும் உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கும் அடிமை(களை விடுதலை செய்வதற்)க்கும் கடன் பட்டோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும்.இது அல்லாஹ்வின் கடமை அல்லாஹ் அறிந்தவன் ஞானமிக்கவன்.(9:60)

மேற்கண்ட வசனத்தில் யாசிப்போரும் ஸகாத் பெற தகுதியுள்ளவர்கள் என இறைவன் குறிப்பிடுகிறான்.

யாசிப்போர் என்று மொழியாக்கம் செய்யப்பட்ட இடத்தில் இறைவன் பயன் படுத்தியுள்ள வார்த்தை புகரா என்பதாகும்.புகரா என்றால் எந்த வசதியும் இல்லாத ஆயினும் பிரரிடம் வாய் திறந்து கேட்க வெட்கப்படும் ஏழைகள் என்பது பொருளாகும்.

இதே நேரம் மிஸ்கீன்கள் என்றால் வெட்கத்தை விட்டு தனது தேவைக்காக மற்றவர்களிடம் கேட்கும் ஏழைகள் என்பது பொருளாகும்.

இந்த இரண்டு கூட்டத்திலும் உள்ளவர்கள் யார் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.இவர்கள் மற்றவர்களிடம் கையேந்துவது தங்களுக்கு லாபகரமாக இருக்கிறது என்பதற்காகத்தான் இப்படி வருகிறார்களே தவிர உண்மையில் இவர்கள் உடல் வலிமை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.இப்படிப் பட்டவர்களுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு நாம் நம்மையே ஏமாற்றிவிடக் கூடாது.அதே போல் இவர்களால் வாழ்க்கைச் செலவுக்கு பணமில்லாமல் கஷ்டப் படும் ஏழைகளும் பாதிக்கப் படுகிறார்கள்.

இப்படிப் பட்டவர்களை நாம் அனைவரும் அடையாளம் கண்டு கொள்வோமாக!

நன்றி : http://rasminmisc.blogspot.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக